சல்ஸா பாலியல் குற்றவாளி

இந்தப் புகைப்படத்தில் தவெக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்சை சந்தித்து திருவிளக்கை பரிசளிப்பவர் பாலியல் குற்றவாளியான சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி.அவரது மனைவி. இந்தக் கார்த்திக் முனுசாமி காளிகாம்பாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் போது அங்கு வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2024 மே மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்.

விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, அவரது சித்தப்பா உட்பட ஐந்து பேர் மீது கருக்கலைத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கார்த்திக் முனுசாமி திடீரென தலைமறைவானார். ஆனால், காவல்துறை இவரை கொடைக்கானலில் சுற்றி வளைத்து கைது செய்தது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் முனுசாமி இதில் பயங்கரமாக அதிகார லாபி செய்ததில் அடுத்த மாதமே 2024 ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்க பட்டு பூசாரி பணி பறிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் நடந்தவுடன் திருவண்ணாமலையில் பூசாரியாக இருக்கும் தன் சித்தப்பாவையும், மனைவியையும் அழைத்து வந்து அமைச்சரை பார்த்து, மீண்டும் பூசாரி பணிக்கு முயற்சிக்கிறார், கார்த்திக் முனுசாமி.
நமது சிறப்பு நிருபர்