தங்கக் கட்டிகள் கடத்தல் விரைவில் கைதாவார்கள்

திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தவர் சேகர்பாபு எவ்வளவு சுருட்ட முடியுமோ முறைகேடாக அவ்வளவு சுருட்டிட்டார் இதற்கு இடையில் இந்து அறநிலை துறையில் காணிக்கையாக செலுத்தப்பட்ட 3000 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வெளிநாடு கொண்டு சென்றுள்ளார்கள் இந்த தங்கம் திரும்பவே இல்லை இந்த நிலை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது இந்து அறநிலை துறையில் பணிபுரியும் அனைத்து துணை இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவினை பிறப்பித்து உள்ளது அதில் தமிழகத்தில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கோயில்களில் இருந்து எவ்வளவு தங்கம் காணிக்கையாக வந்தது என்ற கணக்கை எடுத்து வருகிறது. இந்த தங்கம் கடைசியாக யார் யார் வந்து எடுத்துச் சென்றார்கள் என்ற விவரத்தை தற்போது சேகரித்து வருகிறது இந்த நிலையில் பல ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலைத்துறையின் ஆணையராக ஸ்ரீதர் பொறுப்பேற்றது முதலே துறையில் ஒருவித சுணக்கம் நிலவி வந்தது ஆணையர் என்ற கம்பீரமான பதவியில் அமர்ந்திருந்தாலும் அவரிடம் எந்தவித சுறுசுறுப்போ அல்லது துறையை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமோ இருந்ததில்லை இதற்குப் பின்னணியில் ஒரு பலமான அரசியல் காரணங்கள் இருந்தது.
துறை முழுவதும் முன்னாள் அமைச்சரின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது ஸ்ரீதரும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருக்கவும் முன்னால் அமைச்சர் பழகிக்கொண்டார் அமைச்சரின் தயவு இருந்தால் கோப்புகளை பார்ப்பதோ கோவில்களில் சொத்துக்களை பாதுகாப்பதோ அவரது வேலை திட்டத்தில் இல்லை காலத்தை கடத்துவது மட்டுமே அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது இதன் விளைவாக அவருக்கு கீழ் பணியாற்றிய இணை ஆணையர்கள் உதவி ஆணையர் என யாருக்கும் முறையான வழிகாட்டுதல்களை ஸ்ரீதர் வழங்கவில்லை.
மாஜி அமைச்சரை சார்ந்திருக்கும் படியே வழிவகை செய்தார் இதனால் நேர்மையாக பணியாற்ற நினைத்த அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.
ஸ்ரீதருக்குள் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது அடுத்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் எப்படியும் முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் அதே துறை கிடைக்கும் நாமும் இப்படி எந்தவித பொறுப்பும் இல்லாமல் காலத்தை கழித்து விடலாம் என்று கணக்கு போட்டார் ஆனால் காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை தேர்தல் முடிவுகள் வந்த பின்பு ஒட்டுமொத்த தமிழக அரசியலும் தலைகீழாக மாறியது யாரும் எதிர்பாராத விதமாக தவெக வெற்றி பெற்று புதிய அரசை அமைத்தது.
திடீரென ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றம் ஸ்ரீதரின் தலையில் இடி போல் இறங்கியது தான் பாதுகாப்பாக நினைத்த மாஜி அமைச்சரின் நிழல் இப்போது இல்லை. புதிய தவெக அரசு ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற பயம் அவரை ஆட்கொண்டது விசாரணைகளும் துறை ரீதியான நடவடிக்கைகளும் தன் பக்கமாக திரும்புவதை உணர்ந்த ஸ்ரீதர் தற்காலிகமாக தப்பிக்க ஒரு திட்டம் போட்டார் விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு உல்லாச சுற்று லாவும் சென்று வந்துள்ளார் அதற்குண்டான செலவுகளை தென்சென்னை புகழ் பெற்ற நிலை-1 திருக்கோயில்களில் தக்கார் மூல மாகவும் ஏற்றுக் கொண்டார் அந்த தக்கார் ஸ்ரீதர் ஐஏஎஸ் தயவால் பல அதிகாரிகளை தன் வசப்படுத்திக் கொண்டு தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டார் குறிப்பாக நிலம் தொடர்பான அனைத்து வேலைகளையும் கணக்கச்சிதமாக செய்து பல கோடிகளை சுருட்டி விட்டார் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் செய்த பாவத்தின் பலனாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
துறையில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓசியில் உள்ள ஆசை சுற்றுலா சென்று வந்த விபரம் துறை சார்ந்த நேர்மையான அதிகாரிகளுக்கு தெரிய வந்தது ஸ்ரீதர் போன்ற அதிகாரிகளின் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விட்டால் அது புதிய தவெக அரசு முதலமைச்சரின் பெயருக்கும் தேவையில்லாத அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதே நிதர்சனமான உண்மை
எலி தின்றதாக கணக்கு காட்டுவோம்
இந்து சமய அறநிலைத்துறையில் ஆணையராக இருந்த குமரகுருபரன ஐஏஎஸ் முரளிதரன் ஐ ஏ எஸ் ஸ்ரீதர் ஐ ஏ எஸ் கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் கோயில்களில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த கோடீஸ்வரர்கள் தொழிலதிபர்கள் கோயிலுக்கு நன்கொடையாக கொடுத்த நகைகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கங்கள் இவைகளில் இருந்து சுமார் 3,000 கிலோ எடை கொண்ட தங்க நாக்கைகள் வைர நகைகள் தணிக்கையில் கொண்டு வரவில்லையாம்.
முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவுக்கு 3 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விஷயம் நன்றாகவே தெரியும். தணிக்கை அதிகாரிகள் தங்க நகைகளை பற்றி கேட்டால் பெருச்சாளிகள் தின்று விட்டதாக கணக்கில் கொண்டு வரலாம் என்ற யோசனை யில் இருக்கிறார்களாம். என்னால் அமைச்சர் சேகர்பாவை சுற்றி காவல்துறை வட்டமிடுகிறது விரைவில் சேகர் பாபு சிறைக்குச் செய்வது உறுதி என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன
நமது சிறப்பு நிருபர்