திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் ஏன் எதற்காக என்று பார்ப்போம்

உலக தமிழர் சங்கமம் அறக்கட்டளை என்பது வரும் சட்டசபை தேர்தல் வரை மட்டுமே பின்பு இந்த அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டு கொள்கைகள் சுருக்கமாக!!
கொள்கை {1}

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் ஏன் எதற்காக என்று பார்ப்போம். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை இருக்கும் வரை தமிழர் குல மக்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைக்கவே கிடைக்காது. தமிழ்நாட்டை பிற மொழியாளர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரத்திலும் அதிகாரிகளாகவும் அமர்ந்து உள்ளார்கள்.
இதை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்றால் திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் தலைநகரமாக கொண்டு வருவதன் மூலம் இதை சரி செய்யலாம்…

நீர் நிலையும். நிதிநிலையும்.

நீர் நிலையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அது போகும் வழியில் உள்ள நிலங்கள் தேவையான தண்ணீர்களை உறிஞ்சி விடுகிறது மீதி தண்ணீர் தான் பக்கத்து காடுகளுக்கு செல்லுகிறது.

உச்சி வெயில் அடிக்கும் போது நீர் செல்லும் வழியில் உள்ள நிலங்கள் அனைத்தும் ஈரப்பதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும்.
ஆனால் பக்கத்து காடுகள் வேகமாக காய்ந்து விடுகிறது வெடித்து வாய் பிளந்து நிற்கும்
இதுதான் சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் உள்ள வித்தியாசம். அதாவது பெரும்பான்மையான நிதியை சென்னை மண்டலம் எடுத்துக்கொண்டு கொசுறு நீதியை மற்ற மாவட்டங்களுக்கு அனு ப்புகிறது.

சென்னையில் வசிக்கும் மக்கள் 40 சதவீதம் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இவர்கள் கட்டும் வரிப்பணத்தை திராவிட அரசு எடுத்து சென்னையில் சுற்றியே வளர்ச்சி செய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 4000 கோடி செலவு, ஏகப்பட்ட பாலங்கள்,மெட்ரோ ரயில் நிறுவனங்கள், குடிசை மாற்று வாரியத்தில் வீடு, இப்படி பல சலுகைகளை சென்னை மக்களுக்கு செய்து கொடுக்கிறது. இதில் பலன் அடைபவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்தவர்கள் இதை சற்று உற்றுப் பார்த்தால் உண்மை தெரியும்.
அடுத்ததாக இதில் பல முறைகேடுகள் செய்து வருகின்றனர் இதை செய்பவர்கள் யார் என்றால் ஆந்திரா மாநிலத்தில் இருந்து அன்டிபிழைக்கு வந்தவர்கள்.
இந்த நிலையில் எனது இயக்கம் 2018ம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரம் ஆக்குவோம் என்று முழங்கமிட்டு வருகிறேன். ஆனால் மக்களிடம் முழுமையாக இந்த விடயத்தை கொண்டு சேர்க்க முடிய வில்லை இதற்கு காரணம் போதிய நிதி உதவி இல்லாததால் நமது முழக்கம் அவ்வபோது தேய்மானம் ஏற்பட்டு வந்தது ஆனாலும் விடாமல் கடந்த ஏழு வருடமாக முழக்கமிட்டு வருகிறோம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன்..

திருச்சிராப்பள்ளியை ஏன் தலைநகரமாகக் கொண்டு வரவேண்டும் என்ற கட்டாயம் வந்தது இதற்கான வரலாற்று சான்றுகள் நமக்கு சாதகமாக உள்ளது….

திருச்சிராப்பள்ளி என்பது தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து உள்ளது வடக்கே சென்னை, தெற்கே கன்னியாகுமரி, மேற்கே கிருஷ்ணகிரி, மற்றும் கோவை கிழக்கே பூம்புகார், என்று திருச்சி மாவட்டம் மத்திய பகுதியில் அமைந்துள்ளன இது வரலாறு இதை யாராவது மறுக்க முடியுமா?
எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது இதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சிராப்பள்ளி எந்த பக்கம் இருந்து பயணித்தாலும் ஐந்து மணி நேரத்தில் வந்து சேரலாம்.

