கிருஷ்ணகிரி மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்து கடை, மது அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவது அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்*
கள்ளச் சந்தையில் மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனை ஊக்குவிக்கும் விதமாக டவுன் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டி மாதம் மாமுல் பெற்றுக் கொண்டு கள்ள சந்தையில் மதுவிற்கு நபர்களிடம் மாதம் 5000 மற்றும் கள்ள லாட்டரி விற்பவர்களிடம் ரூ. 25000 மாதம் மாமுல் வாங்கிக்கொண்டு மாமுல் வசூல் பணத்தை அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் ஷிஷிமி வெங்கடேசன் மாமூல் பணத்தை வசூல் செய்து காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்து பிரித்துக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியனுக்கு அனைத்து வேலைகளும் ஷிஷிமி வெங்கடேசன் கவனித்துக் கொள்கிறார்.
நான்கு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளராக பதவி ஏற்ற பின் அவர் புதிய வாடகை வீட்டிற்கு லாட்டரி விற்பனை செய்து வரும் நபர்களிடம் வீட்டிற்கு தேவையான அனைத்து சாமான்களும் மற்றும் கட்டில் டிவி போன்ற பொருட்களை லஞ்சமாக SSI வெங்கடேசன் மூலம் பெற்றிருக்கிறார். என்பது தெரிய வந்தது.

லாட்டரி, மண் கடத்தல், கள்ளச் சந்தையில், மது விற்பனை மற்றும் ஆயில் மசாஜ் சென்டர், இவர்களிடம் வசூல் வேட்டையில் ஆய்வாளர் சங்கரபாண்டிக்கு உதவியாக ஷிஷிமி வெங்கடேசன் பணத்தை வாங்கி கொடுப்பார்.
காவல் நிலையத்தில் எந்த சம்பவங்களை கண்டுகொள்ளாத காவல் கண்காணிப்பாளர் தனி பிரிவு காவலர் உதயகுமார் மேலிடத்திற்கு தகவல் கொடுக்காமல் மறைத்து அவருக்கு சேர வேண்டிய லஞ்சப் பணத்தில் பெற்றுக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் ரூ 10,000 இருந்தால் மட்டுமே புகார்களை விசாரிக்கப்படும் என்று கூறி பொது மக்களை அலைக்கழித்து அவர்களி டமிருந்துபணத்தை SSI வெங்கடேசன் தான் வாங்கி கொடுப்பார்.
அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர் கிருஷ்ணகிரி டவுன் காவல்நிலையத்தில் நடக்கும் வசூல் வேட்டைகளையும் பொதுமக்களுடைய கோரிக்கைகளையும் கண்டுகொள்ளாத கிருஷ்ணகிரி மாவட்ட கண் காணிப்பாளர்
மேலும் மனு தாரர்கள் பத்தாயிரம் இருந்தால் மட்டுமே காவல் நிலையத்தில் உள்ள வர முடியும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் மற்றும் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் இவர்கள் மீது விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நமது சிறப்பு நிருபர்
