சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ராமநாயக்கன்பாளையம் கிராமம் வசிஷ்டர் நதிக்கரையில் அமைந் துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியாயி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கடந்த 75 ஆண்டு காலமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோயிலில் கடந்த மாசி மாதம் 4 நாள் 16.2.2026 திங்கட்கிழமை அன்று மயான கொள்ளை திருவிழா செய்வதாக ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினரால் முடிவு செய்யப்பட்டு திருவிழா பத்திரிக்கை அடித்து ஆட்டோ விளம்பரம் செய்து ஊர் பொது மக்களுக்கு தெரியபடுத்தினோம்.
திருவிழா நடத்த எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு வழங்க காவல் துறையிடம் அனுமதி வேண்டி ஒரு வாரத்திற்கு முன்பு ஊர் பொது மக்கள் சார்பாக நிரந்திர பூசாரி திரு ஷி.பொன்னுசாமி மனு கொடுத்திருந்தார். திருவிழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திருவிழா நடைபெறக்கூடாது என்று 1. பாலமுருகன் த/பெ குமார், 2.சக்தி த/பெ அங்கமுத்து, 3. பெரியசாமி த/பெ அங்கு ஆகிய மூன்று நபர்களின் தூண்டுதலின் பேரில் அவர்கள் சார்பாக சொக்கலிங்கம் என்பவர் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கடந்த 14.2.2026 புகார் அளித்தனர் அன்றைய தினமே சொக்கலிங்கம் என்பவர் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். 16.2.2026 அன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவிலை திறக்காமல் கோவிலுக்கு முன்பாக உள்ள பலிபீடத்தில் திருவிழாகுழுவினரால் கிடா வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்று முடிவு செய்யபட்டு அன்னதானமும் செய்யபட்டது.
இந்த சம்பவத்தை திரித்து கோவிலை திறந்து விட்டார்கள் என்று மேற்கண்ட மூன்று பேரும் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்கள். 16.2.2026 அன்று திருவிழா நிருத்தப்பட்டது இதனால் வெளியூர்களிலிருந்து வந்த பொது மக்கள் மற்றும் பக்தகோடிகள் திருவிழா நடக்கவில்லை என்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.
இது சம்பந்தமாக 17.2.2026 அன்று மாலை ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் பொன்னுசாமி பூசாரி என்பவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊரக காவல் நிலையத்திற்கு டிரஸ்ட் உறுப்பினர்களை அழைத்து காவல் ஆய்வாளர் விசாரண செய்த போது சிசிஜிக்ஷி கேமரா எதற்காக கோயிலில் பொறுத்தினீர்கள் என்று வயதானவர்கள் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் காவல் ஆய்வாளர் பேசினார். விசாரனை ஏதும் செய்யாமல் ஒரு தலைபட்சமாக மிரட்டும் தோணியில் கோவிலை மூடவில்லை என்றால் உன் மீது (திமிஸி) பதிவு செய்து கைது செய்து விடுவேன் என்று மிரட்டி கோயிலை மூடச் சொல்லி உள்ளார். மேலும் பிரச்சனைகுரிய நபர்களையும் அழைத்து பேசி பிரச்சனையை தீர்த்து கொண்டு கோவிலை திறந்துகொள்ளுங்கள் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார்
மேலும் அங்காளபரமேஸ்வரி கோவில் என்பது தனிப்பட்ட எந்த சமுதாயத்தையும் சார்ந்தது இல்லை அனைத்து சமுதாயத்தையும் சார்ந்தது என்பதும் பொதுமக்கள் அனைவரும் வழிபாடு செய்ய உரிமை உள்ளது, ஆனால் மூன்று நபர்கள் மட்டும் கோவிலில் வழிபாடு செய்யவிடாமல் காவல்துறையின் துணையுடன் கடந்த 3 மாதமாக கோவிலை திறக்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
மேலும் புகார் கொடுத்த 3 நபர்களில் ஒருவரின் (பெரியசாமியின் சகோதரர் சக்தி) உறவினர் கடந்த 28.6.2025 அன்று இதே கோவிலில் அன்பழகன் பூசாரி கோவிலை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவர் சட்டைபையில் இருந்து ரூபாய் 4700/- திருடும் CCTV காட்சி அடங்கிய பதிவை ஆதாரமாக புகார் மனு ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கொடுக்கபட்டது. இந்த புகார் மனுவை விசாரித்த காவல்துறையினர் சக்தியிடம் பணத்தை மீட்டு பூசாரி அன்பழகனிடம் கொடுத்தனர்.
