பாப்பிரெட்டிப்பட்டியில் தாய்மார்களின் ஓட்டு திமுகவிற்கு வெற்றி முகத்துடன் பழனியப்பன்

236 சட்டமன்ற தொகுதிகளில் 60 வது தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி 236 தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 60வது சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி இந்த தொகுதியில் 1,27,836 லட்சம் ஆண்கள், 127,862 லட்சம்பெண்கள், மூன்றாம் பாலினம் 14என மொத்தம் 2,55,712 லட்சம்  வாக்காளர் உள்ளனர் 322 பூத்துகளைக் கொண்டுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தற்போது மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனுபவம் வாய்ந்த   பல அரசியல் களம் கண்ட பி,பழனியப்பன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
அதிமுக சார்பில் தர்மபுரியில் பிரபலமான அதிமுக அரசியல் வாதியாக இருக்கும் எஸ், ஆர், வெற்றிவேலின் மனைவி மரகதம் வெற்றிவேல் புதிதாக தேர்தலில் களம் காண்கிறார்
மற்ற கட்சிகளான தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் இதரக் கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 14 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்
திமுக வேட்பாளர் பழனியப்பனை பற்றி சொல்லத் தேவையில்லை தமிழக அரசியலில் பிரபலமானவர் பல தேர்தல்கள் களம் கண்ட வியூகம் வகுப்பாளராக இருந்துள்ளார் பலம் கட்சியின் சின்னம் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் உதவும் குணம்
அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றிவேல் தேர்தலுக்கு புதிது அனைத்தும் இவரது கணவர் எஸ் ஆர் வெற்றிவேலை சாரும்  அவரது கணவர் தர்மபுரி அதிமுகவில் அசைக்க முடியாத தர்மபுரி சக்தி என கூறலாம் இவரது பலவீனம் இவர் மீது குற்ற வழக்குகள் 9 மதிக்கோன் பாளையம் காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,, சொந்தக் கட்சி உறுப்பினரை கொலை செய்தார் என்பதே குற்றச்சாட்டு இவருக்கு  பலவீனம், நீதிமன்றத்தில்  குற்ற வழக்குகள் உள்ளது
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் சாதி ரீதியாக பார்த்தால் வன்னியர் 40% பட்டியல் சமூக மக்கள் 25 %சதவிகிதம் வெள்ளாளர் கவுண்டர் 8% சதவீதம் இஸ்லாமியர்கள் 8% சதவிகிதம் கிறிஸ்தவர்கள் 5% குருமன்ஸ் 4% சதவீதம் போயர் 4% சதவிகிதம் மற்ற இதர சமூகத்தை சார்ந்தவர்கள் என வாழ்வதாக கூறப்படுகிறது
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக அணியில் பட்டியல் சமூக பெருமக்களின் ஆதரவு பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதான கட்சியாக இந்த தொகுதியில் உள்ளது
தொகுதியில் பெருமளவு வாழக்கூடிய சமூகமான வன்னியர் ஆதரவு பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியில் முக்கிய இடம் வகிக்கிறது
அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகள் கூட்டணியில் வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளர்
பாப்பிரெட்டிப்பட்டி மேற்குப் பகுதியான தர்மபுரி ஒட்டிய பூத் எண் 1 நடுஅள்ளியில் துவங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள் தொடர்ச்சியாக குண்டல்பட்டி செங்கல்மேடு, கிருஷ்ணாபுரம், மோட்டுப்பட்டி, சவுலூர், முத்துப்பட்டிபாளையம் பள்ளி, குறிஞ்சிப்பட்டி, குப்பூர், ஆளோதர்மபுரி, ராஜா பேட்டை, சோலைகொட்டாய், அக்கமணஅல்லி, ஓடசல்பட்டி என தொடர்ச்சியாக 100 பூத்துகளில் பாமக வலுவான வாக்கு வங்கி கடந்த காலங்களில் வைத்திருந்தது தற்போது அந்தப் பகுதியில் திமுக அரசின் மகளிர் நல திட்டங்கள் வெகுவாக பாமக வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது
