பூர்வீக தமிழர் குடிமக்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடம்…

என் இனிய தமிழர் குடி உறவுகளே ஒருகணம் தினந்தோறும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு 15 நிமிடம் அமர்ந்து நாம் கடந்து வந்த தலைமுறைகள் குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை ஆய்வு செய்து பாருங்கள். அந்த இரண்டு தலைமுறையில் நமது சொத்துக்கள் உரிமைகள் என்ன இருந்தது அதே காலகட்டத்தில் வெளிமாநிலத்தவர்கள் பிற மொழியாளர்கள் தமிழகத்திற்கு பிழைக்க வந்து எவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிறார்கள் எவ்வளவு உரிமைகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்யுங்கள் அதேபோல் இரண்டு தலைமுறைக்கும் முன்னாடி நம் சொத்துக்கள் எவ்வளவு இருந்தன இன்று எவ்வளவு இருக்கிறது ? நாளை என்ன இருக்கும் என்பதெல்லாம் நினைத்து பாருங்கள் அதே போல் நமது உரிமைகளை எந்தெந்த இடத்தில் நாம் இழந்து உள்ளோம் என்பதை ஆய்வு செய்து இதன் பின்பு நீங்கள் தெளிவாகுங்கள்.

அப்போது புரியும் பிழைக்க வந்தவர்கள் எப்படி எல்லாம் நம் இன மக்களை ஏமாற்றி உள்ளார்கள் என்பதை அறிவீர்கள். தமிழ்நாடு அரசு துறையில் நம் பூர்வீக குடிமக்களுக்கு கிடைக்க வேண்டிய பணிகள் முழுமையாக கிடைத்ததா?
அரசுத் துறையில் மொத்த பணியாளர்களில் எவ்வளவு நபர்கள் பூர்வீக தமிழர் குடியை சேர்ந்தவர்கள் மீதமுள்ளவர்கள் யார் எங்கு இருந்து வந்தார்கள் என்பதெல்லாம் ஆய்வு செய்யுங்கள் இதனால் நாம் அரசு பணிகளை இழந்தோம் எப்படி இழந்தோம் எதனால் இழந்தோம் என்பதை ஆய்வு செய்யுங்கள் பின்பு நீங்களே ஒரு தெளிவான சிந்தனையோடு திராவிடா தேசியத்திலிருந்து வெளியே வருவீர்கள் நமது தமிழர் குடிமக்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது அது என்னவென்றால் பிற மொழிச் சேர்ந்த சொறியனை தலைவனாக ஏற்றுக் கொள்வோம் தமிழனை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

சாதிவாரியாக அடித்துக் கொள்வோம் நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று விதண்டாவாதம் செய்து வீணா போனோம் இதிலிருந்து நாம் மாற வேண்டும் இல்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு மிக மோசமாக அமையும்..