200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில அளவை கொள்கை-06

முழுமையான நில கணக்கெடுப்பு மற்றும் நில பாதுகாப்பு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், நிலங் கள் மற்றும் விவசாயப் பகுதிகள் குறித்து, கடந்த இருநூறு ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் விரிவான நில கணக்கெடுப்பு மேற் கொள்ளப்படும்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப் பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போலவே, நிலவளங்களின் துல்லியமான கணக் கெடுப்பும் மிக முக்கியமானதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
கணக்கெடுப்பின் நோக்கங்கள்
நில வளங்களின் முழுமையான புள்ளிவிவரம்
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நில அளவு, பயன்பாடு மற்றும் உரிமை விவரங்கள் தொகுக்கப்படும். பின்வரும் நில வகைகள் குறித்து துல்லியமான கணக்கெடுப்பு செய் யப்படும்:
* பஞ்சமி நிலம்
* அரசு புறம்போக்கு நிலம்
* கோயில் நிலம்
* வக்பு வாரிய நிலம்
* தேவாலய நிலம்
பிற மொழியாளர்கள் நிலம் தமிழர் நிலம் தெரியவரும்
2. உரிமை சீரமைப்பு கணக்கெடுப்பின் அடிப் படையில், உரிய உரிமையாளர்களுக்கு நிலங்கள் மீள வழங்கப்படும். நில எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, உரிமை சிக்கல்கள் தீர்க்கப்படும்.
3. விவசாய நில பாதுகாப்பு
முந்தைய காலங்களில் இருந்த விவசாய நில அளவு மற்றும் தற்போதைய நில அளவு ஒப்பீடு செய்யப்படும். விவ சாய நிலங்கள் வீட்டு மனைகள், தொழிற்சாலைகள், தொழில் வளாகங்கள் போன்றவையாக மாற்றப்பட்ட அளவு கணக்கிடப்படும். விவசாய நிலங்களை பாதுகாக்க தேவை யான சட்டங்கள் கொண்டு வரப்படும்.
4. எல்லைப்பகுதி பாதுகாப்பு நடவடிக்கை
மாநில எல்லைகளில் இருந்து 20 கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் நிலம் மற்றும் வீடு வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் மூலம் எல்லைப்பகுதி நிலங்கள் பாதுகாக்கப்படும். எல்லையில் இருந்து 25 கிலோமீட்டர் வரை பிற மொழியாளர்கள் நிலம் வாங்குவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்
5. சமூக அடிப்படையிலான நிலப் பகிர்வு ஆய்வு
பாரம்பரிய குடிமக்கள் மற்றும் பிற குடியேறியவர்களிடையே நில உரிமை விநியோகம் குறித்து புள்ளிவிவரம் தயாரிக்கப்படும்.
இதன் மூலம் நில சமநிலை மற்றும் நில பாது காப்பு குறித்து தேவையான கொள்கைகள் வகுக்கப்படும்.
6. எதிர்கால பாதுகாப்பு
நில வளங்கள் கட்டுப் பாடின்றி மாற்றப் படுவது தடுக்கப்படும். தமிழ்நாட்டின் நில வளங்களும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
எதிர்கால தலைமுறைகளுக்கு நிலம் மற்றும் வாழ்விடம் உறுதி செய்யப்படும்.எங்கள் உறுதி
நிலம் என்பது ஒரு மாநிலத்தின் உயிர்.
அதை பாதுகாப்பது மக்கள் மற்றும் அரசின் கடமை.
“நிலம் காப்போம் – வாழ்வு காப்போம்”