ஆனால் சென்னைக்கு அப்படி அல்ல தென் மாவட்டங்களில் இருந்து 10 மணி நேரம் 12 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் வீடு திரும்புவதற்கு மீண்டும் 12 மணி நேரம் பய ணம் செய்ய வேண்டும். இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வீண் அலைச்சலை என் மக்களுக்கு உண்டாக்கி வருகிறது.. சென்னை மாநகரத்தை இன்று பிற மொழியாளர்கள் ஆளுகின்றனர் அதிகாரத்தில் இருக்கின்றனர் இந்த அதிகாரம் எங்கே இருந்து வந்தது என்றால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்து வந்தன சென்னை மண்டலம் (காஞ்சிபுரம் தவிர சென்னாப்பட்டினம், மதராஸ், மதராஸ் மாகாணம், மதராஸ் ராஜஸ்தானி, என்று பல பெயர் இருந்து வந்துள்ளன.

இந்த நிலையில் வடமாநிலத்தில் இருந்து மார்வாடிகள் சென்னையில் குடியேறினார். இவர்கள் ஒன்று சேர்ந்து கொத்தவால் சாவடி என்ற பகுதியை உருவாக்கினார். இப்போது கொத்தவால் சாவடி பகுதிகள் முழுவதும் மார்வாடிகள் கைக்கு போய் விட்டன. இந்தப் பகுதியில் ஒரு தமிழர் கூட ஒரு சென்ட் நிலத்தை வாங்க முடியாது ஏன் வாடகை கூட போக முடியாது.

அடுத்ததாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆங்கிலே யர்களுக்கு எடுப்பு வேலை பார்த்தவர்கள் ஆரி யர்கள். இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்தியாவில் உள்ள ஆரியார்கள் சென் னைக்கு குடியேறினார்கள்.

பின்பு ஆங்கிலேயர் ஆட்சியிலும் திராவிடர்கள் ஆட்சியிலும் தங்களது தொழில் வளத்தையும் அரசுத்துறையில் உயர் பதவி மற்றும் நீதிபதிகள் பதவி மற்றும் அதிகார பதவிகளிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்கள் அபகரித்துக் கொண்டார்கள். இது இன்று வரை தொடர்கிறது. இதை திராவிடத்தால் மாற்ற முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் கள்ள உறவு உள்ளது.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தெலுங்கர்கள் சென்னையில் குடியேறினார்கள் இதெல்லாம் நேற்று இன்று நடந்தது அல்ல இதெல்லாம் 200, 300 வருடத்திற்கு முன்பு நடைபெற்றது. இப்பவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு குடியேறிய தெலுங்கு செட்டியார் கொத்தவர் சாவடியில் மார்வாடிகளோடு வியா பாரத்தில் கைகோர்த்து கொண்டார்கள் இதற்குப் பின்பு தான் கொத்தால்சாவடியில் அங்கப்பநாயகன் செட்டி தெரு, அரசப்ப நாயகன் செட்டி தெரு என்று செட்டி பெயராக அனைத்து வீதிகளிலும் உள்ளது இதை இன்று கூட நீங்கள் பார்க்கலாம். இவர்களோடு வியாபாரத்தில் கன்னடர்கள் மலையாளிகள் கைகோர்த்துக் கொண்டனர்.

தற்போது தமிழ்நாட்டு தலைநகரான சென்னை யார் மண்ணு என்று பார்ப்போம்..

சென்னை மண்ணுக்கு சொந்தக்காரர் சென்னப்ப நாயக்கர் என்ற தமிழர் குடி சார்ந்தவர்..
ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியில் தென் மாநிலமான ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மற்றும் கேரளா மாநிலத்தின் தலைமை இடமாக அன்று சென்னை செயல் பட்டு வந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளில் பல பெயரில் இயங்கி வந்த சென்னை என்று வரலாறு கூறுகிறது.
சென்னை மாநகரம் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய உதவியது ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்ததும். ஆரியர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு இடம் கொடுத்தது பின்பு காங்கிரஸ் திராவிடம் ஆட்சி செய்ய அடித்தளமாக செயல்பட்டு உள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்… ஆரியர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறிக்க தெலுங்கர்களும், தமிழர்களும் நீதி கட்சியை துவங்கினார்கள்.

