ஒரு சில 24×7 நிருபர்கள் நாங்கள்தான் மாவட்டத்தில் முன்னணி நிருபர்கள் மற்றவர்கள் யாரும் இல்லை என அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தங்களை முன்னிலைப்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் மற்ற நிருபர்கள் மத்தியில் வேதனையையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது தருமபுரி மாவட்டத்தில் முக்கிய நிறுவனங்களின் நிருபர்கள் மற்றும் சில தனக்கு சாதகமான நபர்களை தன் வசப்படுத்திக் கொண்டு மாவட்டத்தில் நாங்கள் தான் முதன்மை நிருபர்கள் வேறு யாரும் இல்லை என அரசியல் பிரமுகர்கள் முதல் அதிகாரிகள் வரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் மூன்று தலைமுறையாக நாளிதழ் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தங்கள் குடும்பம் தான் விளம்பர ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகின்றனர் தற்போது அந்த வம்சாவளியில் வந்த நான் விளம்பர ஏஜெண்டாக செயல்பட்டு வருகின்றார் அதனால் அரசியல் பிரமுகர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை இவரை தெரியாதவர்கள் எவரும் கிடையாது இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மற்ற நிருபர்களின் பெயரை சொல்லி இவர் தலைமையில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் மீது ஏற்கனவே வந்து அடுக்கடுக்கான புகாரை அடுத்து உண்மையான சங்கங்கள் நடவடிக்கை எடுத்ததால் அதற்கு பயந்து சில காலம் அமைதியாக இருந்தவர் தற்போது இந்த முன்னணி நிறுவனங்களின் நிருபர்களுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்
10 பேர் கொண்ட இந்த கும்பல் கடந்த பொங்கலுக்கு சுமார் 8 லட்சம் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எந்த சங்க பதிவும் இல்லாமல் அனைத்து நிருபர்களின் பெயரைச் சொல்லி வசூல் செய்து உல்லாசமாக இருந்து வருகின்றனர் அதேபோல் நடந்து முடிந்த 2026 தேர்தலில் கட்சியினர் செய்யும் முறைகேடுகளை வெளி கொண்டுவராமல் இருப்பதற்காக இந்த செய்தித்தாள் புரோக்கர் மூலம் ஒவ்வொரு முக்கிய நிறுவனத்தைச் சார்ந்த நிருபர்களும் 50,000 பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிடாமல் இருந்தது வெட்கக்கேடானது மேலும் தேர்தல் முடிந்த உடன் முக்கிய 10 பேர் கொண்ட கும்பல் மட்டும் உல்லாச சுற்றுலா செல்வதற்காக காவல்துறை மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பத்தாயிரம் ரூபாய் என மூன்று லட்ச ரூபாய் பணம் வசூல் செய்து ஏற்காடு சென்றுள்ளனர் அனைத்து நண்பர்களின் பெயரைச் சொல்லி இப்படி காவல்துறை உயர் அதிகாரியை பயன்படுத்தியும், எங்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்று கலெக்டரை தங்களுக்கு சாதகமாக செயல்பட பயன்படுத்தி வருகின்றனர் இது சக நிருபர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளது
முறையாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் இருந்தும் அதனை மீறி இவர்கள் தனிப்பட்ட முறையில் தனி குழுவாக அமைத்து பணம் வசூல் செய்து உல்லாசம் செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தீர விசாரணை செய்து தங்கள் நிறுவனங்களின் நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் வாங்கும் லஞ்ச பணத்தை அவர்கள் நிறுவனம் சப் எடிட்டர் மூலம் பணம் கொடுப்பதால் எங்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க முடியாது என்று எல்லோரிடம் சவால் விட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு இவர்கள் நிறுவனமே இவர்கள் செய்யும் தவறுக்கு துணை நிற்பது வெட்கக் கேடாக உள்ளது மற்றும் இதற்கு துணை போகும் காவல்துறையினர் மீதும் தமிழக அரசும் தலைமை காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சக நிருபர்களின் கோரிக்கையாக உள்ளது.
நமது சிறப்பு நிருபர்
