தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் திரு.சேஷன் அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்தார் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியவர் என்ற பெருமை உண்டு.
தேர்தல் ஆணையம் என்பது தனி ஆணையம் இல்லை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் முடிந்த பின்னர் விடைபெறும் இதுதான் தேர்தல் ஆணையம்.
இது குறித்து ஒரு சிறப்பான பார்வை பார்ப்போம்: தமிழ்நாட்டுக்கு என்று தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டு வருகிறார் இவர் ஐஏஎஸ் அதிகாரி (அர்ச்சனா பட்டணம் இந்த பதவியில்) உள்ளார். இந்த கட்டுரை திருமதி அர்ச்சனா பட்ட நாயகி எதிரானது இல்லை பொதுவானவை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது இதில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் நூற்றுக்கு 90 சதவீதம் தமிழக அரசு அதிகாரிகள் 10 சதவீதம் மத்திய அரசின் அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாது இதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இவர்கள் கட்டுப்பாட்டில் மத்திய அரசு அதிகாரிகளை கையில் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து விடுகிறார்கள்.
தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் 3000 வரை பணப்பட்டுவாடா செய்துள்ளது இதை தேர்தல் அதிகாரிகள் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள் கொடுப்பதை தடுக்க முடியவில்லை வாங்குவதையும் தடுக்க முடியவில்லை.
இது குறித்து எதிர்க்கட்சிகள் (திமுக அதிமுகவை தவிர) புகார் கொடுத்தாலும் நேரடியாக பிடித்துக் கொடுத்தாலும் அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை.
இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை அதாவது பணம் கொடுப்பவர்களுக்கு பயமே இல்லை அந்த அளவுக்கு தாராளமாக தண்ணீராக இறக்கிறார்கள் தேர்தல் ஆணையத்துக்கு பொய்யான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்கிறார்கள் இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளார்கள். இப்போது சொல்லுங்கள் இவர்கள் தேர்தல் அதிகாரிகளா திராவிட கட்சிகளின் அதிகாரிகளா என்று தேர்தல் அதிகாரிகளை பார்த்து திமுக அதிமுக கட்சி செயலாளர் பயமே இல்லை ஏனென்றால் இவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் தொல்லை கொடுப்பார்களோ என்ற பயம் அவர்கள் மனதில் வாட்டியிருக்கிறது ஏனென்றால் இவர்களை விட்டால் வேறு நாதியில்லை என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
எடப்பாடி பழனிச் சாமி பத்தாயிரம் கூப்பன் மு.க.ஸ்டா லின் எட்டாயிரம் கூப்பன் நடிகை விஜய் அள்ளி விடுகிறார் இந்த கூப்பன் குறித்து தேர்தல் ஆணையம் ஏன் எடப்பாடி பழனிச்சாமி விஜய் மீது வழக்கு தொங்கவில்லை இந்த கூப்பனை விநியோகம் செய்தவர்களை தேர் தல் அதிகாரிகள் பிடித்தார்கள் பிடித்தவர் மீது வழக்கு செய்து நீதிமன்றத்தில் ஆஜராகி ஏன் சிறையில் தள்ளவில்லை பறக்கும் படை என்று ஒன்று இவர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை சாதாரண மக்களை கொடுமைப்படுத்துகிறது ஆனால் கரை வேட்டி கட்டிய அவனை கொடுமைப்படுத்தவில்லை.
இந்த பறக்கும் படை அதிகாரிகளும் தமிழக அரசு அதிகாரிகள் தான் ஒன்றும் வானத்தில் இருந்து வரவில்லை இவர்களுக்கு கூட ராணுவ அதிகாரிகள் துணையாக நிற்கிறார்கள்.
தேர்தல் முடிந்தால் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இருக்கா இல்லையா என்று தெரியாது உடனடியாக டெல்லி சென்று விடும் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் திரும்பி இந்த ஆணையம் மீண்டும் வரும் அதுவரை எங்கே இருக்கு என்று தெரியாது. தேர்தல் நேரத்தில் பிடிபட்ட பணம் பதியப்பட்ட வழக்கு குறித்து வாய் திறக்காது அப்படியே அது கிடப்பில் தான் உள்ளது இதுவரை தேர்தல் விதிமுறைகள் மீறி வழக்கு பதிவு செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப் படுத்தவில்லை தண்டனை வழங்கவில்லை ஏதாவது வரலாறு உண்டா என்று பாருங்கள்.