நீதி கட்சியின் கொள்கை என்னவென்றால் பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்களைக் கொண்டு ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதே என்று கூறுகிறது. இந்த இடத்தில் தமிழர் குடித்தலைவர்கள் விழித்திருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் தமிழர்களை எப்படி ஏமாற்றுவது என்ற பிம்பம் உருவானது பிற மொழியாளர்கள் ஒன்று சேர்ந்து நம் தலைவர்களை ஏமாற்றி விட்டார்கள். நீதி கட்சி நீந்து போனது இந்த இடத்திலிருந்து தான் திராவிடம் என்ற கட்சி துளிர்விடத் துவங்கி விட்டன.

இந்த நிலையில் 1947ல் சுதந்திரம் கிடைத்து இதன் பின்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது. தமிழ் மொழி இருப்பதால் தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று பல போராட்டங்கள் நடைபெற்றது. நமது தமிழர் குடியான சங்கரலிங்க நாடார் அவர்கள் 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை தியாகம் செய்தார், தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு தந்தையாக செயல்பட்டார்.ஆனால் இன்று தமிழ்நாடு பிறந்ததற்கு யார் யாரையோ காரணம் சொல்கிறார்கள் அடுத்தவனுக்கு பிறந்த பிள்ளையை தனது பிள்ளை என்று பீத்திக் கொள்கிறார்கள்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் திராவிட நாடு என்று பெயர் சூட்ட வேண்டும். என்று போராடியவர்கள் தமிழ்நாடு தலைநகரம் திருச்சிராப்பள்ளியை கொண்டு வர வேண்டும் என்று ஏன் போராடவில்லை இது பற்றி பேசக்கூடவில்லை. இது குறித்து இதுவரை எந்த தலைவரும் சிந்திக்கவில்லை ஏன் சிந்திக்கவில்லை.

1985 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜிஆர் அவர்கள் திருச்சிராப்பள்ளியை தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும் என்று படும் தீவிரமாக வேலை செய்தார்.
எம்ஜிஆர் அவர்கள் யார் சொன்னாலும் கேட்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதை தடுப்பதற்கு தமிழ்நாட்டுக்கு குடியேறிய மார்வாடிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், திராவிட தலைவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவோடு இரவாக எம்.ஜி.ஆரை சந்தித்து திருச்சிராப்பள்ளி தலைநகரம் என்ற விடயத்தை பேச வேண்டாம் என்று எம்ஜிஆரை மன மாற்றம் செய்து விட்டகள்.

ஒருவேளை அன்று திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் தலைநகரமாகி இருந்தால் பின்னாளில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக வந்திருக்க முடியாது மற்றும் தமிழ்நாடு அரசு துறையில் பிற மொழியாளர்கள் உள்ளே வந்திருக்க முடியாது.

எம்ஜிஆர் ரோடு குடியேறி தலைவர்கள் இரவோடு இரவாக அப்படி என்னதான் பேசி இருப்பார்கள் என்று பல கட்டமாக ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
சென்னை என்பது வெளிமாநிலத்தில் இருந்து அதாவது வட இந்தியா, கேரளா, கர்நாடகா ஆந்திராவில் இருந்து குடியேறுபவர்களின் சொர்க்க பூமியாகவும் மாமியார் வீடாகவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது, இது இன்று வரை தொடர்கிறது.
இந்த வசதி வாய்ப்புகள் திருச்சிராப்பள்ளி தலைநகரமாகினால் மற்ற மாநிலத்தில் இருந்து மக்கள் திருச்சிக்கு குடியேற முடியாது. அப்படியே குடிபெயர்த்தாலும் அவர்கள் தமிழனிடம் அடிமையாகத்தான் இருக்க வேண்டும்
குறிப்பாக தமிழர்கள் கையில் ஆட்சி அதிகாரம் போய் விடும் என்று எம்ஜிஆர்–ரை சமாதா னப்படுத்திவிட்டார்கள். இதன் பின்பு எம்ஜிஆர் அவர்கள் இது குறித்து தனது மரணம் வரை வாய் திறக்கவில்லை.

