பெண் காவலர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யும் திட்டம்
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் குடும்ப நலன் உறுதி செய்யப்படுவது எங்கள் கட்சியின் முக்கியக் கடமையாகும். அவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு பின்வரும் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம்.
1. பணிநேர சீர்திருத்தம்
பெண் காவலர்களுக்கு 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படும். பணிநேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. இரவு நேர பணிகளில் ஈடுபடுத்துவது முற்றிலும் நிறுத்தப்படும்.
2. பகல் பணி மட்டுமே
பெண் காவலர்கள் பகல் நேர பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர். இது அவர்களின் பாதுகாப்பையும் குடும்ப பொறுப்புகளையும் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படும்.
3. அலுவலக பணிகளில் முன்னுரிமை
காவல் நிலையங்கள், மாவட்ட காவல்துறை அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நிர் வாகப் பணிகளில் பெண் காவலர்கள் அதி கமாக பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் பணித்திறன் மேம்படும், குடும்ப வாழ்க்கை சமநிலை பேணப்படும்
4. பணிப் பாதுகாப்பு மற்றும் மரியாதை
பணியிடங்களில் பாலியல் தொல்லை, மன உளைச்சல் போன்ற எந்தவித அநீதிக்கும் பூஜ்ய சகிப்பு கொள்கை (ஞீமீக்ஷீஷீ ஜிஷீறீமீக்ஷீணீஸீநீமீ) அமல்படுத்தப்படும். புகார் அளிக்கும் பெண் காவலர்களுக்கு உடனடி பாதுகாப்பும் நியாயமும் வழங்கப்படும்.
5. குறிப்பிட்ட பணிகளில் இருந்து விலக்கு
பெண் காவலர்கள் பின்வரும் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்:
*அரசியல் பொதுக்கூட்டங்கள்
*சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்
*க்ஷிமிறி / அமைச்சர்கள் பாதுகாப்பு பணிகள்
*கூட்டம் அதிகமான வழிபாட்டு தல பாதுகாப்பு
6. விடுமுறை மற்றும் ஓய்வு உரிமைகள்
பண்டிகை நாட்களில் விடுமுறை வழங்கப்படும்.
அரசு விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை வழங்கப்படும்.
7. குடும்ப நலன் – இலவச பேருந்து பயணம்
காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, அவர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்குள் இலவச பேருந்து பயண அட்டை (ஙிus றிணீss) வழங்கப்படும். இந்த அட்டையை பயன்படுத்தி, குடும்ப உறுப்பினர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
8. சங்கம் அமைக்கும் உரிமை
பெண் காவலர்களுக்கு தங்கள் நலன்களை பாதுகாக்க சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்படும்.
எங்கள் உறுதி
பெண் காவலர்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் சமூகம் பாதுகாப்பாக இருக்கும்.அவர்களின் நலன், மரியாதை மற்றும் உரிமைகள் காக்கப்படுவது அரசின் முதன்மை பொறுப்பு.
பெண் காவலர் பாதுகாப்பு – சமூகத்தின் நம்பிக்கை”
