நாகர்கோயிலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார் டெல்லியில் அவருக்கு ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது அந்தத் தேநீர் விருந்துக்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? அப்போது இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு அனுமந்தப்பா அவர்கள்!
அனுமந்தப்பா அவர்கள் காமராஜரினுடைய அரசியல் ஆழத்தை சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ ஒரு கேள்வி கேட்டார் Mr Kamaraj now a days in India unemployment problem is very heavy has a President of the Congress party have you got any ideas for solving the unemployment problem? என்று ஆங்கிலத்தில் கேட்டார்
திரு காமராஜ் அவர்களே நீங்கள் கட்சியினுடைய தலைவர் நமது நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க நீங்கள் ஏதேனும் யோசனை வைத்திருக்கிறீர்களா? என்று ஆங்கிலத்தில் கேட்க உடனேயே, வில்லிலிருந்து புறப்படும் அம்பினை போலக் காமராஜர் ஒரு பதில் கூறினார் Very easy என்று காமராஜர் கூறினார் அதைக் கேட்ட அனுமந்தப்பா அரண்டு போனார் Very easy என்று கூறுகிறீர்களே எப்படி என்று அனுமந்தப்பா கேட்டார் அதற்கு ஐயா காமராஜர் அவர்கள் பதில் சொன்னார்
We must arrange to form a road from Kashmir to Kanyakumari touching all the states by which every inner part of our country will be able to transport the products to other needing place when the trade increases employment opportunity will also be increase என்று பதில் சொன்னார் காமராஜர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் ஒரு பெரிய சாலையைப் போடுங்கள் எல்லா பொருட்களையும் வியாபாரம் செய்கின்றவர்கள் இங்கிருந்து அங்குக் கொண்டு சென்று விற்பதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் வசதியாக இருக்கும் வியாபாரம் பெருகும்போது அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார் பெருந்தலைவர் காமராஜர் இந்தப் பதிலைக் கேட்ட உடனேயே
Mr Kamarajar your must be the prime minister I must be your PA என்று பதில் சொன்னாராம் அனுமந்தப்பா.