நடைபெற்ற உண்மை வரலாற்றை பார்த்து விட்டோம் நாம் ஏமாந்ததையும் பார்த்து விட்டோம் அடுத்ததாக.

திருச்சிராப்பள்ளி தலைநகரமானால்

திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகர மாக்குவோம், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறையின் தலைமையை மட்டும் திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு வருவோம் ஒருபோதும் திருச்சிராப்பள்ளியில் தொழில் வளத்தை கொண்டு வர மாட்டோம். இதுதான் எங்கள் கொள்கை கோட்பாடு இதை மீற மாட் டோம்.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்த போது திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக கொண்டு வந்து இருந்திருந்தால் நமது மன்னர்கள் பெரும்பிடுகு முத்திரையர், ராஜ ராஜ சோழன், மருது சகோதரர்கள் சேரன் செங்குட்டவன் வீரன் அழகுமுத்துக்கோன் போன்ற மாமன்னர்களுக்கு பிறந்தநாள் மற்றும் சதய விழா நாட்களில் அரசு விடுமுறை கிடைத்திருக்கும். இது யாரால் ஏற்பட்ட பிழை என்று கூற முடியுமா? தமிழ்நாட்டின் தலைநகரமாக சென் னை உருவானதால் தமிழகத்திற்கு பிழைக்க வந்த கார்டுவெல், ஈ.வி.கே.ராமசாமி நாயக்கர் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை எம்.ஜி .ஆர், ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் காந்தி, அம்பேத்கார் மற்றும் இவர்களுக்கெல்லாம் வெங்கல சிலை மன மணக்கும் மணிமண்டபம் மூளை முடுக்கெல்லாம் தெருவுக்கு தெரு இவர்கள் பெயர்கள், பிறந்தநாள் அன்று அரசு விழா, அரசு உதவிகள், நூல்கள் வெளியிட்டு விழா என்று அல்லி விடுகிறார்கள். இவர்களுக்கு எப்படி இந்த வாழ்வு கிடைத்தது நமது தமிழர் குடி மக்களின் வயிற்றில் அடித்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்திய சுதந்திரத்திற்காக 40 ஆண்டு காலம் செக்கிழுத்த என் பாட்டன் வ.உ.சிதம்பரம் பிள் ளைக்கு என்ன கிழித்தீர்கள்.

திராவிட தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்களா? ஆங்கிலேயர்கள் காலில் போட்ட செருப்பால் அடி வாங்கினார்களா? செக்கிழுத்தார்களா ரத்தம் சிந்தினார்களா?
தமிழர்கள் இப்போது நாம் ஆட்சி அதிகாரத்தை இழக்கவில்லை 1500 ஆண்டுகளுக்கு முன்பே இழந்து விட்டோம்.

ஆரியர்கள் நமது நாட்டுக்குள் புகுந்து சதி வேலை செய்து நமது மன்னர்களின் ஆட்சி அதிகாரத்தை கவிழ்த்து விட்டார்கள். பின்பு வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஆட்சியாளர்கள் திறமை இல்லாததால் ஆங்கிலேயர்களிடம் அடிவாங்கி தோற்று விட்டு ஆட்சியை ஆங்கிலேயர்களிடம் பறிகொடுத்து விட்டார்.
நம் மன்னர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் தமிழ்நாடு பக்கம் ஒரு வெள் ளைக்காரனாவது எட்டி பார்த்து இருப்பானா? தமிழகத்தை கையகப்படுத்த வேண்டும் என்று வெளிநாட்டில் உள்ள வெள்ளைக்காரன் மனதில் நினைத்தாலே போதும் அவன் வீடு பூந்து அடிப்பான் என் மன்னன் கரிகால சோழன் சோழர் ஆட்சியிலே கரிகால சோழனை பார்த்து பயந்து ஓடுனவன் வெள்ளைக்காரன்.

