திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி
வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் 1913-2013 வரை 18 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. 2013-2025 க்கு இடையே 13 ஆண்டுகளில் மேலும் 21 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் சேர்க்கப்பட்டது. இது எப்படி நடந்தது? இதேபோல் தமிழகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி பேசினால், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. வக்பு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். மேற்பார்வையிடும் நிர்வாக பணியை மட்டும் அதி காரிகள் செய்வார்கள் என்று வக்பு மசோதா மீதான விவகாரத்தில் மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டில் மூன்றாவது பெரிய நில உடைமையாளராக வக்பு வாரியங்கள் இருக்கி ன்றன. நாட்டிலுள்ள முஸ்லிம் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வாகி பதில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும் வக்பு வாரிய சொத்துக்கள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்தவும் துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும், வக்பு வாரிய சட்டம் 1995இல் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பார்லிமென்ட் கூட்டு குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது.
பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான ஜே பி சி ஆறு மாதங்கள் ஆய்வு செய்து தனது அறிக்கையை கடந்த ஜனவரி 30 லோக்சபா நாயகரிடம் சமர்ப்பித்தது. கூட்டுக் குழுவின் அறிக்கை பார்லியின் இரு சபைகளிலும் கடந்த பிப்ரவரி 30 ல் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் சிஜிஜூ, மசோதாவின் பெயர் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 1995 என மாற்றப்படுவதாக அறிவித்தார். மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதல் நேரம் விவாதிக்கப்பட்டது.
தவறான பார்வை
விவாதத்தில் காங்கிரஸின் கவுரவ் கோகய் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுகவின் ஆ.ராசா உட்பட பலர் பேசினர். எல்லா கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. விவாதத்தில் மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:  மசோதாவை நான் ஆதரிக்கிறேன் மதியம் 12 மணியிலிருந்து இது தொடர்பாக நடந்த விவாதங்களை நான் கூர்ந்து கவனித்தேன். எதிர்க்கட்சி எம்பிக்கள் இடம் இந்த மசோதா மீது பல தவறான கருத்துக்கள் உள்ளன அதற்கு அரசியல் தான் காரணம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மத நடவடிக்கைகளில் தலையிடுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. வக்பு வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது. அந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை.
முஸ்லிம் அல்லாதவர்
வக்பு நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் வக்பு வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாகப் பணியை மட்டும் அதிகாரிகள் செய்வார்கள். வக்பு சொத்து நிர்வாகத்தில் குளறுபடி செய்வோரை கண்காணிக்கும் பணியை அதிகாரிகள் செய்வார்கள். இந்த விவகாரத்தில் முஸ்லிம்களை பயன்படுத்தி ஓட்டு அரசியல் நடக்கிறது.  2013ல் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ‘நில அபகரிப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்களை சிறையில் அடைக்க கடும் சட்டம் தேவை’ என்றார் லல்லுவின் ஆசையை பிரதமர் மோடி இப்போது நிறைவேற்றியுள்ளார்.
13 ஆண்டுகளில்
1913-2013 வரை வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் 15 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. 2013- காலகட்டத்தில் 13 ஆண்டுகளில் மேலும் 21 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் சேர்க்கப்பட்டது. இது எப்படி நடந்தது? இதைப் பற்றி பேசினால் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
நமது சிறப்பு நிருபர்