இது ஒரு புறம் இருக்க ஓட்டு இயந்திரம் இதுலயும் கோல்மால் நடைபெறுகிறது இதையும் அதிகாரியில் வேடிக்கை பார்க்கிறார்கள் ஆக மொத்தம் உண்மையான தேர்தல் வருங் காலத்தில் நடைபெறாது எல்லாமே திராவிட ஆட்சியாளர்களின் தேர்தல் ஆணையமாகவே செயல்படுகிறது..
சாதாரண அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் தேர்தலில் சுயேச்சையாக கூட போட்டியிட முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி அதிகமாக உள்ளது.
1. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் முதலில் தேர்தல் செலவுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய வங்கிக் கணக்கை துவங்க வேண்டும் அதுவும் பழைய வங்கி கணக்கு செல்லாது புதிய வங்கிக் கணக்கை தூங்க வேண்டும்.
2. தொகுதி மாறி போட்டியிட்டால் ஓட்டு எந்த தொகுதியில் உள்ளதோ அந்த தொகுதி அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
3. போட்டியிடுபவர் தினந்தோறும் தேர்தல் ஆணையத்திற்கு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்வதற்கு தனியாக ஒரு நபரை நியமனம் செய்ய வேண்டும்.
4. வேப்பு மனு தேர்தல் ஆணையர்கள் வழங்குவார்கள் அந்த படிவத்தை வைத்து வழக்கறிஞரை பார்த்து தட்டச்சு செய்து மனுவை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்
5. இந்த மனுவில் உறுதிமொழி ஆணையர் பக்கம் பக்கமாக கையெழுப்பும் விட்டு முத்திரை குத்த வேண்டும்.
6. முன்பணமாக ரூபாய் பத்தாயிரம் தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டும்.
7. கட்சியின் வேட்பாளர் என்றால் அந்த தொகுதிக்கு உட்பட்டவர் ஒருவர் முன்மொழி ந்தால் போதும். இதே சுயேட்சை வேட்பாளர் என்றால் அந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் 10 பேர் உறுதிமொழி கொடுக்க வேண்டும் அவர்களின் வாக்காளரர் அடையாள அட்டையை நகலெடுத்து இணைக்க வேண்டும்.
8. இதையெல்லாம் தயார் செய்து அந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்துனர் அலுவலகத்திற்குச் சென்று சரி பார்க்க வேண்டும் இதை அதிகாரிகள் செய்வார்கள் திருத்தம் இருந்தால் மீண்டும் தயார் செய்ய வேண்டும்.
9. இந்த வேப்பு மனதில் வேட்பாளர் தன்னுடைய சொத்து பட்டியல் அசையும் சொத்து அசையா சொத்து தற்போது கையிருப்பு பணம் மற்றும் மனைவியின் சொத்து பட்டியல் என்று அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். மற்றும் தொழில் தற்போது உள்ள கடன் என்று அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
10. இந்த வேட்புமனுவோடு வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு நகல் மற்றும் குடும்பத்தாரின் வாக்காளர் அட்டை பான் கார்டு ஆதார் கார்டு நகல்கள் இணைக்க வேண்டும்.
11. வேப்பமனு தாக்கல் செய்யப்பட்டு அதை அதிகாரி ஏற்றுக் கொண்ட பின்னர் சுயசையாக இருந்தால் சின்னம் வழங்குவார் சில நேரங்களில் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
12. பிரச்சாரத்திற்கு தங்கள் பயன்படுத்தும் வாக னங்கள் எவ்வளவு என்று சுவேதா என்ற தேர்தல் ஆணையத்தின் ஆப்–பில் சென்று பதிவு செய்ய வேண்டும் இதில் எத்தனை நாள் பிரச்சாரம் நேரம் குறித்து பதிவு செய்ய வேண்டும் மேலும் பயன்படுத்தக்கூடிய வாகனத்தில் ஆர்சி புத்தகம் டிரைவர் லைசென்ஸ் எஃப் சி போன்ற நகல்கள் இணைக்கப்பட வேண்டும். இதன் பின்பு பிரச்சார அனுமதியை வழங்குவார்கள்.