திருச்சிராப்பள்ளி தலைநகரமானல் நம் இன குடிகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

1. திருச்சிராப்பள்ளி மாநகர மட்டுமல்ல இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகரம் மற்றும் நகரம் ஆகிய பகுதிகளுக்கு சுத்தமான தூய்மையான குடிநீர் கிடைக்கும்.
இதனால் தண்ணீரால் வரும் வியாதிகள் குறையும் மருத்துவ செலவு குறையும் உடல் ஆரோக்கியம் பெறும் இதற்கான திட்டத்தை ஆய்வு செய்துள்ளோம். இதை சுருக்கமாக பார்க்கலாம் பூம்புகார் கடல் பகுதியில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து பதப்படுத்தி அதை திருச்சி மாநகர மட்டுமல்ல திருச்சி மண்டலத்தில் உள்ள மாநகரம் நகரத்துக்கும் சுத்தமான தூய்மையானகுடி நீர் வழங்குவோம்.

இதன் மூலம் நம் மக்களுக்கு சுகாதார சீர்கேடு வியாதிகள் வராது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். நம்ம மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க திமுக, அதிமுக அரசுகள் மற்றும் இந்த மாவட்டத்தில் 40 50 ஆண்டு காலமாக பதவியில் இருந்த அமைச்சர் கே என் நேரு தற்போதைய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஒன்றும் செய்யவில்லை சரியான திட்டத்தை கொண்டுவரவில்லை நம் மக்களையும் ஏமாற்றி விட்டார்கள்.
2. திருச்சி மாநகரத்தை சுற்றி என்ன தண்ணீர் ஓடுகிறது என்ன சாக்கடை ஓடுகிறது என்று என் மக்களை உங்களுக்கு நல்லாவே தெரியும் இது தெரிந்தும் நீங்கள் மீண்டும் மீண்டும் திமுக அதிமுகவிற்கு தான் வாக்களிக்கிறேன் என்றாள் அது தண்ணீர் இல்லாத கிணற்றில் குதிப்பதற்கு சமமானவையாகும் மக்களே ஆதரவு கொடுங்கள் இந்த அவல நிலை இனி இருக்கவே இருக்காது இருக்கவும் கூடாது இந்த நிலையும் மாற்றுவோம் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளோம்.

திருச்சி மாநகர மட்டுமல்ல திருச்சி மண்டலத்தில் உள்ள நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உற்பத்தியாகும் சாக்கடை நீரை எங்கே கொண்டு விடுகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள் காவிரி ஆற்றில் கொண்டு போய் விடுகிறார்கள் அசுத்தமான இந்த சாக்கடை நீரை காவிரி ஆற்றில் கொண்டு போய் விடுவதால் அந்த ஆற்றில் வரும் தண்ணி மாசுபடுகிறது என்பது இவர்களுக்கு தெரியாதா? 50 ஆண்டுகாலம் இந்த மண்ணின் மந்திரியாக கே.என்.நேரு மற்றும் மகேஷ் அவருக்கு தெரியாதா?

காவேரியில் வரும் சுத்தமான தண்ணீர் என்ன ஆகும் இந்த நீரை குடிக்க முடியுமா? நிலத்துக்கு பாய்ச்ச முடியுமா? இந்த சதி திட்டத்தை எந்த மடையன் கொண்டு வந்தான் என்று தெரியவில்லை.
அடுத்ததாக திருச்சி மாநகராட்சி மற்றும் காவேரி ஆறு பாயும் பகுதிகளில் உருவாகும் கழிவறை தண்ணீரை டேங்கர்லாரியில் நிரப்பி அதை எங்கே கொண்டு போய் கொட்டுகிறார்கள்.காவேரி தண்ணீர் பாயும் ஆற்றில் விடுகிறார்கள் இந்த கழிவறை தண்ணீர் காவேரி தண்ணீரோடு கலக்கிறது இதன் நிலை என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

எங்கள் திட்டத்தின் படி திருச்சி மண்டலத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் இருந்து கழிவறை தண்ணீரை அப்படியே காவிரி கரை ஓரம் பாதுகாப்பாக பாதாள பைப்புகள் சொப்பனிடப்பட்டு நேரா பூம்புகார் கடலில் கொண்டு சென்று விடுவோம் இதனால் பல மாநகராட்சிகள் பல நகராட்சிகள் பல ஊராட்சிகள் பயன்பெறும்.
இதேபோல் சாதாரண கழிவு நீர் தண்ணீரை தேங்கி வைத்து அதை பில்டர் செய்து மறுபடியும் பயன்படுத்த அனுப்புவோம். இந்த திட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீங்கள் போய் பார்த்தால் தெரியும் ஹைதராபாத்துக்கும், செகந்திராபாத்துக்கும் இடையில் ஒரே ஒரு ஏரி உள்ளது அந்த ஏரியில் தான் இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பூர்வீக தமிழர் குடி மக்களுக்கு அரசு வேலையில் அமர முடியும்…..