சக்தி என்பவர் தனது தந்தை அங்கமுத்துக்கு பூசாரியாக உரிமை கொடு என்று தகராறு செய்வது வாடிக்கையாக உள்ள நிலையில் அங்கமுத்து மதம் மாறி கிருஸ்த்துவராக பல காலம் ஆகிவிட்டது.
மேலும் அங்கமுத்துவின் வீடு கோவிலுக்கு மிக அருகாமையில் இருப்பதால் கோவிலுக்கு வழிபாடு செய்ய வருபவர்கள் வசதிக்காக கோவிலுக்கு உரிய பொருட்களின் மதிப்பு சுமார் 1 லட்சம் அவரிடம் கொடுத்து வைத்திருந்தோம் தற்போது அந்த பொருட்களை தரமுடியாது என்று அங்கமுத்துவும் அவரது மகன் சக்தியும் சொல்லிவிட்டார்கள்.
திருவிழா நாள் மிக அருகில் இருந்ததால் திருவிழா முடித்து விட்டு அவரிடம் மீண்டும் பொருட்களை கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்யபட்டது. திருவிழா நிருத்தபட்டதால் இது குறித்து புகார் கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டது. மேலும் எங்களை வழிபாடு செய்யவிடாமல் தடுக்கும் காவல்துறையினர் பாலமுருகனுக்கு மட்டும் கோவிலில் நுழைவாயில் கட்ட அனுமதி வழங்கியது எப்படி..? இது சம்பந்தமாக பலமுறையும் புகாரும் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன். மீண்டும் 25.3.2026 அன்று முதலமைச்சர் தனிபிரிவு, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாசியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர், ஊரக காவல் ஆய்வாளர் என அனைவருக்கும் புகார் மனு கொடுக்கபட்டது.
கடந்த 20.5.2026 அன்று காவல் அவசர உதவி 100க்கு புகாரை பதிவும் செய்துள்ளேன் ஆனால் இதுவரைக்கும் ஆத்தூர் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8.6.2026 அன்று கோவில் தொடர்பாக வட்டாச்சியரிடம் எதிர் தரப்பினர் மனு கொடுத்துள்ளனர், இந்த மனுவின் சம்பந்தமாக அன்றே வட்டாச்சியர் மேலும் பொன்னுசாமி அவரை சார்ந்த 4 பேருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அறகட்டளையில் உள்ள நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் நாங்கள் கடந்த 25.3.2026 அன்று பதிவு தபால்மூலம் வருவாய் துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் மற்றும் வட்டாச்சியருக்கும் மனு அனுப்பியுள்ளோம் எங்கள் மனு மீது 2 மாதகாலமாக நடவடிக்கை எடுக்காத நிலையில் எதிர்த் தரப்பினர் கடந்த 8.6.2026 அன்று கொடுத்த மனுவிற்க்கு அன்றே அழைப்பாணை தயார் செய்து வட்டாச்சியர் கையோப்பம் இட்டு 10.6.2026 அன்று பொன்னுசாமி மற்றும் மேலும் 4 நபர்களுக்கு 11.6.2026 அன்று 11 மணி அளவில் ஆஜாராகுமாறு அழைபாணை கொடுத்துள்ளார்.
இது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க கார ணம் அரசியல்வாதிகளா அல்லது அவர்களின் செல்வாக்கா.? நாங்கள் கொடுத்த மனு எங்கே போனது இந்த 3 நாட்களுக்குள் மனு மீதான நடவடிக்கை எடுக்க என்ன காரணம்.? இதற்கு முன் ஏராளமான பொதுமக்கள் மக்கள் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்கபட்டதா என்று கோவிலில் வழிபாடு செய்யும் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…?
நமது சிறப்பு நிருபர்-
