பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.ஐ ஆனந்தன் மீது டெல்லி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் புகார்

என் பெயர் பன்னீர்செல்வம் கடந்த 2015 ஆண்டு முதல் திவில்வாய் என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன்.
  செய்தி- 01
இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி 2025ம் ஆண்டு இதழில் பெரம்பலூர் மாவட்டத்தின் (தமிழ்நாடு) குவாரி கிரசர் முறைகேடு  ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று  வெளியிட்டு இருந்தேன். மேலும் இந்த செய்தி குறித்து கலெக்டர் திருமதி.பச்சாவ் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர் நினைத்திருந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்திருக்கலாம் ஆனால் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை.
செய்தி -2
கடந்த 2025 மே மாதம் ஒன்றாம் தேதி மீண்டும் பெரம்பலூர் கல்குவாரியில் 1,00,000 சிக்ஷீஷீக்ஷீமீ கனிமவள கொள்ளை நேரடி ஆய்வு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு மேலும் இதற்கான சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தன. இப்போதும் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பச்சாவ் ஐஏஎஸ் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் எங்களுக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
   செய்தி -3
மீண்டும் கடந்த 2025 ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பெரம்பலூர் பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் கிரிவல பாதையில் இயங்கும் கிரஷர்கள் நடவடிக்கை எடுப்பது யார் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதற்கான போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது இந்த செய்தி வெளிவரும்போது தற்போதைய கலெக்டர் திருமதி. மிருணாளினி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த செய்தி மற்றும் போஸ்டரை பார்த்ததும் கலெக்டர் மிருணாளினி அவர்கள் உடனடியாக காவல்துறையை ஏறிவிட்டு என்னைப் பற்றி தெரிந்து கொள்ள  எனது முன்னால் நிருபர்கள் ஏஜெண்டுகள் ஆகியோர்களை அழைத்து விசாரணை செய்து அறிக்கை தரும்படி கேட்டுள்ளார்.
செய்தி -4
மீண்டும் எச்சரிக்கை விதமாக கடந்த 2025 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் கிரசர் நடத்தும் நிருபர் ஐடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தியில் கலெக்டர் மீது சட்டப்படியான வழக்கு பதிவு செய்வோம் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம் இதற்கான போஸ்டரும் ஒட்டியிருந்தோம் இதன் பின்பு தான் கலெக்டர் களத்தில் குதித்துள்ளார்.
செய்தி -5
மீண்டும் கடந்த 2026 ஜனவரி 1ஆம் தேதி பெரம்பலூர் குவாரி கிரசர் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியருக்கு நோட்டீஸ் பாகம்-2 என்று செய்தி வெளியீட்டு இதற்கான போஸ்டர் ஒட்டும் வேலையில் தினக்கூலி அடிப்படையில் ஆறுமுகம் சக்திவேல் ஆகிய இருவரும் அழைக்கப்பட்டார்கள் இவர்கள் தங்கள் பணி செய்ய தூங்கும் போது ஜனவரி மாதம் 9ம் தேதி இரவு 10 மணிக்கு  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பாலத்தில் நின்று கொண்டிருந்த போது  இருவரையும் பாடாலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரி.ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சண்முகசுந்தரம் ஆய்வாளர் ஆகிய இருவரும் இரவு 10.30 மணிக்கு கைது செய்து அவர்கள் கார் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்து எஃப் ஐ ஆர் தேதியில் பதிவு செய்தனர் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவெடுக்கப்பட்டு காரை மட்டும் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர் அடுத்த நாள் பாடாலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் கே குமார் மற்றும் பாலுச்சாமி ஆகிய இருவரையும் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் அழைத்து புகார் கொடுக்கும் படி கூறியுள்ளார் அப்போது மாவட்ட ஆட்சியர் நேரடியாக பேசியதாக கூறியுள்ளார். இதற்குப் பயந்து கொண்டு குமார், பாலுசாமி ஆகிய இருவரும் புகார் கொடுக்க சாட்சியாக கிராம நிர்வாக உதவியாளர் பெருமாள் ஜோடிக்கப்பட்டுள்ளார்.
தினக்கூலியான ஆறுமுகம், சக்திவேல் ஆகியோர்களை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர் படுத்த ப்படவில்லை வேண்டுமென்றே கால தாமதம் செய்து உள்ளார்கள்.
இதற்கு இடையில் முதல் தகவல் அறிக்கையில் அடுத்த மாவட்ட ரிப்போர்ட்டான ஜெபக்குமார் மற்றும் சென்னையில் வசிக்கும் வெளியிட்டாளர் பன்னீர்செல்வம் ஆகியோரையும் பட்டியலில் சேர்த்து விட்டார்.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்ட எனது தினக்கூலி ஆறுமுகம் சக்திவேல் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை  ஜனவரி 12 மற்றும் 13ஆம் தேதி 14 ஆம் தேதி நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. பின்பு 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்று வந்துள்ளார்கள்..
எனது திருச்சி மாவட்ட செய்தியாளர் ஜெபக்குமார் அவர்களுக்கு ஜனவரி 24ஆம் தேதி கண் அறுவை சிகிச்சை செய்வதற்கான தனியார் மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் விடுமுறை நாள் பார்த்து அதாவது ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி அளவில் திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள வீட்டில் கைது செய்தார்கள், பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆனந்தன் அவர்களும் தொடர்ந்து 24, 25, 26 ஆகிய நாட்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால் திட்டமிட்டு கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட ஜெபக் குமாரை பாடலூர் காவல் நிலையத்தில் வைத்து ஜட்டியோடு மற்ற கைதிகளோடு அடைத்துள்ளார்கள் இது மனித உரிமை மீறலாகும் பின்பு மதியம் 3 மணி அளவில் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு ஜெபக்குமார் அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தார்கள் (இது எதற்காக செய்ய வேண்டும்) வேறு ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு முயற்சி செய்து உள்ளார்கள்.
