தமிழக அரசு திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் பல ஊராட்சி பகுதிகளில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் திட்டம் செயல்படுவது போல பில்லை போட்டு காசை மட்டும் களவாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது
குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து ஊரைக் குழியில் மக்கும் குப்பைகளை கொட்டியில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மக்காத குப்பை குழியில் கொட்டி பிரித்து உரத்திற்கு பயன்படுத்த பல முன்னெடுப்புகள் அரசு எடுத்தாலும் ஊராட்சியில் பல பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதோடு சரி அதை முறையாகப் பிரிக்காமுன் சாலையின் ஓரத்தில் கொட்டி எரிக்கும் ஊரின் ஒதுக்குப்புறமாக கொட்டி குப்பை மேடாகவும் மாற்றி வருகின்றனர்.
திருச்சி மாநகரை பொறுத்தவரையில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் இதை கண்கூடாக பார்க்க முடிகிறது மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோரையாற்று கரையோரம் கொட்டியும் குப்பைமேடாக ஆக் கியும் தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர் இதனால் அருகில் உள்ள குடியிருக்கும் மக்கள் சுவாசக் கோளாறு மற்றும் நோய் தொற்று பரவும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். மணிகண்டம் ஒன்றியத்தை பொருத்தவரை பல கிராமங்களில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் கடந்த சில வாரங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் சாலையோரம் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டியது அருகிலேயே சட்டமன்ற உறுப்பினர் வீடும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அல்லித்துறை பகுதியில் வயலூர் செல்லும் சாலையில் குப்பை கிடங்கு போல் மாற்றி விட்டார்கள்.
இது பல காலங்களாக தொடர்ந்து வரும் நிலை யில் நெடுஞ்சாலை பகுதி என்பதால் வாகன ஓட்டிகளும் கண் எரிச்சல் ஏற்பட்டு விபத்துக்கள் நேரிட வழிவகிக்கிறது மேலும் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள இடமாக இருப்பதால் சுவாசத்தில் மிகவும் சிரமமாகவே உள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர் மணி கண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட சமூக நகர் தீரன் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கோரை ஆற்றில் கரையில் பொட்டி தீ வைத்து கொளுத்தப்படுவது பல வருடங்களாக நடந்து வருகிறது.
பொறையாற்று கரை முழுவதுமாக மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் கொட்டி தீ வைத்து கொளுத்துவதால் கோரை யாற்று கரையே காணாமல் போய்விட்டது.
ஆண்டொன்றுக்கு சராசரியாக உபகரணங்க ளுக்கு பராமரிப்புக்கு மட்டும் பல லட்சங்கள் வழங்கப்படும் நிலையில் திட்டத்தை முழுமையாக பயன்படுத்தாமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு செய்தால் பொருத்தம் இல்லாத பதிலையும் மனுவை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிடிஓ பதிலளித்து அதில் கையொப்பமும் இடுகிறார்.
மேலும் நாச்சி குறிச்சி அல்லித்துறை வயலூர் சாலை போன்ற பகுதிகளில் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிப்பதை காண முடிகிறது கிராமப்புறம் என்பதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு திட்டக் கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பெரும் செலவில் சாதனங்கள் வாங்கிய நிலையில் அதெல்லாம் முழுமையாக பயன்படுத்த படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் எனத் தொடர்ந்து குற்றச்சாட்டும் எழுகிறது இதையெல்லாம் கவனிக்க வேண்டிய ஊராட்சி செயலாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக அந்தக் குற்றச்சாட்டும் எழுகிறது.
தமிழக அரசின் சிறப்பான திட்டத்தை அதிகாரிகள் முறையாக பயன்படுத்தாமல் அரசுக்கு அவ பெயர் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன எப்படி இருந்தாலும் மக்களுக்காக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை சரியாக பயன்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நமது சிறப்பு நிருபர்
