தமிழக அரசியல் வரலாற்றில் இஸ்லாமியர்களை வளைத்து தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டது திமுக திமுகவை விட்டு இஸ்லாமியர்கள் ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்கு போட மாட்டார்கள் இது உண்மையாகும் இதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று அனைத்துக் கட்சியிலும் முஸ்லிம் சகோதரர்கள் பயணிக்கலாம் ஆனால் தேர்தல் என்று வந்து விட்டார் திமுகவுக்கு தான் வாக்களி ப்பார்கள் இது எப்படி என்று கீழே பாருங்கள் உங்களுக்கு புரியும்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இஸ்லாமி யர்களுக்கு அளவற்ற சலுகைகளை வழங்கி வருகிறது இது முழுக்க முழுக்க திமுகவின் உள்ளடி வேலை. அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதாவது தமிழகத்தில் பெரும் வாரியான மக்கள் செலுத்திய வரிப்பணத்தை எடுத்து சிறுபான்மையினர் மக்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக நிதியை தாரை வாழ்கிறது திமுக அரசு.
இந்த கட்டுரையின் மூலம் இஸ்லாமியர்கள் எங்கள் எதிரிகள் இல்லை அவர்களும் பூர்வீக தமிழர் குடிகள் பிற மொழியாளர்கள் (திராவிடம்)ஆளுவதற்கு இவர்கள் தொடர்ந்து ஆதரவளிக்கு வருகிறார்கள் இதை தான் நாங்கள் நிறுத்த வேண்டும் என்கிறோம்.
இதே போல் பல கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு வாக்கு வங்கியை பெறுவதற்கு பல வேலைகள் செய்கிறது, ஆனால் இஸ்லாமியர்களிடமிருந்து ஒரு வாக்குகளை கூட மற்ற கட்சிகள் பெற முடியாது என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.
திமுக விற்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன உறவு என்பதைத் தாண்டி என்னென்ன சலுகைகளை வழங்கியுள்ளார்கள் என்பதை கீழே நாம் பார்க்க வேண்டும்.
28-.01.-2026 தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு.
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பல்லாண்டு காலமாக மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடுகளை நடத்தி, இஸ்லாமிய சமுதாயத்தின் இயற்கையான அமைப்புகள் மஸ்ஜிதுகளை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத்துகளே என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.
அனைத்து ஊர்களிலும் மஹல்லா ஜமா அத்துக்களை கட்டமைப்புடன் வைக்க வேண்டும். பைத்துல் மால், ஷரீயத் சமரச மையம், ஓராசிரியர் பள்ளிக்கூடம் உருவாக்கி முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்துகளாக உருவாக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். சிறந்த ஜமாஅத்துகளை கண்டறிந்து முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் என்ற விருதை மாநாடுகளில் வழங்கி வருகின்றோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் சார்பில் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு 28-/01/-2026 புதன்கிழமை மாலை 4 மணிளயவில் திருச்சி – கும்பகோணம் நெடுஞ்சாலையில், சுவாமி மலை பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது . இம் மாநாட்டில் தி.மு.க கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார் இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள 7000-க்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பை வலுப்படுத்திடும் திட்டங்கள் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்திய முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினை குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையை தெளிவுப்படுத்தும் மாநாடாகவும் அமைந்தது
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இஸ்லாமியத்தின் உறவை திமுகவிடமிருந்து
பிரிக்க முடியாது!!
கடந்த அறுபது ஆண்டு காலமாக திமுகவும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள், பொதுமக்கள் என்று அனைவரும் திமுக தலைவர் கருணாநிதி முதல் தற்போது ஸ்டாலின் வரை ஏன் நாளைய தலைவர் உதயநிதி வரை அன்பை பெற்றவர்கள்.
இஸ்லாமியருக்கு எண்ணற்ற உதவிகளை செய்தவர் கருணாநிதி, செய்து கொண்டு இருப்பவர் மு.க.ஸ்டாலின் அப்படி என்ன உதவிகள் செய்தார்கள் என்று ஒரு விரிவான ஆலோசனை பார்ப்போம்.
