S.R.M. Packiri Rajan vs Inspector General of Registration & Others வழக்கு எண் W.P (MD) No.10177 of 2021 datet 17-06-2021Madurai Bench of Madras High Court முக்கியமான சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளது.
போலி ஆவணம் பதிவு – Encumbrance Certificate (EC) பற்றி உயர்நீதிமன்ற தீர்ப்பு
1. வழக்கின் பின்னணி
மனுதாரர் தனது சொத்தை 22.02.1980 Partition Deed மூலம் பெற்றதாக கூறினார். பின்னர் 5வது பதிலாளி ஒருவர் போலி பட்டா (Forged Patta) பயன்படுத்தி அந்த சொத்துக்கு Sale Deed பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பதிவு Sub-Registrar அலுவலகத்தில் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
2. பதிவுத்துறையில் நடந்த நடவடிக்கை
மனுதாரர் புகார் அளித்ததால் Registration Department விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த பதிவு Fraudulent Transaction என்று கண்டறியப்பட்டது. அதாவது அந்த ஆவணம் போலி ஆவணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
3. பதிவுத்துறை கூறிய நிலை
பதிவுத்துறை கூறியது: பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை Fraudulent document ரத்து செய்ய அதிகாரம் இல்லை. அதனால் அந்த ஆவணத்தை ரத்து செய்ய Civil Court-க்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.
4. உயர்நீதிமன்றத்தின் முக்கிய சட்ட கருத்து
உயர்நீதிமன்றம் கூறியது: Fraudulent document சட்டத்தில் செல்லாது ஒரு ஆவணம் Fraudulent Transaction என்று அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்த ஆவணம் சட்டப்படி செல்லாதது (Void / Non-est) ஆகிவிடும். Civil Court செல்ல வேண்டிய அவசியம் இல்லை Fraud என்று நிரூபிக்கப்பட்ட பிறகு அந்த ஆவணத்தை ரத்து செய்ய மீண்டும் Civil Court செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
Encumbrance Certificate (EC)-ல் பதிவு செய்ய வேண்டும் திக்ஷீணீuபீ என்று நிரூபிக்கப்பட்ட தகவலை Encumbrance Certificate-ல் பதிவு செய்ய வேண்டும்.
EC-ல் அந்த EC-™ Fraud entry சேர்க்கப்பட்டால் முன்பு செய் யப்பட்ட தவறான பதிவு தானாகவே செயலிழக்கும்.
உண்மையான சொத்து உரிமையாளருக்கு பாதுகாப்பு பதிவு செய்தால்: மூன்றாம் நபர்கள் ஏமாறாமல் இருப்பார்கள் உண்மையான சொத்து உரிமையாளர் தனது சொத்தை சுதந்திரமாக பயன்படுத்த முடியும்.
5 நீதிமன்ற இறுதி உத்தரவு
உயர்நீதிமன்றம்: மாவட்ட பதிவாளர் வழங்கிய மறுப்பு உத்தரவை **ரத்து செய்தது என்று அறிவிக்கப்பட்ட தகவலை Encumbrance Certificate-ல் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் சட்ட முக்கியத்துவம்
இந்த தீர்ப்பு கூறுவது: போலி ஆவணம் பதிவு செய்யப்பட்டாலும் அதிகாரிகள் விசாரணை செய்து Fraud என்று அறிவிக்கலாம்.
அதன் பிறகு அந்த தகவல் Encumbrance Certificate-ல் பதிவு செய்ய வேண்டும்.
நமது சிறப்பு நிருபர்
