மறைமலை நகராட்சியை கண்டித்து MLAவிடம் கோரிக்கை மனு…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சிக்குட்பட்ட சப்டாங்குளம் ஊரில் சுமார் 60 வருடகாலமாக வசித்துவரும் மக்கள் குடி நீர் பயன்படுத்தும்  குளத்தில் கழிவுநீர் கலந்துள்ளது. என பல வருட காலமாக அரசியல்வாதிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் விஷக்காய்ச்சல் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய் தாக்குகிறது என்று பல முறை நகராட்சியில் மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை. நிரந்தர தீர்வும் ஏற்ப்படவில்லை இதற்கு நிரந்தர தீர்வு காண த.வெ.க. செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்த ஊர் பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், பொதுமக்கள் தகவல் தெரிவித்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், நக ராட்சி கமிஷனர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு உடனே வரவைத்து கோரிக்கை மனுவை ஊர் மக்கள் சார்பாக இருவரும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு இரண்டு நாட்களில் சரி செய்து கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். மேலும் குளத்தை  பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்
இந்த மனு மீது இரண்டு நாளில் தீர்வு காணப்படும் என்று  உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது மறைமலை நகர மன்ற செயலாளர் கோபி, மற்றும் நகராட்சி ஊழியர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
நமது சிறப்பு நிருபர்