பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் கடந்த மாதம் தான் பயிர் செய்யும் வயலுக்கு உரம் போடச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக அருகே உள்ள முத்துசாமி செல்லம்மாள் நிலத்திற்கு சென்றுள்ளார் அவர்கள் வயலில் அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தது தெரியாமல் அதில் சிக்கிய அசோகன் அங்கே மயக்கமடைந்து கிடந்துள்ளதாக அவரைத் தேடிச் சென்ற உறவினர்கள் கூறினர்.
இந்த நிலையில் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் அனுமதித்துள்ளனர் அங்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அசோகன் சுயநினைவு இழந்துள்ளதாகவும், அவருக்கு மருத்துவம் அளித்தும் எந்தப் பயனும் இல்லையெனத் தெரிவித்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்நிலையில் மின்வேலியில் அடிபட்டு அசோகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதாகவும் அவருக்கு நீதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் புகார் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், முறை தவறி மின்வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று சுமார் மூன்று அரசுப் பேருந்துகளை மறித்துப் போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த மங்களமேடு போலிசார் மற்றும் மங்களமேடு துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தி ஆகிய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சு வார்த்தையில் உடன்படாததால் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆனந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைத் தரத் தரவென்று இழுத்துச்
சென்றர். சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்தது சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆனந்தி சம்பந்தப்பட்ட எதிரிமீது வழக்குப் பதிவு செய்வதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சசம் பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது.
