நடிகர்களை வைத்து நாடாள துடிக்கிறது திமுக

தமிழக அரசியல் என்பது சினிமாக்காரன் கையில் உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகள் கூறுகிறது.
திரைத்துறையில் இருந்து வந்த முதல்வரான பிற மொழியாளர்கள் அண்ணாதுரை கருணாநிதி இவர்கள் இருவரும் உறவினர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரிசு உதயநிதி இவர்களெல்லாம் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்.
இந்த பார்முலாவை கையில் எடுத்தவர் விஜயகாந்த் கமலஹாசன் தற்போது ஜோசப் விஜய் அடுத்தது சிவகார்த்திகேயன் இவரை திமுக உருவாக்குகிறது.
 விஜயகாந்த் தனியாக நிற்கும் வரை திமுக அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என்ற அஸ்திவாரத்தை உடைத்தவர் ஜெயலலிதா எப்படியாவது விஜயகாந்தை கூட்டணி வைத்து முதல்வராக வேண்டும் என்று திட்டம் தீட்டி அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.
இதோடு விஜயகாந்தின் கதையும் முடித்தவர் ஜெயலலிதா இதற்கு திமுகவும் உறுதுணையாக இருந்து செயல்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பலிகடாக்கப்பட்டவர் விஜயகாந்த் இன்று அவர் கட்சி எங்கே சென்றுள்ளது கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது.
இதை திமுக சரியாகப் புரிந்து கொண்டது உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகன் அரசியல் கட்சி துவங்க வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் இதன் மூலம் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் மற்றும் பொதுமக்கள் ஓட்டுகள் அனைத்தையும் அந்த நடிகன் கட்சி கைப்பற்ற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வரும் அதிமுக ஆட்சிக்கு வராது என்று மிகத் தெளிவான திட்டத்தை திமுக தயாரித்தது இதன் அடிப்படையில் தான் திரைப்படம் நடித்துக் கொண்டிருந்த கமலஹாசன் அவர்களை அழைத்து வந்து தாங்கள் தனிக்கட்சி தொடங்குங்கள் என்று அனைத்து உதவிகளையும் செய்து இதன்படி கமலஹாசன் மக்கள் நீதிமன்றம் என்ற கட்சியை துவங்கி தொலைக்காட்சி பெட்டியை உடைத்த கதை உங்களுக்கு தெரியுமா  2021 ஆம் ஆண்டு ஒரு தேர்தலை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியை வாக்கு வங்கியை விட அதிகமாக வாக்கு வங்கியை பெற்றார் இதோடு இவர் கதை முடிந்தது திமுகவின் திட்டம் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்கிறது இப்போது நடிகர் கமலஹாசன் துவங்கிய மக்கள் நீதி மையம் திமுக கட்சியில் ஐக்கியமாகிவிட்டது .
தற்போது உச்சகட்ட நடிகரான ஜோசப் விஜய், உதயநிதியின் நெருங்கிய நண்பர் இதை யாராலும் மறுக்க முடியாது ஆனால் இவரை கொம்பு சீவி தேர்தல்களில் இறக்கி விட்டது திமுக கட்சி இதன் பின்னரே கட்சியை பதிவு செய்து அரசியலில் மீண்டும் சினிமா கவர்ச்சியை கொண்டு வந்துள்ளார்.
ஜோசப் விஜய்க்கு திமுக கொடுத்த திட்டம் என்ன தெரியுமா ஒன்று நாம் தமிழர் கட்சியை ஓட்டு வங்கியை உடைக்க வேண்டும் இரண்டு திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் எந்த காரணத்தைக் கொண்டும் அதிமுகவிற்கு செல்லக்கூடாது. மூன்று திமுக விற்கும்  தமிழக வெற்றி கழகத்திற்கும் நேரடி போட்டி என்று பேச வேண்டும் நாங்கள் திமுக அப்படி தான் பேசுவோம்.
உங்கள் மீது வழக்கு தொடர்வோம் நீங்கள் எங்களை வசப்படுங்கள் நாங்கள் உங்களை வசப்படுகிறோம் எக்காரணத்தைக் கொண்டும் இந்த விடயம் வெளியே வரக்கூடாது என்பதுதான் இதன் நோக்கம்.
இதற்காகவே தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை பதவியை காலி செய்தது திமுக இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியில் திமுகவின் ஆதரவாளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் தமிழக வெற்றிக்கழகம் இருக்காது திமுக ஐக்கியமாகிவிடும் இல்லையென்றால் அரசியல் விட்டு சோசியல் விஜய் ஒதுங்கி விடுவார் திமுகவே கதையை முடித்தாலும் முடித்துவிடும். இரண்டாவது தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் இருந்தால் அது உதயநிதியை பாதிக்கும் என்ற திமுகவின் திட்டம்.
2031 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு நடிகரை அரசியல் களத்தில் இறக்க இப்பொழுதே ஒத்திகை பார்க்கிறது திமுக, அவர் யார்? அந்த நடிகர் யார்? நடிகர் சிவகார்த்திகேயன் இவர் கருணாநிதியினத்தார் இவரை தனிக்கட்சி துவங்கி விஜய் பாணியில் திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று கொம்பு சீறி வருகிறது.
எப்படியோ நாம் தமிழர் கட்சி ஓட்டு வங்கி சதவீதத்தை தமிழக வெற்றி கழகத்தால் குறைந்து விடும் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறைந்துவிடும் இது தேர்தலுக்கு பின்பு நடைபெறும்.
மக்களே ஒன்று மட்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன் சினிமாக்காரனை நம்பி போகாதீர்கள் இவன் வந்தான் நல்லது செய்வானா? அவன் வந்தா நல்லது செய்வானா என்று இயங்கும் என் இளைஞர்களே ஏன் அடுத்தவனை நம்ப வேண்டும் ஏன் குறிப்பாக சினிமாக்காரனை நம்ப வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள் நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.
நன்றி வணக்கம்