அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் வேப்பூர் BDO அறிவழகனின் சுருட்டலோ சுருட்டல்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் வாதிகளை விட அதிகாரிகளும் தங்கள் இஷ்டம் போல் அரசு பணத்தை சுருட்டி வருகிறார்கள். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கண்டும் காணாமல் இருப்பதால் அது பல அதிகாரிகளுக்குச் சாதகமாக முடிகிறது. அண்மையில் வேப்பூர் ஒன்றியத்தில் ஒரு அதிகாரி  பல லட்ச ரூபாய் சுருட்டிய சுருட்டல்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சில மாதங்களுக்கு முன்பு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் “உங்களுடன் ஸ்டாலின்” என்கின்ற சிறப்பு முகாமிற்கு வைக்கப்பட்ட விளம்பர பேனர் மற்றும் முகாமுக்கு வரும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்குச் சாப்பாடு, டீ, வடை போன்றவற்றை வாங்கித் தந்ததற்காகவும், முகாமிற்கு வருபவர்களுக்கு அமர்வதற்கு சாமியானா பந்தல் போட்டதற்காக ஒரு முகாமிற்கு தலா 2 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாகக் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த அறிவழகன் என்பவரால் கணக்கு காட்டப்பட்டது.
மேலும் ஒவ்வொரு ஊராட்சி அலுவலகம் முன்பு நான்கு ஆண்டுச் சாதனையென விளம்பர பேனர் வைக்கப்பட்டது. ஒரு பேனருக்கு ஐந்து ஆயிரம் செலவு செய்தாலே போதும், ஆனால் 30 ஆயிரம் எனக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் முறைகேட்டின் அடிப்படையின் காரணமாகக் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த அறிவழகன் அதே ஒன்றியத்தில் பணி இறக்கம் செய்யப்பட்டாராம். அந்த உத்தரவு வருவதற்கு முன்னரே கிராம ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை விடுவிப்புக்கு கையெழுத்து ஆகிவிட்டதாம். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரை சென்றதின் அடிப்படையில் மாவட்ட தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விசாரணை நடத்திய அதிகாரிகளே ஆடிப் போய்விட்டார்களாம். “உங்களுடன் ஸ்டாலின்” என்கின்ற முகாம்மூலம் அறிவழகன் ஆட்டையை போட்டது பல லட்சம் என்பதுதான் காரணம் என்கிறார்கள்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளரிடம் கேட்டபோது வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் முறைகேடுகள் நடந்ததாக வந்த தகவல் அடிப்படையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சிகளிலும் ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்க பணத்தை  ஆட்டையை போட்ட அறிவழகன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டதால் ஒருவேளை இவர்களுக்குள் டீலிங் முடிந்திருக்குமோ எனச் சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.
BDO அறிவழகன் வேப்பந்தட்டையில் பணிபுரிந்தபோது கோடிக்கணக்கான பணத்தை ஆட்டையை போட்டதும், இவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததும் தனக்கு வேண்டப்பட்ட அமைச்சர் சிவசங்கரின் பெயரைப் பயன்படுத்தி தப்பித்து வந்து விட்டதாகவும் தற்போது வேப்பூர் ஒன்றியத்தில் நடந்த ஊழலையும் அமைச்சர் சிவசங்கரன் மூலம் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள் என்று உடன்பிறப்புகளே புலம்பிக்கொண்டு வருகிறார்களாம். இவர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தபோது அகரம் சீகூரில் அதிமுக பிரமுகரான க்ஷிநிவி (வெங்கடாசலம்) என்பவர் வீட்டுமனை பிளாட் போட்டு இருந்தார்.
அதற்கு ஒப்புதல் தருவதற்காக 5 லட்சம் ரூபாய் அறிவழகன் வாங்கியதாகவும் இவர்மீது வந்த குற்றச்சாட்டு அடிப்படையில் பதிவிறக்கம் செய்யப்பட்டபோது அந்த இடத்திற்கு  BDO சங்கீதா என்பவர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக வந்ததற்கு அவருக்கு 10 லட்சத்துக்கும் மேல் க்ஷிநிவிடம் BDO சங்கீதா ஆட்டையை போட்டதாகவும், ஏற்கனவே அறிவழகன் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கொடு என்று VG டம் நச்சரிப்பதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
வருகின்ற குன்னம் சட்டமன்றத் தேர்தலில் சிவசங்கரன் திமுக சார்பில் வேட்பாளராக மீண்டும் களம் இறக்கப்படுவாரெனச் சொல்லப்படும் நிலையில் வேப்பூர் ஒன்றியத்தில் அவருடைய உறவினரான BDO அறிவழகன் பண்ணும் அலப்பறைக்கு கொஞ்ச நஞ்சம் இல்லையாம். இதனுடைய எதிரொஷ்ஷ்ளிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெரியும் என்கிறார்கள்.
நமது சிறப்பு நிருபர்