அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் பழனிச்சாமி இவர் இதே பதவியில் ஒன்ற வருஷம் நீடித்தார் பின்பு திருவாரூருக்கு மாற்றப்பட்டு அங்கே ஒரு வருடம் பணியும் முடிந்த பின்பு இதே அரியலூருக்கு இதே பதவிக்கு வந்துள்ளார் இதற்கு ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்
இந்த 20 லட்சம் லஞ்சம் கொடுத்தவர் பெரம்பலூர் சாமி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் ஆவார் சாமி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளருக்குத் தொழில் ரீதியாக அனைத்து எலக்ட்ரிக்கல் ஒர்க் கையும் உங்களுக்கே தருவதாக உறுதிமொழி கொடுத்தார் பழனிச்சாமி பின்பு பணியிட மாற்றம் செய்து அரியலூர் பணியில் சேர்ந்ததும் அந்த 20 லட்சத்தை நாமம் போட்டு விட்டார், இதனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறு நின்றுவிட்டது.
இதே மாவட்டத்தில் 210 ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சிகளுக்கு இன்சுலேட்டர் வாங்கியதில் பெருமளவு ஊழல் செய்துள்ளார் அதாவது 3000 வருமானமுள்ள இன்சுலேட்டர் கருவியை 5000 கொடுத்து வாங்கியுள்ளார், இதற்கான டெண்டர் விடவில்லை மாறாக அரியலூர் செந்துறை திருமானூர் ஒன்றியத்திற்கு பவர் எலக்ட்ரானிக்ஸ் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உடையார்பாளையம் ஒன்றியத்திற்கு முருகன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாமி எலக்ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று எலக்ட்ரானிக் நிறுவனத்திற்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துப் பொருட்களை வாங்கி உள்ளார். ஆனால், இதற்கான ஒரிஜினல் பில் போடாமல் நகல் எடுத்து இதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் பெரிய தொகையைப் பார்த்த பழனிச்சாமிக்கு வழங்கியுள்ளார்கள். இந்த மோசடிகுறித்து நமது இதழில் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டோம்.
பணம் கொடுத்து வாங்கப்பட்ட இன்சுலேட்டர்களை பொருத்தாமல் அப்படி அப்படியே அனாதையாக ஒவ்வொரு ஊராட்சியிலும் தூக்கிப் போட்டு விட்டார்கள் என்பது வருத் தமான விடயமாகும். செந்துறை ஒன்றியத்திலேயே வெள்ள நிவாரண நேரத்தில் பணி புரியாத ஒரு வட்டார வளர்ச்சி அலுவலருக்குப் பழனிச்சாமி உதவி இயக்குனர் 12 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண சேதம் என்று பொய் பட்டியல் தயாரித்து பங்கு போட்டுக் கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளார்.
எடுத்துள்ளதை நான் நிரூபிக்கத் தயாராக உள்ளேன் அதே நேரத்தில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை மிரட்டித் துன்புறுத்தி வங்கிமூலம் கூகுள் ப்பே மூலம் பணம் அனுப்ப சொல்லித் தொகையைப் பெற்றுள்ளார் பழனிச்சாமி. இந்தப் பணத்தை திருப்பி வழங்கப் பல குளறுபடிகள் ஏற்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் அதி பயங்கர திட்டம் வீட்டில் உள்ள பழனிச்சாமி. பெரம்பலூர் துறை மங்கலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சர் ஆ ராசாவுக்கு நெருக்கமானவர் என்று தெரிய வருகிறது.
நமது சிறப்பு நிருபர்
