வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள முல்லை நகர் 60 அடி சாலையில் ஒரு அடுமனை தொழிற்சாலை போலியாக செயல்பட்டு வருகிறது இது குறித்து நமது இதழுக்கு தகவல் வரவே நாம் விசாரணைக்கு சென்றோம் விசாரணையின் போது கீழ்க்கண்ட தகவல்களை வழங்கினார்கள் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து ஒரு விரிவான ஆலோசனை பார்ப்போம்.
Plot 121 எண் கொண்ட வீட்டுமனை உள்ளது இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு வாசிகள் அடங்கியுள்ளார்கள். இந்த நிலையில் வெங்கடேசன் என்பவர் இந்த மனையை வாங்கி கிரவுண்ட் மற்றும் 2 மாடி கட்டிடம் கட்டியுள்ளார் ரெசிடென்சியாக கட்டவில்லை தொழிற்சாலைக்கு என்று கட்டி உள்ளார் இதற்கு மாநகராட்சியில் அனுமதி வாங்கவில்லை முறையாக பிளான் வாங்கவில்லை.
தொழிற்சாலை துவங்க மாநகராட்சி, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு உற்பத்திக் கழகம் என்று எந்த துறையிலையும் அனுமதி வாங்கப்படவில்லை மூன்று மின் இணைப்பு பெற்றுள்ளார்கள் வீட்டுக்கு மின் இணைப்பை பெற்று கமர்சியல் ஆக பயன்படுத்தி உள்ளார் வெங்கடேசன் இதனால் மின் வாரியத்திற்கு பல லட்சம் வருவாய் இழப்பீடு நடைபெற்றுள்ளது.
இந்த போலி தொழிற்சாலை ஒட்டி உள்ள வடபகுதி காலி மனை ஆக உள்ளது கிழக்கு பகுதி 60 அடி சாலை, தெற்கு பகுதி 20 அடி சாலை, மேற்கு பகுதி வீட்டுமனை காலியாக உள்ளது. இந்த வீட்டு மனையில் சுற்றுப்புறம் சுகாதார சீர்கேடு உள்ளது இந்த பகுதியில் தான் பேக்கரி மிஷின்கள் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே கொண்டு சென்று உள்ளார்கள்.
தினந்தோறும் இங்கே பேக்கரி ஐட்டம் அனைத்தும் தயார் செய்யப்பட்டு வெளியே சென்று கடைகடையாக விற்பனை செய்கிறார்கள் இதற்கான வாகனம் வெளியே நிற்கிறது இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 20 நபர்கள் என்று இந்த பகுதி வாசிகள் கூறுகின்றனர்.
இந்த கட்டிடத்தில் பெயர் பலகை பொருத்தப்படவி ல்லை ஏன் பெயர் பலகை பொருத்தப்படவில்லை மேலும் இந்த கட்டிடம் சூடு தாங்க முடியாமல் விரிச்சல் விழுகிறது அந்த விரிச்சலை இங்கே பார்க்கலாம் மேலும் தென்பகுதி உள்ள வீடு ஒன்றில் இவர்கள் புகை செல்கிறது இதனால் இந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது மேலும் இந்த வீடுகள் விரிச்சல் விழுகிறது.
இந்த போலி தொழிற்சாலை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது மாநக ராட்சியும் புகார் கொடுக்கப்பட்டது சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது உணவு கழகத்தின் புகார் கொடுக்கப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இதை எல்லாத் தையும் இதன் உரிமையாளர் வெங்கடேஷ் சரி கட்டி விட்டார் ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறோம் அதிகாரிகளே இந்த போலி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் நடவடிக்கை வேறு மாதிரியான இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சிறப்பு நிருபர்-
குறிப்பு
குற்றம் நடப்பதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளே முதல் குற்றவாளிகள்
