தெலுங்கு இன தலைவர்களும் தெலுங்கு கட்சிகளும் வசைப்பாடி கொள்வார்கள் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து கொள்வார்கள் ஆனால் தன் இனத்திற்காக ஒன்று சேர்வார்கள். இதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள்.
ஆனால் தமிழின தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற ஈகோ வாட்டி வருகிறது தன் இனம் எப்படி செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தன் மண் எப்படி நாசமானாலும் பரவாயில்லை, நம் நாடு தமிழ்நாடு பாலைவனமாக போனாலும் சரி நாங்கள் ஒன்று சேர மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றனர்.
உண்மையிலேயே திமுகவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்றால் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஈகோவை தூக்கி ஓரமாக வைத்து விட்டு எடப்பாடி அவர்களும் சீமான் அவர்களும் நடிகர் விஜய் அவர்களும் மற்றும் ஏனைய தலைவர்களும் ஒன்று சேர வேண்டும்.
இதை செய்தால் மட்டுமே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வராது என்பதை தமிழினத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்….
