பாலாஜி வழக்கில் இருந்து காப்பியடித்த நேரு

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் ((Driver): 746 பதவிகள், கண்டக்டர் (Conductor): 610 பதவிகள், ஜூனியர் டிரேட்ஸ்மேன் (Junior Tradesman): 261, ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer): 13, உதவி இன்ஜினியர் (Assistant Engineer): 40 என மொத்தம் 746 + 610 + 261 + 13 + 40 = 1,670 பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து சுமார் 39 ஆயிரம் பேரிடமிருந்து தலா இரண்டு லட்சம் முதல் ஆறு லட்சம் வரை, மொத்தம் சுமார் 940 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. வசூல் செய்யப்பட்டவர்களில் சுமார் 250 பேருக்கு மட்டும் செட்டிங் செய்து வேலை வழங்கியதாகவும், பணம் கொடுத்து வேலை கிடைக்காதவர்கள் குறை கூறத் தொடங்கியதாகவும் சொல்லப்பட்டது. அவர்கள் கூறிய குறைகளை சமாளிக்க முடியாமல் சுமார் 2,000 பேருக்கு பணம் திருப்பி வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இனி கே.என். நேரு அவர்களின் விஷயத்திற்கு வருவோம்.

Municipal Administration and Water Supply (MAWS) துறையில் உதவி இன்ஜினியர் (Assistant Engineer), ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer), டவுன் ப்ளானிங் அதிகாரி (Town Planning Officer), சானிட்டரி இன்ஸ்பெக்டர் (Sanitary Inspector) போன்ற 2,538 பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்பட்டன.

நேரு அவர்களின் ட்ரூ வேல்யூ கன்சல்டன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மூலம் சுமார் 150 பேரிடமிருந்து தலா 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை, மொத்தம் சுமார் 150 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வழங்கிய 150 பேரில் ஒருவர் கூட குறையாமல் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இப்போது இரண்டு சம்பவங் களுக்குள்ள வித்தியாசத்தை பார்ப்போம். செந்தில் பாலாஜி யோசிக்காமல் பலரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, சிலருக்கு மட்டும் வேலை வழங்கியதாகவும், மீதமுள்ளோரில் சிலருக்கு பணம் திருப்பி வழங்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் பணம் கொடுத்து வேலை கிடைக்காதவர்கள் வெளியில் குறை கூறியதாகவும், விஷயம் வெளியேறியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் நேரு அப்படியல்ல மிகவும் சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது. மொத்தம் எத்தனை பேரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டாரோ, அத்தனை பேருக்கும் வேலை வழங்கியதால், பணம் கொடுத்து வேலை கிடைக்கவில்லை என்று யாரும் மீடியாவிற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ செல்லவில்லை என்று கூறப்பட்டது. பணம் கொடுத்தால் வேலை கிடை த்துவிட்டால், பெரும்பாலும் மக்கள் அமைதியாக இருப்பார்கள் அல்லவா?

இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜியை விட சிறப்பாக செயல்பட்ட அண்ணன் நேரு அவர்களுக்கு ஒரு பதக்கம் கொடுக்கலாம் தானே?