10 லிட்டர் கள்ளு இலவசம்

1. குடும்ப அட்டைக்கு இலவச கள்ளு வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்கப்படும்.

2. தென்னை மற்றும் பனை விவசாயிகளுக்கான பாதுகாப்பு தமிழகத்தின் அனைத்து விவசாய நிலங்களிலும் உள்ளதென்னை மரங்களும், பனை மரங்களும் அரசால் குத்தகைக்கு எடுக்கப்படும்.

அவற்றில் இருந்து பெறப்படும் கள்ளு (தீர்த்தம்) அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்..
3. விவசாயிகளுக்கான பொருளாதார முன்னேற்றம் கள்ளு உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் ஏற்படும் கடன் உதவிகள் வழங்கப்படும் அந்தக் கடன், கள்ளு கொள்முதல் செய்யும் போது கட்டணமாக கழிக்கப்படும் விவசாயிகள் வறுமையிலிருந்து மீண்டு பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள்.

4. அரசு மூலம் விற்பனை அமைப்பு அரசு நேரடியாக கள்ளை கொள்முதல் செய்து அரசு மதுபானக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மாவட்டம் தோறும் குளிர்பான கிடங்குகள் அமைக்கப்படும் தற்போதுள்ள கிடங்குகள் ஒரு பகுதி இதற்காக பயன்படுத்தப்படும்.

5. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இந்தத் திட்டத்தில் அரசு பணியில் அமர்த்தப்படுவர் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

6. தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து கள்ளு இறக்கும் தொழிலாளர்கள் பனை மற்றும் தென்னை சார்ந்த தொழிலாளர்கள் இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவர் அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

7. இணை பொருட்கள் கொள்முதல் மற்றும் ஏற்று மதி பனை மற்றும் தென்னை மூலம் தயாரிக்கப்படும் வெல்லம் நாட்டு சர்க்கரை பிற பொருட்கள் இவை அனைத்தையும் அரசு கொள்முதல் செய்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

8. மரபு வளங்களின் பாதுகாப்பு இந் தத் திட்டத்தின் மூலம்: பனை மரங்களும் தென்னை மரங்களும் அழிவிலிருந்து காக்கப்படும் மண் வளமும் பாதுகாக்கப்படும்

9. கட்டுப்படுத்தப்பட்ட மது கொள்கை கள்ளு உற் பத்தி மற்றும் விநியோகம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இதன் மூலம்: கலப்படம் தவிர்க்கப்படும் மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

10. சட்ட பின்னணி 01.-01-.1987 முதல் தமிழகத்தில் கள்ளு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை காரணம்: கள்ளில் கலப்படம் செய்ததால் மக்கள் பாதிப்பு கட்டுப்படுத்த இயலாத உற்பத்தி அமைப்பு எனினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கள்ளு இறக்குவதற்கு தடை இல்லை.
11. பிற மாநிலங்களில் நடைமுறை இந்தத் திட்டம் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளது.

12. திட்டத்தின் முக்கிய இலக்குகள் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க அரசுக்கு வருமானம் உருவாக்க

முடிவுரை:
நமது நிலம், நமது வளம், நமது மக்கள் – இவற்றின் வளர்ச்சியே எங்கள் நோக்கம். நம்முடைய பொருளாதாரத்தை நாமே உயர்த்த வேண்டும்.