13. அடுத்ததாக இதே ஆப்–பில்- சென்று தினந் தோறும் எந்த பகுதியில் பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள் என்பதை தெளிவாக பதிவு செய்ய வேண்டும் இந்த பதிவு 48 நேரத்திற்கு முன்பாக செய்யப்பட வேண்டும். இதன் பின்பு கேட்ட பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பார்கள். வேறு யாராவது இந்த பகுதியை கேட்டிருந்தால் ரத்து செய்யப்படும் வேறு ஒரு பகுதியை கொடுப்பார்கள்.
இதில் என்ன கொடுமை என்றால் அரசியல் கட்சிகள் அனைத்தும் குறிப்பாக இந்த திமுக அதிமுக கட்சிகள் எல்லா பகுதியையும் முன்கூட்டியே பிரச்சார அனுமதி வாங்கி விடுகிறார்கள். நமக்கு காட்டுப்பகுதியில் கொடுப்பார்கள் அங்கே யார் இருக்கிறார் பிரச்சாரம் செய்வதற்கு.
14. பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர் முதல் அனைவருக்கும் அன்றைக்கு என்ன செலவு செய்யப்பட்டதோ அதை கணக்கு வைத்துக்கொண்டு அடுத்த நாள் தேர்தல் ஆணையத்தின் சமர்ப்பிக்க வேண்டும்.
15. வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு இருந்தால் இந்த வழக்கு குறித்து மனுவில் தாக்கல் செய்யப்பட வேண்டும் மேலும் தினசர நாளிதழில் விளம்பரம் வழங்க வேண்டும் தொலைக்காட்சியில் விளம்பரமாக வேண்டும் இதற்கு அனாமத்தாக ஒரு லட்ச ரூபாய் செலவாகும் இதற்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும்.
இந்த விழிகள் முழுவதும் இந்த அரசியல் கட்சிகளுக்கு என்று திட்டம் தீட்டியதாகவே தெரிகிறது எதற்காக இவ்வளவு கட்டுப்பாடு இந்த கட்டுப்பாட்டை எல்லாம் அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை. தேர்தல் முடிந் தவுடன் மூட்டையை கட்டும் ஆணையம் திரும்பி வருவதில்லை தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு எப்படி போட்டியிட போகிறோம் என்பதற்கு பயிற்சி வழங்க வேண்டும். வரவு செலவு கணக்கு காட்டாத அரசியல் கட்சி வேட்பாளர் முதல் சுயேச்சை வேட்பாளர் வரை அனைவரும் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஆணையம் உத்தரவிட வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சியின் வேட்பாளர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஏன் பின்பு நடவடிக்கை எடுக்கவில்லை கொடுத்தவர்களையும் வாங்குனவர்களையும் உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளுங்கள் குற்றம் குறையும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் வழங்கியுள்ளார் இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் கையும் காலமாக பிடித்து விட்டார்கள் ஆனால் தேர்தல் ஆணையம் என்ன செய்தது. தேர்தலில் பணம் பட்டு வாடா நடந்திருப்பது பெரிய வந்த உடனே தேர்தலை அந்த தொகுதியில் ரத்து பண்ணிருக்க வேண்டும் இல்லை என்றால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் இதை ஏன் தேர்தல் ஆணையம் செய்யவில்லை அப்படி என்றால் திமுகவின் தேர்தல் ஆணையம் சந்தேகம் ஐயப்படுகிறது.
மொத்தத்தில் தமிழ்நாட்டில் எல்லா தொகுதிகளிலும் திமுகவினர் பணத்தை வாரி வாரி அதை இறக்கி உள்ளார்கள் வாக்காளர்கள் முதலில் சீர்திருத்தம் எங்கே தோன்ற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தில் இருந்து வர வேண்டும் ஆனால் தேர்தல் ஆணையமே திமுகவின் ஏஜெண்டாக நடக்கும் போது பின்பு எப்படி ஜனநாயக தேர்தல் நடைபெறும் அப்பாவி மக்கள் எப்படி திருந்துவார்கள்.
சிறப்பு செய்தியாளர்
