சீனா தனது சல்பூரிக் ஆசிட் ஏற்றுமதியை மே 2026 முதல் மூடப் போகிறது…
ஈரான் – இஸ்ரேல் மோதலால் கடல் வழிப் பாதைகள் முடங்கிக் கிடக்கின்றன. இது ஏதோ ரசாயனக் கடையில் நடக்கும் பிரச்சினை அல்ல. இது நம் தட்டில் இருக்கும் சோறு, வாகனத்தில் இருக்கும் பேட்டரி, நம்முடைய கையில் இருக்கும் செல்போன் என அத்தனையையும் பாதிக்கும் ஒரு பெரும்“” பொருளாதாரச் சுனாமி!.”””
“சல்பூரிக் அமிலம் “தொழிற்சாலைகளின் “இரத்தம்“…??!!! புவிசார் அரசியலில் “சல்பூரிக் ஆசிட்” ஒரு பலம் வாய்ந்த கருவி.
தரவுகளின்படி, கடந்த ஆறு வாரங்களிலேயே இந்தி யாவில் இதன் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 149 டாலரிலிருந்து 278 டாலராக (சுமார் 87%) உயர்ந்துள்ளது.
சல்பூரிக் ஆசிட் என்பது வெறும் ரசாயனம் மட்டுமல்ல, இது ஒரு அடிப்படைத் தேவை ((Basic Input).
இந்தியா அதிகப்படியான “DAP மற்றும் “”NPK””உரங்களைத் தயாரிக்கிறது… இதற்கு சல்பூரிக் ஆசிட் முதுகெலும்பாக உள்ளது. ஆசிட்டின் விலை உயரும் போது உரங்களின் விலை உயர்த்தும்..
உரங்களின் விலை உயர்ந்தால் விவசாயிகளுக்குச் செலவு அதிகமாகும். இறுதியில் சந்தையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயரும்..
“வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள்” தயாரிப்பில் இதன் பங்கு அதிகம் என்பதால் மருந்துகளின் விலை உயரும்..
உலோகத் துறை… தாமிரம் Copper, துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்பு சுத்திகரிப்பிற்கு இது அவசியம்.
பேட்டரிகள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுவதால், EV துறையிலும் இதன் தாக்கம் இருக்கலாம்.
ஜவுளித் தொழில்,சலவைத் தூள், மற்றும் காகித ஆலைகளும் பாதிக்கப்படும்….
கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் போது கந்தகம் போன்ற அசுத்தங்களை நீக்க இது பயன்படுகிறது. சுத்திகரிப்புச் செலவு கூடினால் அது எரிபொருள் விலையும் கூடும்..
சல்பூரிக் ஆசிட் தயாரிக்க கந்தகம் (Sulphur) மிக அவசியம். இந்தியாவிடம் “”இயற்கை கந்தகச் சுரங்கங்கள்” கிடையாது.
தூத்துக்குடி”” ஸ்டெர்லைட் ஆலை”” இயங்கிய போது, இந்தியாவின் மொத்த சல்பூரிக் ஆசிட் தேவையில் பெரும் பகுதியை அது நிறைவு செய்தது. அது மூடப்பட்ட பிறகு, அந்த இடைவெளியை நிரப்ப இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது..
தமிழகத்தின் வரலாற்றில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது ஒரு ஆறாத வடு. தங்கள் மண்ணையும், நீரையும் காக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்த அந்த 13 ஆன்மாக்களின் ரத்தம், இன்றும் நம் மனசாட்சியைத் தட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் போராட்டமும், தியாகமும் மகத்தானது…
ஒரு பன்னாட்டு நிறுவனம், மக்களின் உயிருக்கு மதிப்பளித்து அன்றே உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தால், 13 உயிர்கள் போயிருக்காது; இந்தியாவும் இன்று சீனாவின் காலடியில் கையேந்தி நிற்காது
சீனாவில் ஸ்டெர்லைட்டை விட பல மடங்கு பெரிய தாமிர உருக்காலைகள் இயங்குகின்றன. அங்கே மட்டும் சாத்தியம்…எப்படி..??!!
சீனாவில் ஒரு தொழிற்சாலை என்பது தனி ஒரு கட்டிடமாக இருப்பதில்லை. சல்பூரிக் ஆசிட் தயாரிக்கும் ஆலைக்கு அருகிலேயே, அந்த ஆசிட்டைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் ஆலை அல்லது ஜவுளி ஆலை இருக்கும்.