திருச்சி மத்திய பகுதி மற்றும் தென் தமிழ கத்தில் இருந்து பல ஆயிரம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பெறுவார்கள், குறிப்பாக பூர்வீக தமிழர் குடிமக்கள் பயனடைவார்கள். இந்த வேலை வாய்ப்பு என்பது தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையாக நமது குடிமக்கள் அனுபவிப்பார்கள்.

இந்த வேலை வாய்ப்புகளில் அண்டை மாநிலத்தில் இருந்து குடியேறியவர்கள் அவ்வளவு சீக்கிரமாக பலன் அடைய முடியாது இதற்கு நாம் வழிவிடக்கூடாது தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை நகரம் செயல்பட்டு வருவதால் தலைமைச் செயலகம் மற்றும் தமிழகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் நமது தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளில் குறுக்கு வழியில் உள்ளே புகுந்து அரசு பணியை அபகரிப்பு செய்து விடுகிறார்கள். இது காலங்காலமாக தலைமுறை தலை முறையாக நடைபெற்று வருகிறது இதை நாம் தடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாகி தலைமைச் செயலகத்தை கொண்டு வர வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே நமது பூர்வீக தமிழர் குடிகள் பலனடைவார்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

தமிழ்நாடு அரசு கட்டுமான துறையில் பல ஒப்பந்தங்கள் காண்ட்ராக்ட் வழங்க முடியும் தமிழ்நாட்டில் தலைநகரமாக சென்னை இருப்பதால் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலக ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களை கையில் வைத்து கொண்டு கட்டுமான பணி மற்றும் பல பணிகளை ஒப்பந்தம் பெற்று கோடி கோடியாக கொள்ளையடித்து வருகிறார்கள். பக்கத்து மாநிலமான ஆந்திரா கர்நாடகா, கேரளா தெலுங்கானா மற்றும் வடமாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் நமது தமிழர் குடிகளுக்கு மக்களுக்கு பலன் இல்லாமல் தவிக்கிறார்கள் உரிமைகளை அடையாமல் அவதிப்படுகிறார் இதை மாற்ற வேண்டும்…. கடந்த 70 ஆண்டு கால திராவிட ஆட்சியில் சென்னை மண்டலத்தில் உள்ள வளர்ச்சியை பாருங்கள் என்னென்ன வளர்ச்சிகள் செய்துள்ளார்கள் என்று ஆனால் திருச்சி மண்டலம் மற்றும் தென் தமிழகத்தை பாருங்கள் என்னென்ன வளர்ச்சி எல்லாம் செய்துள்ளார்கள் என்று உங்களுக்கு புரிய வரும்.

சென்னை மண்டலத்தில் எத்தனை பைபாஸ் சாலைகள், எவ்வளவு பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள், பெரிய பெரிய காம்ப்ளஸ்கள் குடிசை மாற்று வாரியத்தில் எவ்வளவு வீடுகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் எவ்வளவு வீடுகள் நம் வரிப்பணத்தில் கட்டி கொடுத்து குடியேறியவர்களை வாழ வைக்கிறார்கள்.
இதைப் போல அனைத்து தொழில் வளங்களையும் தமிழ்நாட்டுக்கு குடியேறியவர்கள் பெற்றுவிட்டார்கள்.

