விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல்

ஈஅடிச்சான் அரசியல்” என்பது, அரசியல் களத்தில் சொந்தமாக எந்த ஒரு சித் தாந்தமும், தொலைநோக்குப் பார்வையும், செயல்திட்டமும் இல்லாமல், மற்ற கட்சிகளோ அல்லது தலைவர்களோ செய்வதை அப்படியே காப்பியடித்தும் அல்லது திருடியும் மக்கள் முன் தனக்கொரு போலி பிம்பத்தை கட்டியமைப்பதாகும். ஆடை, பாவனை எனத் தொடங்கி ஒவ்வொரு சொல்லிலும்கூட விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல் செதுக்கப்பட்டு வருகின்றது. விசில் அடிச்சான் குஞ்சுகளின் ஈ அடிச்சான் அரசியல்கள் சில. தங்களுக்கு என்று ஒரு நிலையான அரசியல் சித்தாந்தம் இல்லாமல், எந்தச் சூழலில் எது ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அல்லது எது வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று மற்றவர்கள் நினைக்கிறார்களோ, அதையே பின்பற்றுவது.
ஒரு கட்சி தேர்தல் அறிக்கையில் ஒரு கவர்ச்சி கரமான இலவசத் திட்டத்தையோ அல்லது வாக்குறு தியையோ அறிவித்தால், அதன் பொருளாதார சாத்தியக்கூறுகளை ஆராயாமல் தாங்களும் அதே போன்ற அல்லது அதைவிட சற்று கூடுதலான இலவச திட்டத்தை அறிவிப்பது. ஒரு கட்சி நடத்தும் போராட்ட வடிவத்தையோ, பிரச்சார உத்திகளையோ சொந்தமாக சிந்திக்காமல் அப்படியே காப்பியடிப்பது.  மக்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை களத்தில் இறங்கி ஆராயாமல், ஆளுங் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ எந்தப் பிரச்ச னையை கையில் எடுக்கிறார்களோ, அதையே தாங்களும் கண்மூடித்தனமாகப் பேசுவது.
இவற்றைப் பற்றிப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். இத்தகைய “ஈ அடிச்சான்” அரசியல் உத்திகள் ஒரு கட்சிக்குத் தற்காலிகமாக ஊடக கவனத்தைப் பெற்றுத் தரலாம்.
ஆனால், நீண்டகால அடிப்படையில் மக்கள் மத்தியில் அந்த குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவரின் மீதான நம்பகத்தன்மையைக் (சிக்ஷீமீபீவீதீவீறீவீtஹ்) குறைத்துவிடும். மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, அதற்கேற்ப தனித்துவமான கொள்கைகளுடனும் திட்டங்களுடனும் செயல்படும் அரசியலே மக்கள் மத்தியில் நீடித்து நிற்கும்.
    நமது சிறப்பு நிருபர்