இதன் பின்பு பெரம்பலூர் ஜேஎம் இரண்டாவது நீதிமன்றத்தின் ஜெபக்குமார் மாலை 5 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார் அப்போது நீதிபதி அவர்கள் தனது சொந்த ஜாமனில் பிணையில் வெளியே விட்டார். பின்பு ஜனவரி 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஜெபக்குமார் அவர்கள் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பத்திரிக்கை ஆசிரியரையும் வெளியிட்டாளரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் பத்திரிகைகளை முடக்க வேண்டும் என்று தீவிரமாக இந்த நேரத்தில் செயல்பட்டுள்ளார்.
இதற்கு இடையில் ஜெபக்குமாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனிலிருந்து போன் நம்பர்களை எடுத்து சாமிநாதன் என்ற காவலர் சென்னையில் பார்சல் அனுப்பும் தினக்கூலியாக செயல்பட்டு வந்த முகமது சுலைமான் என்பவரை தொடர்பு கொண்டு ஆசிரியர் வெளியீட்டாளரை பற்றி  துருவி துருவி விசாரித்துள்ளார். பின்பு அவரிடம் இருந்து நமது அலுவலக அட்மின் பெண் ஊழியர் அவரின் அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு இரவு 9 மணிக்கு மேல் சாமிநாதன் அவர்கள் அலைபேசியில் அட்மின் பெண் ஊழியரிடம் ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் குறித்தும் குடும்பம் குறிக்கும் விசாரித்துள்ளார்.
இதன் பத்திரிக்கை வெளியிட்டாளரான பன்னீர்செல்வம் ஆகிய என்னை கைது செய்ய தீவிரமாக செயல்பட்டார் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் வி ஆனந்தன் அவர்களும் இதற்கு இடையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்று வந்துள்ளேன்.
பத்திரிக்கையை முடக்குவதற்கு முயற்சியில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளர் ஆனந்தன் கிராம நிர்வாக அதிகாரிகள் குமார் பாலுசாமி மற்றும் பொய்சாட்சி கூறிய கிராம நிர்வாக உதவியாளர் பெருமாள் ஆகியோர் மீது கடந்த. 29/1/2025 அன்று தேதியில் டெல்லி பிரஸ் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு தலைமை நிலைய செயலாளர் தலைமைச் செயலகம் ஆகியோர்களுக்கு புகார் அனுப்பப்பட்டது
மேலும் கடந்த தேதியில் இரண்டாவது முறையாக டெல்லி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா செகரட்டரி அவர்களுக்கு புகார் அனுப்பப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் குவாரி மற்றும் கிரஷர் குறித்து புகார் மனுக்கள்…
1. திருமதி. கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம். 10/12/2024 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
2. திரு. பெர்னாட் உதவி இயக்குனர் அவர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை பெரம்பலூர் மாவட்டம். அவர்களுக்கு 29/04/2025 புகார் அனுப்பப்பட்டுள்ளது.
3. திரு. இயக்குனர் அவர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் கிண்டி சென்னை 32, அவர்களுக்கு 29/4/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
4. திரு. இயக்குனர் அவர்கள் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகம் கிண்டி சென்னை 32. அவர்களுக்கு 25/8/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
5. திரு.அருன்ராஜ் ஐ.ஏ.எஸ் மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் மாவட்டம் அவர்களுக்கு 25/6/2025 அன்று புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
6. திரு.அருன்ராஜ் ஐஏஎஸ் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 28/6/2025 நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
7. திரு.மோகன் இயக்குனர் அவர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் கிண்டி சென்னை 32 அவர்களுக்கு  8/6/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
8. திருமதி. மிருணாளினி ஐஏஎஸ் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 8/9/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
9. திரு.டாக்டர் ஜெயந்தி ஐ.எப்.ஸ் தலைவர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 76 மவுண்ட் ரோடு கிண்டி- 32 அவர்களுக்கு 8/9/2025 புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
10. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெரம்பலூர் மாவட்டம் அவர்களுக்கு 8/9/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
11. ஞானசேகரன் இணை ஆணையர் அவர்கள் திருச்சி மண்டல இந்து சமய அறநிலைத்துறை திருச்சி அவர்களுக்கு  7/10/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
12. திரு. பி.என்.ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஆணையர்   இந்து சமய அறநிலைத்துறை சென்னை- 34 அவர்களுக்கு 7/10/2025 அன்று புகார் அனுப்பப்பட்டுள்ளது.
13. திருமதி. மிருணாளினி ஐ.ஏ.எஸ் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 7/10/2025 அன்று புகார் நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கறிஞரின் சட்ட அறிக்கை
14. The Additional chief Secretary
The department Of Natural Resources,
The Secretariat St. George Fort,
Chennai-600009.

