முன்னாள் பத்திரப்பதிவுத்துறை தலைவர் மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி (ஓய்வு) தற்போது தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் ஆணையராக திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு வழங்கினார் இவர் கோபாலபுரத்தின் செல்லப்பிள்ளை முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் வலது கை இடது கை எல்லாம் இவரே, இவர் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் திடீரென்று சந்தித்துள்ளார். இது குறித்து பலவிதமான செய்திகள் வருகின்றன ஏதாவது ஒரு துறையில் பணி செய்ய கேட்டுள்ளார் இதற்கு முதல்வர் விஜய் பொறுத்திருங்கள் பார்க்கலாம் என்று பதில் கூறுகிறார்.
முதல்வர் விஜய் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்
முதல்வர் விஜய் அவர்களே இந்த ஜோதி நிர்மலா சாமி யாரென்று தாங்கள் முழுமையாக விசாரணை செய்யுங்கள் இவர் ஐஏஎஸ் படிக்கவில்லை திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது இவருக்கு பதவி உயர்வு வழங்கி ஐஏஎஸ் அந்தஸ்தையும் வழங்கியது அந்த அளவுக்கு கோபாலபுரத்தின் கல்தூண் ஆவார்
இவர் பத்திரப்பதிவுத்துறையில் தலைவராக பணியில் இருந்த போது வருவாய் கட்டுப்பாட்டு அலுவலர் என்ற முறையில் பல கோடி ரூபாய் வசூல் செய்தார் அதுவும் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் இந்த வசூலை வாரினார். இது குறித்து நான் தகுந்த ஆதாரத்துடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தலைமைச் செயலாளர் இடம் மனு கொடுத்து இந்த மனு மீது சிறிதளவு கூட நடவடிக்கை எடுக்கவில்லை அப்போதைய திமுக அரசு இதன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் மீது ஊழல் புகார் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டு 4 வாரத்துக்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது ஆனால் இந்த உத்தரவிட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் திமுக அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை இப்போது புதிய அரசு பதவி ஏற்ற உடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இவர் விஜய் சந்தித்துள்ளார் மேலும் இவர் கணவர் நடத்தும் ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமியில் இருந்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் எண்பது சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது பின்பு திமுக ஆட்சி இது குறித்து விசாரணை செய்யாமல் முடக்கி விட்டது.
இப்போது புதிய ஆட்சி என்ன பண்ணப் போகிறது என்ற பயம் இவருக்கு தொற்றுகிறது முதல்வர் விஜய் அவர்களே ஜோதி நிர்மலா சாமி கோபாலபுரத்து செல்லக்கிளி இவரை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நமது சிறப்பு நிருபர்
