உதயநிதி ஒரு போதும் முதல்வராக முடியாது அமித்ஷா…அதிமுகவை விழுங்கும் பாஜக!!!எடப்பாடி என்ன செய்ய வேண்டும்??

சமீபத்தில் தமிழக அமர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் உதயாநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கூறியுள்ளார் இதற்கு அதிமுகவினர் மகிழ்ச்சி அடையலாம் ஆனால் உண்மை வேறு என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சியைப் பலகீனமாக்கி அதைத் தனக்கு சாதகமாக்கி விழுங்கத் தயாராகி வருகிறது பாஜக இது எடப்பாடி அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை அவருக்கே விட்டு விடுவோம்.

தமிழகத்தில் கூட்டணி கட்சி தயவுகள் இல்லாமல் ஒருபோதும் இனி எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது தனிக்கட்சி ஆட்சி என்பதெல்லாம் காலம் மாறிவிட்டது. இதைத் திமுக மிகச் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. கூட்டணி ஆட்சி தான் இன்று திமுக இதுவரை வாய் திறக்கவில்லை திமுக கூட்டணி கட்சிகளும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்து மகத்தான வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது.
அதே நேரத்தில் அதிமுகவுடன் பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியும் அதிமுகவுடன், கூட்டணிக்குப் போகாமல் தடுத்து வருகிறது. திமுக இதற்குச் சொல்லப்படும் ஒரே காரணம் பாஜக இருப்பதால் நாங்கள் கூட்டணிக்கு வர முடியாது என்று வெளிப்படையாகக் கூறி விட்டன ஆனால் உண்மை இது அல்ல பாஜக டெல்லி தலைமையும் இதே தான் விரும்புகிறது. அதிமுக கூட்டணி வேற கட்சி வரக் கூடாது என்பதில் பாஜக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இது வெற்றியும் பெற்று வருகிறது.அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களுக்கும்(சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம்) கூட மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் இதற்குப் பின்னால் பாஜக உள்ளது திமுகவும் உள்ளது.

திமுகவை கடுமையாக எதிர்த்துப் போராடுவதற்கும் தாக்கிப் பேசுவதற்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் யாரும் தயாராக இல்லை, பேசியதும் இல்லை எடப்பாடி மட்டும் அரசியல் ரீதியாகத் திமுகவை விமர்சனம் மற்றபடி திமுக செய்யும் ஊழல் மற்றும் அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளைகுறித்து வாய் திறக்க முடியவில்லை. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர் மட்டும் எப்படி திமுகவை கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்வார்கள் என்பதை எடப்பாடியார் புரிந்து கொள்ள வேண்டும். திமுகவை ஏறி அடிக்க எடப்பாடி பழனிச்சாமியால் முடியாது. ஆனால் பாஜகவால் முடியும் அவர்கள் ஏறி அடிக்கமாட்டார்கள் ஏறி அடிப்பது போல் தமிழகத்தில் வேஷம் போடுவார்கள். ஆனால் டெல்லியில் இவர்கள் உறவு எல்லை தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறது. அமித்ஷா சொல்கிறார் ஒருபோதும் உதயாநிதி தமிழக முதல்வராக முடியாது என்று இவர்களே உதயநிதி முதல்வர் பதவியில் அமர வைக்கப் போகிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்:
பாரதிய ஜனதா கட்சியுடன் உள்ள கூட்ட ணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஆட்சி அதிகாரம் அதிமுகவிற்கு முக்கியமாகும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக என்ற கட்சியைத் தமிழகத்தில் பார்க்க முடியாது. அதிமுக என்ற கட்சியைப் பலப்படுத்த வேண்டும் அது எப்படி பலப்படுத்த வேண்டும் என்பது கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அதில் தான் தீர்வு காண முடியும். அடுத்ததாகத் திமுகவை மற்றும் பாஜக கட்சிகளைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் சிறு சிறு இயக்கங்கள் சிறு சிறு கட்சிகள் உள்ளன அவர்களைத் தேடிப் பிடித்து அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் திமுக, பாஜக கட்சிகளைக் கடுமையாக எதிர்க்கும் அரசியல் கட்சியின் தலைவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் இப்படி செய்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் இல்லையென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் இதோடு அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிபோல ஆகிவிடும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.