தேர்தல் கமிஷன் வந்து இவரை இடம் மாற்றியது சென்னை கமிஷனர் அருண் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தினமும் எழுந்து கொண்டே இருந்தது குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவரது செயல்பாடுகள் சுத்த மோசம்
ஏனென்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு அமைச்சரும் ஒரு முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரும் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் தவறான குற்றவாளிகளை பிடித்ததும் மட்டுமல்லாமல் அவர்களை என்கவுண்டர்களும் செய்திருக்கின்றனர் இவர் எந்த அளவுக்கு மாறி போய்விட்டார் என்றால் திமுகவின் மாவட்ட செயலாளர் போல ஆகி ஒரு தரப்பாகவே இவர் செயல்பட்டார்
திமுகவிற்கு எதிராக ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி விட்டார்கள் என்பதற் காகவே பல்வேறு youtubeபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தவரும் இவர்தான் அவர்கள் மீது சம்பந்தமே இல்லாமல் குண்டர் சட்டத்தை போட்டு அவர்களை சித்திரவதை செய்ததும் இவர் தான் முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் ஏவலாளியாக இவர் மாறியதால் ஆளுங்கட்சிக்கு கொண்டாட்டம் இவரை தொடர்ந்து அதே பதவியில் நீண்ட காலம் வைத்திருந்தது இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை
எவ்வளவோ பேர் குற்றச்சாட்டுகளை கூறியும் எதையுமே அரசு ஏறெடுத்து பார்க்கவில்லை ஒருவேளை திமுக வெற்றி பெற்றால் இவர் மறுபடியும் அதே பதவிக்கு வருவார் என நம்பலாம் இவர் மீது போலீஸ் துறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் DGP இடம் தான் இருக்கின்றது. அதற்காகவே நிரந்தர DGPயை போடாமல் ஆறு மாதத்திற்கு மேல் ஆளுங்கட்சி இழுத்தடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் கூட சவுக்கு சங்கர் மீது குண்டர் வழக்கை நான்காவது முறையாக போட்டுவிட்டு தான் இவர் பதவியை விட்டு விலகினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அந்த அளவு ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டார் சென்னையில் திமுகவிற்கு ஓட்டு குறைந்து சில தொகுதிகளில் அது தோற்கும் என்றால் நிச்சயம் அருனின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கும் சவுக்கு சங்கர் வீட்டில் அவரது டைனிங் டேபிள் வரை சென்று வீடு முழுவதும் சேற்றையும் மலத்தையும் அள்ளி வீசினார்கள் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை இத்தனைக்கும் அவர்கள் பேஸ்புக்கில் லைவ் போட்டு இந்த விஷயத்தை செய்தனர் அப்படி என்றால் எவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் ஒருவரை கூட கைது செய்யவில்லை
இனி இதுபோன்ற கமிஷனர்கள் சென்னை நகருக்கு வந்து விடவே கூடாது என்பதுதான் அப்பாவி மக்களின் எண்ணமாக இருக்கின்றது.
நமது சிறப்பு நிருபர்
