சாதி மத மோதலை உருவாக்கும் எம்.எல்.ஏ கோவிந்தசாமி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பொமல்லாபுரம் பேரூராட்சி அருகில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆலயம் உள்ளது
இந்த ஆலயம் மற்றும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கையகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர்
இந்த   பொன்முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைகளை அரசுடமையாக மாற்றி இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும்
சாதி தீண்டாமை ஆலயத்தில் நடைபெறுவதாக வந்த புகாரியின் பேரில் எஸ்சி எஸ்டி ஆணையம் மற்றும் நீதிமன்றம் இந்த கோயிலை இந்த அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டது
நீதிமன்ற ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று காலை அறநிலையத்துறை அதிகாரிகள் அரூர் டிஎஸ்பி தலைமையில் ஆலயத்திற்கு சென்ற போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அப்பாவி பொதுமக்களையும், நீதிமன்றம், ஆணையம் உத்தரவையும்   மதிக்காமல் அப்பாவி மக்களின் சாதி மத உணர்வை தூண்டும் விதத்தில் பேசியது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது அவர் பேசும்போது சும்மா இருப்பவன் 1008 பெட்டிசன் போடுவான்…! உதாரணத்துக்கு ஒரு பெட்டிஷன் வந்துச்சுன்னு வச்சுக்கங்க!!
ஒரு தர்கா மீதோ சர்ச் மீது பெட்டிசன் போட்டா நாம்ப எடுக்க முடியுமா!!!
ஒன்றுமில்லை பக்கத்தில் இருக்கிற லூர்துபுரத்து சர்ச் பல்லாயிரக்கணக்கானவங்க வராங்க,!!!
லட்சக்கணக்கானவங்க வராங்க!!! நாம எடுக்க முடியுமா!!! உண்டியல் உள்ள இல்ல பாத்தீங்களா
இப்பயும் கீதா பாருங்க!!
உண்டியல் வைக்கிறது இல்ல!!!
யாரிடமும் டொனேஷன் வாங்குவதில்லை!!!
அப்புறம் எப்படி என்ன இருக்குது வரவு செலவுக்கு யாருக்கு வரவு செலவு கொடுக்கிறது!!!
அறங்காவலர் குழு தலைவர் நியமிக்க முடியாது
இது கவர்மெண்ட் கோயில் கிடையாது!!!!
இத வந்து பெரியவர்கள் சொத்து வாங்கி வச்சது!!!
எடுக்குறேன் என்று உத்தரவு போட்டது தப்பு!!!
ஹெச் ஆர் என் சி டேக் கவர் பண்றேன் போட்டது தப்பு!!!!
என் காசு நான் செலவு பண்றேன்!!!
என் காசு நான் கணக்கு  கொடுக்கிற அவசியம் இல்லை!!! இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பேசினார்
அப்பாவி பொதுமக்களிடம் சாதி மத மோதலை உருவாக்கும் விதத்திலும் நீதிமன்றம், எஸ்சி,எஸ்டி ஆணையத்தின் உத்தரவை மதிக்காமலும் ஆணவத்தோடு பேசிய பேச்சுக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நமது சிறப்பு நிருபர்