இஸ்லாமியத்தில் சாதிகள் இல்லை? என்று கூறு வார் அதே சாதி சான்றதை வைத்து தான் இட ஒதுக்கீடு கொடுப்பார். இந்த இட ஒதுக்கீடு பத்தாது மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தற்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்
1. இஸ்லாமிய பண்டிகை நாட்கள் ரமலான், பக்ரீத் போன்ற தினங்களுக்கு அரசின் சார்பில் விடுமுறை அறிவித்தார் கருணாநிதி
2. தமிழர்கள் அல்லாத உருது பேசும் முஸ்லீம்களை அரசு வேலை வாய்ப்பு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து இணைத்தார் கருணாநிதி
3. வெளிமாநிலத்தில் இருந்த இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர் குடி முஸ்லிம்களையும் இணைத்து சிறுபான்மையினர் நல ஆணையத்தை உருவாக்கினார் கருணாநிதி.
4. பெரும்பான்மையான மக்கள் செலுத்திய வரித்தகையை எடுத்து வக்ஃபு வாரியாக சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கினார்..
5. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் துவங்கினார்..
6. காயிதேமில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கினார்..
7. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமி யர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு..
8. காயிதேமில்லத் மகளிர் கல்லூரியை உருவாக் கியவர்…
9. காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர்..
10. சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகை களுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது..
11. உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங் களில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது..
12. சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…
13. தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.
14. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன…
15. உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது..
16.தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது..
17. வக்ஃபு சரக அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18. பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், வக்ஃபு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
19.வக்பு சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20. மேடவாக்கத்தில் 40 ஏக்கர் நிலத்தில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
21. சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரி காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
22. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.25 இலட்சம் வைப்புநிதியாக வழங்கப்பட்டு காயிதே மில்லத் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது…
23. மதுரையில் வக்ஃபு வாரிய கல்லூரிக்கு தி.மு.க அரசு 7 ஏக்கர் நிலம் வழங்கியது. 1998-1999 ஆண்டு இக்கல்லூரிக்கு 5 கோடியே 95 லட்ச ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டது.
24. பாளையங்கோட்டையில் உள்ள சதக் கத்துல்லா அப்பா கல்லூரிக்கு திமுக அரசு 32 ஏக்கர் நிலம் வழங்கியது.
25. சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களையும் 650 ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் நிரப்புவதற்கு ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
26. திருச்சி, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தி.மு.க ஆட்சியில் 2008-, 2009 கல்வியாண்டில் ரூபாய் 35,18,180 செலவில் இஸ்லாமிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்பட்டன.
விடுதிகளில் மாணவியர்களுக்கு கணினி வசதிகளும் செய்து தரப்பட்டன.
27. 2006-, 2011 தி.மு.க ஆட்சியில் ஹஜ் நிர்வாக செலவுகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டது. ஹஜ் பயண செலவிற்கு மேலும் ரூபாய் 42 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிதி அல்லாது ஹஜ் நிர்வாக செலவுகளுக்காக தமிழ்நாடு அரசு மேலும் 30 லட்சம் வழங்கியது.
28. இஸ்லாமிய சமூதாயத்திற்கு சொந்தமான பொது சொத்துகளை பராமரிப்பதற்காக வக்ஃபு வாரியத்திற்கு தி.மு.க அரசு நிதி வழங்கியது..
2023 நிலவரப்படி ஒன்பது முஸ்லிம் கைதிகள் உட்பட மொத்தம் 335 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 10, 2023 அன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
29. வெளி மாநிலத்திலிருந்து குடியேறுபவர்களை தமிழ்நாடு அரசு சாதி பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் முதல்வர்..
30. இஸ்லாமிய மக்களுக்காக மத்தியில் உள்ள பாஜக அரசு என்சிஏ சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து போராட்டம் நடத்தி தொடங்கி போக செய்தவர் முதல்வர் மு.க ஸ்டாலின்..
31. திரைத்துறையில் இஸ்லாமிய மக்கள் முன்னேறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்தவர் கருணாநிதி.
