பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி மீது மத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கும் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மீது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நமது வில் வாய்ஸ் சிறப்பு செய்தியாளர் சதானந்தம் அவர்கள் புகார் ஒன்றை 20/5/2026 காலை 11.30 அளவில் தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்டோர் ஆணைய த்தின் இயக்குனர் திரு. ரவி வர்மன் அவர்களிடம் மனு ஒன்றை வழங்கினார் அதில் கூறி இருப்பதாவது நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன், வில் வாய்ஸ் இதழில் பணிபுரிந்து வருகிறேன். நடந்து முடிந்த 2006 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக சிவகுமார் அறிவிக்கப்பட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற சிவகுமார் அவர்களுக்கு வெற்றி சான்றிதழ் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் சான்று வழங்க வேண்டும் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதால் சான்று வழங்க மறுத்தார். பிறகு அனிதா என்ற பிஆர்ஓ சிவகுமார் என்பவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எஸ். சிவசங்கருக்கு மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் கிளோசாக நின்று கொண்டு வெற்றி சான்றிதழ் வழங்கியுள்ளார், ஆனால் சிவகுமாருக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர் தள்ளிப்போய் நின்றார் எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் மீது Sc/St. வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது இதைப் பெற்றுக் கொண்ட இயக்குனர் திரு ரவிவர்மன் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நமது சிறப்பு நிருபர்