வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் இருக்கையில் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் சிந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆணையர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பின்னர் நகராட்சி ஆணையர் தனலட்சுமியை இன்னொரு இருக்கையில் அமர வைத்துவிட்டு என்ன திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் ஆணையர் இருக்கையில் அமரக்கூடாது என்பது சட்டப்படி விதி மீறலாகும்
நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி ஆணையர் தான் நகராட்சியின் நிர்வாக அதிகாரி ஆவார் நகராட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அந்தஸ்து மட்டுமே சட்டமன்ற உறுப்பினருக்குஉண்டு ஆணையர் இருக்கையில் அமரக்கூடாது மக்கள் பிரச்சினைகளை ஆணையரிடம் தெரிவிக்கலாம் எனவே இது போன்ற செயல்களில் சட்டமன்ற உறுப்பினர் ஈடுபடக்கூடாது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நமது சிறப்பு நிருபர்