32. மதரசா பள்ளிகளை அரசு நலத் திட்டங்களுடன் இணைத்து, முஸ்லிம் குழந்தைகளின் கல்வி பொதுக் கல்வியோடு ஒத்திசைவாக வளர்வதற்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
33. சிறுபான்மையர் நலன் பெற கடந்த நாலு ஆண்டுகளில் 450 கோடி
34. தமிழ்நாடு ஹஜ் கமிட்டி நிர்வாகச் செலவுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 80 லட்சம்
35. வக்ஃபு வாரியத்திற்கு ஆண்டு தோறும் இரண்டு புள்ளி ஐந்து கோடி நிர்வாக மானியம்
36. 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு ரூ. 1000
37. ரூ. 65 கோடி செலவில் சென்னை நங்கநல் லூரில் 2வது ஹஜ் இல்லம் கட்ட அனுமதி
38. நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு அரசு சார்பில் 45 கிலோ சந்தன கட்டைகள்
39. 18.41 கோடி செலவில் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்க 7,920 டன் இலவச அரிசி
40.ஹஜ் பயணத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி
41. பள்ளிவாசல் தர்கா சீரமைக்க ரூபாய் 23 கோடி
42. ஸ்டாலின் அரசு உருது மொழியைக் பேசும் முஸ்லிம் சமூகத்தையும் ஙிசி பட்டியலில் உள்ளிடியுள்ளது. உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை ஆனால் தமிழ்நாடு அரசு பட்டியலில் சேர்த்தரின் மூலம் தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்குமா பாதிக்காதா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
43. ILS: “புரொஃபெட் முஹம்மத் (Prophet Muhammad)”-இன் கல்வெழுத்துக்கள் தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
44. அரசால் 2025-26 கல்வியாண்டிற்கு “Overseas Scholarship” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டு முதுகலை (றிநி) படிப்புக்காக உயர் கல்வி உதவித்தொகை நிறைவு.இந்த திட்டத்திற்கு ரூ. 3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
45 Muslim Women Aid Society” என்ற அமைப்பிற்கு அரசு நிதி வழங்குகிறது. 2023-24 ஆம் தீவிர ஆண்டில் இந்த அமைப்பிற்கு “matching grant” (அரசுச் சம்பந்தமுடைய மானியம்) ரூ. 6.58 கோடி (658.99 லட்சம்) ஒதுக்கப்பட்டது என்று BC / Minorities Welfare ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
46. ஒரு மதிப்பு படி, தமிழ்நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை 5.86% ஆகும் என்பது 2011 மக்கள் கணக்கெடுப்பு தரவில் இருந்து சொல்லப்படுகிறது.
சில அரசியல் தலைவர்கள்/சமூக ஏற்பாட்டாளர்கள் “7%” என்ற மதிப்பை குறிப்பிடுகின்றனர்: உதாரணமாக, விவிரி கட்சியின் ஜவாஹிருல்லா, “தமிழ்நாட்டில் முஸ்லிம் மக்கள் சுமார் 7%” என்று கூறியுள்ளார். கடந்த நாலரை ஆண்டுகளில் வெளி மாநிலங்களில் இருந்து கொத்துக்கொத்தாக இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி உள்ளார்கள்.
இதை வைத்து பார்க்கும் போது இவர்களின் மக்கள் தொகை 9 முதல் 10% வரை உயர்ந்து உள்ளது. இந்த வாக்கு வங்கியை தங்கள் கட்சிக்கு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக சலுகைகளை செய்து வருகிறது.
47. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு மதுரை கிளை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பை அமல்படுத்தாமல் உடனே திராவிட மாடல அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இந்த விடயத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது…
48. உலமாக்கள் நல வாரியத்தின் 15ஆயிரத்தி 60 உலமாக்கள் இருக்கிறார்கள் முதற்கட்டமாக இதில் ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூபாய் 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
49. ஏற்கனவே சென்னை மற்றும் மதுரையில் வக்ஃபு தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
50. கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்கள் இல்லாத இடங்களில் மாநகராட்சியினால் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு அவை அமைக்கப்படும்.
51. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 10 உருது மொழி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்..
52. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள 1,537 உலமாக்களுக்கு ரூபாய் 3000 ஓய்வூதியம், 44 உறுப்பினர்களுக்கு குடும்பம் ஓய்வூதியம் ரூபாய் 1500 தற்போது வழங்கப்பட்டு வருகிறது, இனி 5000 ஆக உயர்த்தி ஓய்வூதியம் மற்றும் ரூபாய் 2500 குடும்ப ஓய்வூதியமும் உயர்த்தி வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை பெற திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கண்மூடித்தனமாக பெரும்பான்மையான மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்து திமுக அரசு சலுகைகளையும் விதிகளையும் வாரி வாரி வழங்குகிறது.
இப்போது சொல்லுங்கள் இஸ்லாமியர் வாக்குகள் வேறு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