திருச்சி மண்டலத்தையும் தென் தமிழகத்தையும் புறக்கணித்து விட்டார்கள். தென் தமிழகத்தை எப்படி சூறையாடி கொள்ளையடித்தார்கள் என்பதை பாருங்கள், பெரிய பெரிய மலைகளை உடைத்தார்கள், கனிமவளங்களை கொள்ளை அடித் தார்கள், கிரானைட் குவாரி கொள்ளை நடத்தினார்கள், மணல் கொள்ளை அடித்தார்கள், இது போக ஆயில் நிறுவனங்களுக்கு நமது நிலத்தை தாரை வார்த்தார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனம் மற்றும் குடியேறுவர்களின் நிறுவனத்திற்கு தாரைவாத்தார்கள், நமது நிலத் தில் கனிம வளங்களை கொள்ளையடித்து . கோடி கோடியாக சொத்து சேர்த்து அதில் படுத்து உருளுகிறார்கள் திராவிட குடியேறிகள் இது நமது பணம் நாம் இழந்து விட்டோம் இனிமேலும் நாம் இழந்து கொண்டே இருக்க வேண்டுமா சிந்தித்துப் பாருங்கள்.

நமது இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு பணியை பிடுங்கிக் கொண்டார்கள் எடுத்துக் கொண்டார்கள். இன்று நாம் வேலைவாய்ப்பு களுக்காக சென்னை மற்றும் வெளிநாடுகளுக்கு நோக்கி பயணிக்க வேண்டியது உள்ளது இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் எல்லா வளமும் நம்மிடம் உள்ளது ஒரே ஒரு பலம் மட்டும் இல்லை அதுதான் நமது ஒற்றுமையின் பலம் நமது ஒற்றுமையை காட்டினால் போதும் நம் அடுத்த தலைமுறைக்கு ஆணி வேராக அமையும் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிர்வாக வசதிக்காக சில மாவட்டங்கள் பிரிக்க வில்லையா? மாநிலங்கள் பிரிக்க வில்லையா? நாங்கள் மாநிலத்தை பிரிக்க சொல்லவில்லை பிரிக்கவும் கூடாது தலை நகரத்தை மட்டும் தான் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

(7) பலனடையும் சிறுசிறு வியாபாரிகள்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள சிறு சிறு வியாபாரிகள் பயனடைவார்கள் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக அமையும். விலை நிலங்கள் உயரும் விவசாயிகள் பலனடைவார்கள், விலையும் விவசாய பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும் ஏனென்றால் தலைமைச் செயலகத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான விவசாய பொருட்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தென் தமிழகம் வேளாண்மை துறையில் அசுர வளர்ச்சி பெறும் இது தலைமுறை தலைமுறையாக தொடரும் இதை விவசாய பெருங்குடி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

8) அதிகாரம் மட்டும்தான் நமக்கு தேவை

தமிழ்நாட்டின் தலைநகரமாக திருச்சிராப்பள் ளியை கொண்டு வருவோம் ஆனால் ஒருபோதும் சென்னையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் எந்த ஒரு தனியார் நிறுவனத்தையும் திருச்சிராப்பள்ளி கொண்டு வர மாட்டோம். தொழிற்சாலைகள் நிறுவனங்களை இங்கே நாம் கொண்டு வந்தால் நமது அடித்தளமான விவசாயம் அழிந்துவிடும் இதை ஒருபோதும் செய்ய மாட்டோம் நமக்குத் தேவை அதிகாரம் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பூர்வீக தமிழர் குடிமக்கள் இருக்க வேண்டும் குடியேறியலில் இருக்கக் கூடாது என்பதுதான் நமது உயிரோட்டமாக இருக்கட்டும்.

(9) போக்குவரத்து அசுர வளர்ச்சி பெறும்

மெட்ரோ ரயில், விமான சேவை, மற்றும் போக்குவரத்து அதிகமாகும் இதனால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கூடுதலாக கிடை க்கும். இங்கேயும் வெளிமாநிலத்தவர்கள் குடி யேறுவார்கள் பின்பு நமக்கு கிடைக்க வேண்டிய வேலையை அட்டையை போடுவார்கள் இதற்கு மாற்றுமருந்தை நாம் உருவாக்க வேண்டும் திருச்சிராப்பள்ளி மற்றும் திருச்சி மண்டலத்தில் வெளிமாநிலத்தவர்கள் குடியேறுவதற்கு தடை கொண்டு வருவோம். இவர்களை இங்கே குடியேற விட்டால் உள்ளே புகுந்து நமது அதிகாரத்தை கலைத்து அபகரித்து விடுவார்கள்.

10. சென்னையில் குடியேறிய நமது மக்கள் நூற்றுக்கு 70 சதவீதம் என்று கணக்கீடு கூறுகிறது.

