பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மிருணாளினி

பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் குவாரி குறித்து விவசாய சங்க தலைவர் செல்லத்துரை அவர்கள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்களுக்கு 25/12/2025 புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது.

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம் வடக்கு புல எண் 328/2ல் அமைந்துள்ள மலை புறம்போக்கு பகுதியை அரசால் ஏலம் விடப்பட்டு குத்தகைக்கு எடுத்து அதில் கல் உடைத்து வரும் கவுல்பாளையம் முருகேசன் பிளாக் எண் 24 நாரணமங்கலம் ஏழுமலை பிளாக் எண் 6 ஆகியோர் அரசு விதிகளுக்கு புறம்பாக உள் குத்தகைக்கு விட்டதோடு ஏலத்தில் அரசு அனுமதிக்க அளவைவிட பல மடங்கு கூடுதலாக அருகில் உள்ள ஏலம் விடப்படாத அரசு புறம்போக்கு பகுதியில் கல் உடைத்து வருகிறார்கள்.

இவர்களது செயல்பாடுகள் அருகில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன மற்றும் அருகாமையில் உள்ள பொது குடிநீர் கிணறுகளும் பாதிப் படைந்து உள்ளன. மேலும் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது மேலும் விதிகளுக்கு புறம்பாக இரவு நேரத்தில் கல் உடைத்தலது பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகிறார்கள் மேலும் நடை சீட்டு முறைகேட்டிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து அவதாரம் விதிப்பதோடு ஏலத்தை ரத்து செய்து அப்பகுதி விவசாயிகளையும் பொது மக்களையும் பாதுகாத்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இதுவரை துளி நடவடிக்கை கூட எடுக்கவில்லை இனிமேலும் எடுக்கப்போவதில்லை.
இது குறித்து நமது இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம் இந்த செய்தியை பார்த்து ஆட்சியர் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் மீது பொய் வழக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : சட்ட ரீதியான முக்கிய புள்ளி

Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959
Rule 8 / Rule 19 ð®
Quarry lease sanction authority:
District Collector
State Government
Assistant Director (Geology & Mining)
Inspection
Technical report
Recommendation
Quarry lease sanction செய்ய அதிகாரம் இல்லை.