மறைமலை நகராட்சியை கண்டித்து MLAவிடம் கோரிக்கை மனு…!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சிக்குட்பட்ட சப்டாங்குளம் ஊரில் சுமார் 60 வருடகாலமாக வசித்துவரும் மக்கள் குடி நீர் பயன்படுத்தும் குளத்தில் கழிவுநீர் கலந்துள்ளது. என பல வருட காலமாக அரசியல்வாதிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் விஷக்காய்ச்சல் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய் தாக்குகிறது என்று பல முறை நகராட்சியில் மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை….