எப்படி என்றால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு குடியேறியவர்கள் 30% வேலை வாய்ப்புகளுக்காக சென்னையில் தங்கி இருப்பவர்கள் 40% மொத்தம் 70% நம் மண்ணில் எல்லா வளமும் இருந்தும் ஏன் எதற்காக நாம் சென்னைக்கு குடியேற வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா?

நமது பூர்வீக மண்ணை விட்டு நம் மக்களை நாடோடிகளாக சென்னைக்கு துரத்த வேண்டும் அவர்கள் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும், ஒரு இடத்தில் அவர்கள் நிலையாக இருக்க கூடாது என்பதுதான் இந்த திராவிட கலாச்சாரம் திராவிட சித்தாந்தம் திராவிட திருட்டுத்தனம் மொள்ளமாரி தனம். இதை தான் இவர்கள் கடந்த 60-70 வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த பித்தலாட்டம் தெரியாமல் அவர்கள் பின்னால் நம் தமிழர் குடிகள் சென்று உள்ளவர்கள்.
நமது இனம், நமது மண்ணு, நமது பூர்வீகம் என்று நாம் இருக்க வேண்டும் அதற்கான கட்டமைப்பை அமைத்து வருகிறோம். நம் மக்கள் எல்லா வளத்தையும் பெற வேண்டும் எல்லா அதிகாரத்தையும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கட்டமைப்பு. உதாரணமாக தீபாவளி பண்டிகை பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் சென்னையில் வசிக்கும் 70% மக்கள் நம் மண்ணுக்கு வந்து விடுகிறார்கள் வெறும் 30 சதவீத மக்கள் மட்டுமே சென்னையில் உள்ளார்கள். இவர்கள் வெளி மாநிலத்திலிருந்து குடியேறியவர்கள் இவர்கள் சென்னையில் தங்கி விடுகிறார்கள் இதுதான் வரலாற்று உண்மை இந்த உண்மையை நம் மக்கள் உணர வேண்டும்.

சென்னையை ஆந்திரா அடிமைப்படுத்தி வைத்துள்ளது எப்படி என்று பார்ப்போம் சென்னையில் இயங்கும் நூற்றுக்கு எண்பது சதவீதம் நிறுவனங்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர் கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் துறை, ஆட்டோமொபைல் துறை மற்றும் பல துறைகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். கோயம்பேட்டில் வரும் காய்கறி ஆந்திராவில் இருந்து வருகிறது தக்காளி கர்நாடகாவில் இருந்து வருகிறது ஏன் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்கள் கூட ஆந்திராவில் இருந்து தான் கொள்முதல் செய்கிறது இப்படி தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கிறது ஆந்திரா இதற்கு முக்கிய காரணம் சென்னை தலைமை ஆக இருப்பது தான் இதை தான் நாம் மாற்ற வேண்டும்.

பூம்புகார் கடல் பகுதி இருப்பதையே மறந்து விட்டோம்

பூம்புகார் கடற்கரையின் வரலாறு என்பது பண்டைய சோழர்களின் தலைநகராகவும், முக்கியத் துறைமுக நகரமாகவும் இருந்த பூம்புகாரின் செழிப்பான வணிக மற்றும் கடல்சார் வரலாற்றைக் குறிக்கிறது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் இந்தத் துறைமுகம் செழித்து வளர்ந்தது. இன்று, இது காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கையான கடற்கரையாக உள்ளது, இது காவேரிபூம் பட்டினம் அல்லது காவிரிப் பூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
பண்டைய வரலாறு: பூம்புகார், காவேரிபூம் பட்டினம் அல்லது புகார் என்றும் அழைக்கப்பட்டது. இது பண்டைய சோழர்களின் தலைநகராகவும், மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது.
வணிகம் மற்றும் செழிப்பு: கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தத் துறைமுகம் மிகவும் செழிப்பாக இருந்தது, இது வணிக த்தின் மையமாகத் திகழ்ந்தது. மக்களே மறந்துவிடாதீர்கள் ஆதரியுங்கள் ஆதரவு கொடு ங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
பன்னீர்செல்வம்
(தலைவர்)
(உலகத் தமிழர் சங்கமம்)