பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் மாபியாக்கள் பற்றி நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம் இதோடு இல்லாமல் சில வழக்குகளையும் தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் முன்னாள் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அவர்களின் வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எவ்வளவு ஆண்டுகள் தான் நிலுவையில் இருக்கும் திமுக அரசு இருக்கும் வரை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்லாவரம் சார்பதிவாளர் தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்பிரமணியம் மற்றும் சேலம் மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் ரவீந்திரநாத் போன்றவர்களை வீழ்த்தினோம். இப்போது இந்த வரிசையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன் இவர் சென்னையில் பணிபுரியும்போது என்னென்ன மோசடியில் செய்தார் என்பதை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் முதல் பாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராக இருந்தபோது இவர் செய்த 420 வேலையைச் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
இப்போது இரண்டாவது பாகமாகப் பார்ப்போம் 2019-21 ஆகிய ஆண்டுகளில் பாலசுப்ரமணியம் சைதாப்பேட்டை நம்பர் இரண்டு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தார், அப்போது ஒரு மிகப்பெரிய சம்பவம் நடைபெற்றது அதாவது தன்னை நேர்மையானவராகக் காட்டிக் கொள்வதற்காக ஒரு வேலை செய்தார் என்ன வேலை என்று விரிவாகப் பார்ப்போம்.
சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி இவர் சிறையிலிருந்து கொண்டு தனது சிஷ்யமார்களை ஒரு பத்திரம் பதிவு செய்ய நம்பர் 2. இணை சார்பதிவாளர் சைதாப்பேட்டை அலுவலகத்திற்கு அனுப்புகிறார். இந்தப் பத்திரத்தைப் பதிவு செய்யமாட்டேன் என்று சார்பதிவாளர் பாலசுப்பிரமணியம் திருப்பிக் கொடுக்கிறார், ஆனால் இதோடு இவர் நின்று இருக்கலாம் தேவை இல்லாமல் போலி பத்திரம் பதிவு செய்ய வற்புறுத்தினார்கள் என்று கூறி சிடி மணி சிஷ்யர்களை காவல்துறையில் பிடித்துக் கொடுத்தார் இதோடு நின்று இருக்கலாம் தேவை இல்லாமல் இதைப் பத்திரிகைகள் ஊடக ங்கள் வாயிலாக வெளிவர ஏற்பாடு செய்தார் அதேபோல் இந்தச் செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவர் ரொம்ப நல்லவர் என்று நம்பினார்கள். இதற்கிடையில் தனக்கு மருத்துவ செலவு பார்ப்பதற்கு பணம் இல்லை என்பதற்காகச் சிடி மணி இந்தப் பத்திரத்தைக் கொடுத்துப் பதிவு செய்யத் தனது சீஷ்யர்களை அனுப்பியுள்ளார். பத்திரம் பதிவு செய்ய முடியாதது மற்றும் தனது சிசியர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தது என்று கோபத்தில் உச்சிக்கே சென்றார் மணி அப்போது பாலசுப்பிரமணி அவர்களை ஒரு கட்டத்தில் போட்டுத் தள்ளுவதற்கு கூடத் தயாராகி விட்டார் பின்பு எப்படியோ பாலசுப்ரமணியம் ஏதோ செய்து அவரிடமிருந்து தப்பித்து விட்டார் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இவர்மீது புகார் உள்ளது காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் பணியில் இருக்கும்போது போலி பத்திரம் பதிவு செய்த தொடர்பாகப் புகார் உள்ளது இந்தப் புகார்மீது லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை துளி கூட நடவடிக்கை எடுக்கவில்லை இதிலிருந்து இவர் எப்படி தள்ளிப் போகிறார் இது குறித்தும் புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்ய வேண்டும்.
தொடரும்….
