முதல்வர் நிறுவனத்திற்காக பத்திரப்பதிவுத்துறையை தாரை வார்த்த அமைச்சர் மூர்த்தி

தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது ரியல் எஸ்டேட் துறை இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்ப கம்பெனியான ஜீ ஸ்கொயர், காசா கிராண்ட், ஜிக்ஷிபி இந்த நிறுவனம் அமைச்சர் கே என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் நிறுவனம் மற்றும் பாஷியம் பல வெளி மாநில நிறுவனங்கள் கொடி கட்டி பறக்கிறது. இதில் பாஷியம் நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பத்திரப்பதிவுத்துறையில் சமீபத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இது குறித்து ஒரு விரிவான அலசலை பார்ப்போம்.பத்திரப்பதிவு துறையை மேலும் நவீனப்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வரும் நோக்கில் தமிழ் நாடு அரசு பத்திரப்பதிவுத்துறைக்கான ஸ்டார் 3.0 என்ற ஒரு சாப்ட்வேர் திட்டத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. பத்திரப்பதிவு துறையை மேலும் நவீனப்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ் நாட்டை கொண்டு வரும் நோக்கில் தமிழ் நாடு அரசு பத்திரப்பதிவுத்துறைக்கான ஸ்டார் 3.0 என்ற ஒரு சாப்ட்வேர் திட்டத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது.

பத்திரப்பதிவு ரூல்ஸ்

இதன்படி பொதுமக்கள் காகிதம் இல்லாமல் ஆன்லைனில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்தினை எழுதிக்கொடுப்பவர், எழுதி வாங்குபவரின் அடையாள ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம். பொதுமக்கள் குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கு, சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு செய்யலாம்..
தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022-ன்படி சங்கங்களை பதிவு செய்ய, பொதுமக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே முற்றிலும் இணையதள வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பதிவுத்துறை குறிப்பாக, புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதற்கான பத்திரப்பதிவு பணிகளை, கட்டுமான நிறுவ னத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே மேற் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பத்திரத்தில் தொடர்புடைய, கட்டடத்தின் மதிப்பு சரியாக இருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது..

முதல் பத்திரப்பதிவு எப்படி என்று பார்ப்போம்…

கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள் அடுக்குமாடி வீடு கட்டி முதல் விற்பனை செய்யும் போது அவர்கள் இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து பத்திரம் பதிவு செய்து பழகலாம் இப்படி ஒரு வழியை அமைச்சர் மூர்த்தி அரசாங்கத்திடமிருந்து ரியல் எஸ்டேட் நிறுவ னங்களுக்கு தாரை பார்த்துவிட்டார்.  இரண்டாவது முறை இப்படி கிரயம் பெற்ற அப்பார்ட்மெண்டுகள் மீண்டும் விற்பனை செய்யும் போது நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்று பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

வீட்டுமனை
இதேபோல் முதல்முறையாக வீட்டுமனை பத்திரம் பதிவு செய்யும் போது விற்பனை செய்யும் நிறுவனத்தில் இருந்தே பதிவு செய்து கொள்ளலாம். இரண்டாவது முறைஇப்படி கிரயம் பெற்ற வீட்டு மனைகள் இரண் டாவது முறையாக விற்பனை செய்து அதற்கான பத்திரப்பதிவு செய்யும் போது நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்று பத்திரம் பதிவு செய்ய வேண்டும்.
வங்கி கடன் பெறும்போது

வங்கியில் இருந்து முதல்முறையாக வீட்டும னைகள் அப்பார்ட்மெண்டுகள் வாங்கும் போது அதற்கான வங்கி கடன் பெறும்போது நேரடி யாக சார் பதிவாளர் அலுவலகம் போகத் தேவையில்லை நேரடியாக கடன் கொடுக்கும் வங்கியில் இருந்து பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் பத்திரப்பதிவுத் துறையில் 50 சதவீதம் உரிமம் 50 சதவீதம் பணி ஆகியவற்றை இந்த நிறுவனங்களுக்கு தாரை பார்த்து விட்டார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி. அதாவது அரசாங்க ரகசியங்களை தனியாருக்கு விற்பனை செய்துவிட்டார். இதனால் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போய் போகிறது என்பதை தமிழக மக்கள் நினைவு கொள்ள வேண்டும்.

அதாவது இதுவரை அதிகாரிகள் பெற்று வந்த லஞ்சத்தை இனி அமைச்சர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் ரிசெட் நிறுவனங்கள் வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நேரடியாக லஞ்சப் பணத்தை வழங்கி விடுவார்கள் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு கிடைக்காது. இந்த நிலை நீடித்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நூற்றுக்கு நூறு சதவீதம் பல நிறுவனங்களுக்கு இந்த துறையை தாரை பார்த்து விடுவார்கள் என்பதை மாற்று கருத்து இல்லை. இந்த மோசடி குறித்து தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியது உண்டா கண்ணில் காட்டுங்கப்பா ஏன் பேசவில்லை இங்கு எல்லாமே திமுக ஒரு உறவில் உள்ளார்கள் என்பது வேதனையாக உள்ளது