15. The Additional Chief Secretary,
The Deparment Of Climate Change & Forest Department,
The Secretariat, St,George Fort,
Chennai-600009

16. The Director,
The Geology And Mining Dept,
Guindy, Chennai-600032

17. The Chairman,
Tamilnadu Pollution Control Board,
76, Mount Road, Guindy
Chennai-600032.

18. The District Collector,
Collector Office,
Perambalur-621212.

19. The Assistant Director,
The Geology And Mining Dept,
Perambalur-621212.

20. The Engineer,
District Environment Control Board,
Tamilnadu Environment Control Board,
No.175L/10, Flat No. C2 & C4,
Pallivasal Street, Port,
Perambalur-621220.

21. The Commissioner,
Hindu Religious and Charitable Endownments Dept,
No.119, Uthamar Gandhi Road,
Nungambakkam,
Chennai-600034.

22. The Joint Commissioner,
Tirchy Zone HR&CE Office,
Theppakulam Street,

Near Kariya Malleeswarar Thirukoil,

Thiruvanaikaval, Trichy-620005.

23. The District Environment Engineer,
District Environment Control Board,
Tamilnadu Environment Control Board,
S.F. No. 18/6, UDRSF No. 18/15,
Flat No. 9-10, Port Village,
Perambalur-621220

பொய் வழக்கு போட்ட பின்பு கொடுத்த புகார்கள்.
22. திரு. தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை -9 அவர்களுக்கு 29/1/2026 அன்று புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
23. திரு.  செகரெட்டரி அவர்கள் டிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நியூ டெல்லி அவர்களுக்கு.29/1/2025 புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
24. உயர்திரு தலைமைச் செயலாளர்கள் தலைமைச் செயலகம் சென்னை -9 அவர்களுக்கு இரண்டாவது முறையாக கடந்த18/2/2026 அவர்களுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது
25. திரு செக்ரெட்டரி அவர்கள் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நியூ டெல்லி அவர்களுக்கு இரண்டாவது முறையாக கடந்த 19/2/2026 அன்று புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.