சமீபத்தில் நடைபெற்ற புகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை இதற்காகச் சில பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெற்றுள்ளது தேர்தலை அறிவிக்க 48 மணி நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அவரவர் கணக்கில் இலவசமாக அன்புக்கு வைக்கப்பட்டுள்ளது ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும்.
அதாவது ஆசையைத் தூண்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் இதற்குத் தேர்தல் ஆணையமும் உடந்தை, 40 ஆயிரம் கோடி உலக வங்கியில் தேர்தலுக்காகக் கடன் வாங்கி உள்ளது மாநிலம் எதற்குத் தான் கடன் வாங்க வேண்டும் என்று ஒரு வரையறை இல்லாமல் போய்விட்டது உலக வங்கியும் எதற்குக் கடன் கொடுக்க வேண்டும் என்பது ஒரு விதி இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அப்போது தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குத் திமுக தயார் ஆகி வருகிறது, இங்கேயும் இதே பார்முலா தான் பிகாரில் நடந்த அதே ஃபார்முலா தான் சில சில மாடிஃபிகேஷன்களை செய்யும் திமுக அரசு ஏற்கனவே பெண்களுக்கு மாத மாதம் ஆயிரம் வழங்குவதாக ஒரு திட்டம் உள்ளது. இவர்கள் அனைத்து பெண்களின் தொலைபேசி எண்களையும் சேகரித்து வைத்துள்ளனர் அதனைச் செல்போன்களில் கூகுள் பே மூலம் பணம் சேர்த்து அனுப்பி விடுவார்கள் எப்படி பார்த்தாலும் பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் மானியம் வழங்குவார்கள் தேர்தலுக்கு ஐயாயிரம் வழங்குவார்கள் திருப்திப்படுத்தி விடுவார்கள் நிச்சயம் இது நடக்கும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கும் ஏனென்றால் திமுக அரசு முதல்வர் ஸ்டாலினுக்கும் பாஜக அரசு மோடிக்கும் நல்ல உறவு உள்ளது.
இதற்குப் பாலமாக அமைந்தவர் யார் என்றால் சந்திரபாபு நாயுடு 10,000 வைத்துக் குடும்பம் நடத்த முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள் மக்களே! படிக்காத மக்கள் சதவிகிதம் தான் அதிகம் அதனால் பலியாடாகி விட்டார்கள், தமிழ்நாட்டில் அப்படி கிடையாது புரிந்து கொள்ளுங்கள் மக்களே!
பீகார் தேர்தல் ரூ10,000 விலை போன பெண்கள் தமிழ்நாட்டில் இதை செய்ய திமுக தயாராகிறது!