இதனால் கழிவுகள் நீண்ட தூரம் கடத்தப்படுவதில்லை…
ஒரு ஆலையின் ‘கழிவு’, அடுத்த ஆலையின் ‘மூலப்பொருள்’. இது மாசைக் குறைப்பதோடு லாபத்தையும் கூட்டுகிறது…
சீனாவில் உள்ள பெரும்பாலான பெரிய ஆலைகளின் புகைபோக்கிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளியாகும் புகையின் அளவு மற்றும் தரம் குறித்த தரவுகள் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆன்லைனில் தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
அளவைத் தாண்டினால், தானாகவே அபராதம் விதிக்கப்படும் அல்லது மின்சாரம் துண்டிக்கப்படும்…
நம் நாட்டில் ‘நம்பிக்கை இல்லாமை’ (Trust Deficit) தான் பெரிய பிரச்சனை. அங்கே ‘தொழில்நுட்பம்‘ அந்த நம்பிக்கையை உருவாக்குகிறது.
சீனா தனது நகரங்களைக் கட்டமைக்கும் போதே, ‘தொழில்துறை மண்டலங்களை’ (Industrial Zones) தெளிவாகப் பிரித்துவிடுகிறது. அங்கே தொழிற்சாலைகளுக்கு மிக அருகில் மக்கள் குடிபுக அனுமதிப்பதில்லை.
தூத்துக்குடியில் ஆலைக்கும் குடியிருப்புக்கும் இடையே இருந்த மிகக் குறைந்த இடைவெளிதான் பெரிய விபரீதங்களுக்குக் காரணமாக அமைந்தது.
சீன ஆலைகள் சல் பூரிக் ஆசிட்டைத் தயாரிப் பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அதிலிருந்து கிடைக்கும் ஜிப்சம் (Gypsum) போன்ற துணைப் பொருட்களைக் கொண்டு சிமெண்ட் மற்றும் செங்கல் தயாரிக்கும் ஆலைகளை அங்கேயே அமைத்துவிடுகிறார்கள். இதனால் நிலத்தில் கொட்டப்படும் கழிவு ‘சுழியம்‘ (Zero) ஆக்கப்படுகிறது. சீனாவில் ஆலை என்பது நாட்டின் பலம். அங்கே சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டால் அந்த அதிகாரியின் ‘தலை’ உருளும். அதனால் ஆலைகள் பயந்து நடக்கின்றன.
இந்தியாவில் ஆலை என்பது சிலருக்கு லாபம்,…. விதிகளை மீறினால் ‘லஞ்சம்‘ கொடுத்துத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் ஆலைகளுக்கு இருக்கிறது.
சீனா ஸ்டெர்லைட்டைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆலைகளை வைத்துக்கொண்டு உலகத்தையே மிரட்டுகிறது. நாம் ஒரே ஒரு ஆலையை மூடிவிட்டு, இன்று அந்தச் சீனாவிடமே ஆசிட் கேட்டு நிற்கிறோம்..
மக்களின் உயிரைப் பாதுகாக்கச் சீனாவைப் போல “கடுமையான சட்டமும், நவீனத் தொழில்நுட்பமும்“ நமக்குத் தேவை.. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே அதிக சல்பூரிக் ஆசிட் தயாரித்து, உலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்த ஒரு மாநிலம் நம் தமிழ்நாடு. அதே சமயம், இன்று ஒரு லிட்டர் ஆசிட்டிற்காகச் சீனாவைச் சார்ந்து நின்று, அவர்கள் கதவை மூடியதும் நிலைகுலைந்து போயிருப்பதும் நாம்தான்.
நாடுகள் முட்டி மோதுவது ஆயுதங்களால் மட்டுமல்ல, ‘அவசியப் பொருட்களால்’. ஒரு நாடு தனது அடிப்படைத் தேவையில் ‘தற்சார்பு’ (Self-reliance) இழக்கும் போது, அது மறைமுகமாக அடிமையாகிறது. நாம் இன்று சீனாவின் பொருளாதார அடிமையாகி நிற்கிறோம்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இந்தியாவிற்குத் தேவை.ஆனால், அது மக்களின் உயிரையும், இயற்கையையும் பணயம் வைத்து இருக்கக் கூடாது. “வளர்ச்சி வேண்டுமா? வாழ்க்கை வேண்டுமா?” என்ற கேள்விக்கு இடமில்லாமல், “சுற்றுச்சூழலோடு கூடிய வளர்ச்சியே தேவை..
நமது சிறப்பு நிருபர்
