பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் குவாரி மூடலா? மர்மமாக உள்ளது

தமிழகத்தில் கனிமவளம் என்ற துறையை மட்டும் சரியான முறையில் அதிகாரிகள் கையாண்டால் போதுமானது.  இப்போது இருக்கும் பத்து லட்சம் கோடி கடனை அசால்ட்டாக அடைத்து விடலாம்..
ஆனால் நம் கண்களுக்குத் தெரியாத, பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படாத கனிம வளம் பற்றி இப்போது பேசுவோம்.. பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவளச் சுரண்டல் மற்றும் அரசு வருவாய் இழப்பு
ஓர்அலசல்..பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவளத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அதனால் அரசுக்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்புகள் குறித்த விவாதங்கள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, சட்டவிரோத கல்குவாரிகள் மற்றும் மணல் கடத்தல் மூலமாக மட்டும் அரசுக்கு ₹50,000 கோடிக்கும் (இது உத்தேச மதிப்பு மட்டுமே) மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன..
கடந்த சில ஆண்டுகளில் கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ விவரங்களின் தொகுப்பை இப்போது பார்க்கலாம் தமிழ்நாட்டில் உள்ள சிறு கனிமங்களான கருங்கல் (Stone/Gravel), எம்-சான்ட் (M Sand), சவுடு மற்றும் ஆற்று மணல் ஆகியவை கட்டுமானத் துறையின் முக்கிய ஆதாரங்கள் ஆகும். ஆனால், இத்துறை முழுமையாக அரசியல்வாதிகள், இடைத் தரகர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியால் சிக்கி சீரழிகின்றது இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானம் முழுக்க தனிநபர்களின் பைக்கு கடந்த 35 வருடங்களாக சென்று கொண்டு இருக்கிறது.. குவாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட க்யூபிக் மீட்டர் அளவை விடப் பல மடங்கு கூடுதலாகக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. முறைகேடுகளில் ஈடுபடும் குவாரி அதிபர்களுக்குத் துறை ரீதியாகப் பல நூறு கோடிகள் அபராதம் விதிக்கப்பட்டாலும், பின்னர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் அரசியல் தலையீடுகள் மூலம் அந்த அபராதத் தொகை பெருமளவு குறைக்கப்பட்டு, சமரச ஒப்பந்தங்கள் போடப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (உதாரணமாக ₹500 கோடி அபராதம் விதிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் ₹30 கோடி வரை மட்டுமே வசூலிக்கப்படும் நிலை)..
பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் சட்டவிரோத கனி மங்கள் முறையான அனுமதிச் சீட்டுகள் (Transit Passes) இன்றி கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. ஆன்லைன் கண்காணிப்பு முறையை (OMTRS) முழுமையாகப் பயன்படுத்தாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அரசுக்கு நேரடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
இந்தச் சுரண்டல் எவ்வாறு கார்ப்பரேட் பாணியில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதற்கான வழிகள்:
போலி அனுமதிச் சீட்டுகள் (Duplicate Transit Passes) ஒரு லாரிக்கு ஒரு அனுமதிச் சீட்டு என்ற விதியை மீறி, ஒரே பாஸை பயன்படுத்தி பல முறை கனிமங்களை ஏற்றிச் செல்லுதல்.. அளவுக்கு அதிகமான பாரம் (Overloading): லாரிகளில் அனும திக்கப்பட்ட எடையை விட இரு மடங்கு எடையைச் சட்டம் மற்றும் போக்குவரத்துத் துறையின் சோத னைகளை மீறி ஏற்றிச் செல்லுதல். இதனால் சாலைகள் சேதமடைவதுடன், அரசுக்கான ராயல்டி தொகையும் ஏமாற்றப்படுகிறது..
அதிகாரிகளின் மௌனம்:
கனிமவளத் துறை, காவல்துறை மற்றும் வருவாய் த்துறை ஆகிய துறைகளில் உள்ள சில அதிகாரிகள், அரசியல் அழுத்தங்கள் அல்லது தனிப்பட்ட ஆதாயங்கள் காரணமாக இந்த சட்டவிரோத செயல்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது..
தமிழகத்தில் தற்போதுள்ள பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கனிமவள விவகாரத்தில் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டு கடந்து வந்து விட்டார்கள். சில லட்சம் கோடி அதிபர்களாக மாறிவிட்டார்கள்..
இந்தச் சூழலில், ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இத்தகைய ஊழல் மற்றும் கனிமவளச் சுரண்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பழைய ஆட்சியாளர்கள் மற்றும் குவாரி அதிபர்களுடன் கைகோர்த்துக்கொண்டனர்.
கனிம வளத்துறை அமைச்சர் பிரபு மதுரை சிவகாசி விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று குவாரிகளை ஆய்வு செய்து விதி மீறல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார் ஆனால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மட்டும் அமைச்சர் வருவதில்லை. இரண்டு மூன்று நாட்கள் முன்பு பெரம்பலூரில் தைரியமிருந்தால் இந்தக் குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் இந்த குவாரியை ஆய்வு செய்துள்ளார்கள் விதிமீறல் ஏற்பட்டுள்ளது கடைசியாக சீல் வைக்கப்பட்டது. சீல் வைத்த பின்பும் திருட்டுத்தனமாக இரவில் கல்லை வெட்டி எடுக்கிறார்கள் என்று தகவல் கொடுத்தோம் மீண்டும் சோதனைக்கு சென்றார்கள் சோதனையின் போது எதுவும் சிக்கவில்லை என்று கீழே இறங்கி சென்றார்கள். அப்பொழுது உடைத்து எடுக்கப்பட்ட கற்கள் டிராக்டர் மற்றும் பொக்லின் அனைத்தும் மேலே வந்து கொண்டிருந்தது.
அப்படி என்றால் அவர்கள் தகவல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் இது குறித்து அந்த மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் ஜி. ஞி விஜயகுமாரிடம் அலைபேசியில் அழைத்து கேட்டோம் அதற்கு அவர் ஆமாம் நாங்கள் சீல் வைத்துள்ளோம் தற்காலிகமாக என்றார். அப்படி என்றால் சீல் வைத்தார்களா இல்லையா? என்று தெரியவில்லை இது குறித்து விளக்கம் தர வேண்டும்
நமது சிறப்பு நிருபர்-