அப்பகுதி பெண்கள் தினம்தோறும் தர்மபுரிக்கு வியாபாரம் கடைகளில் வேலைக்கு செல்லுதல் போன்ற தேவைக்கு பேரூந்து பயணத்தை நம்பி இருந்ததால் தற்போது இலவச கட்டணமில்லா பேருந்து பெண்களிடம் திமுக மீது பெரும் மதிப்பை உருவாக்கி உள்ளது மாதம் தோறும் உதவித் தொகை பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளது
இப்பகுதிகளில் திமுக கடந்த காலத்தில் வாங்கிய வாக்குகளை விட 20 சதவீத வாக்குகள் அதாவது 100 வார்டுகளில் 40% வரை வாக்குகள் வாங்கக்கூடிய நல்லதொரு மாற்றம் திமுகவிற்கு உருவாகியுள்ளது திமுக வேட்பாளர் பி பழனியப்பன் வாக்கு சேகரிக்க சென்ற போது பெண்கள் பெருமளவு திரண்டு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது திமுக கூட்டணிக்கான வலுவான விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைந்து திமுக கூட்டணிக்கு வாக்குகள் பூத்து எண் 100க்கு மேல் திமுக சம பலத்துடன்  அதிமுகவிடம் இருந்து வாக்குகளை பிரித்துக் கொள்கிறது இப்பகுதிகளிலும் வன்னியர் அல்லாத மாற்று சமூக மக்கள் பெருமளவு திமுகவை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர்
கடத்தூர், புதுரெட்டியூர், ரேகடஹள்ளி, சுங்கரஹள்ளி, பொம்மிடி, தாசரஹள்ளி, சிந்தில்பாடி போன்ற பகுதிகள் பூத் எண் 100 இல் இருந்து திமுக அதன் தோழமைக் கட்சியான விடுதலை சிறுத்தைகளுடன் இணைந்து பூத் எண் 250 வரை அதிமுக மற்றும் திமுக கூட்டணி சம பலத்துடன் வாக்கு வங்கியை வைத்துள்ளனர் பூத் எண் 260இல் திமுக கூட்டணிக்கு வலுவான வாக்கு வங்கியை தொடங்கும் இடமாக உள்ளது.
பில்பருத்தி, பொ, மல்லாபுரம், பண்டாரசெட்டி பட்டி,துரிஞ்சிப்பட்டி,வட சந்தையூர், தென் சந்தையூர், லூர்து புரம், பி, பள்ளிப்பட்டி   போன்ற பகுதிகளில் திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ இஸ்லாமியர்களின் ஓட்டுகள் வலுவான பகுதியாக உள்ளது. பையர் நத்தம், தேவராஜபாளையம், பூத நத்தம், மெனசி, வெங்கடசமுத்திரம், ராமியம்பட்டி தென்கரைக்கோட்டை, பெத்தூர், கோபிநாதம்பட்டி இருளப்பட்டி, புதுப்பட்டி, மெனசிபூதநத்தம் மோளையானூர், பூனையானூர், பாப்பிரெட்டிப்பட்டி என ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் பூத் எண்  322 கடைசி வரை  திமுக அதன் கூட்டணி கட்சியோடு வெற்றியை தீர்மானிக்கும் வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ளது, திமுகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக இந்தப் பகுதியில் உள்ளது
அதிலும் குறிப்பாக திமுக வேட்பாளர் பழனியப்பனோடு நெருக்கம் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது இப்பகுதிகளில் அனைத்து விசேஷங்கள், கோவில் பண்டிகைகள், குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்வதால் செல்வாக்கு மிக்க பகுதியாக இப்பகுதி உள்ளது இந்தப் பகுதிகளில் அதிமுகவை விட 30 சதவீத வாக்குகளை கூடுதலாக பெறக்கூடிய நிலையில் திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் வெற்றி முகத்துடன் இருக்கிறார்.
நமது சிறப்பு நிருபர்