திமுக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தனலட்சுமி சீனிவாசனை ஒன்றும் செய்ய முடியாது!

சமீபத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்ட சித்தார்த் மருத்துவமனை திருச்சி தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஒரு தனியார் மருத்துவமனை புகார்கள் எழுந்த நிலையில் இந்த மோசடிகுறித்து தமிழக அரசுக் குழு ஒன்றை அவசரமாக நியமனம் செய்தது இதுகுறித்து நமது இதலில் முதல் பாகத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இப்போது கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்கச் சிறப்புக் குழு ஒன்றை நியமித்தது உயர் நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.
தமிழக அரசுமீதும் தமிழக அரசு நியமனம் செய்த குழுமீதும் நம்பிக்கை இல்லாததால் நீதிபதிகள்   அதிருப்தி காரணமாக இந்தக் குழுவை நியமனம் செய்துள்ளது.
கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குக் களை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.  இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்ற கிளை நேரடியாகக் கண்காணிக்கும் என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் செப்., 24க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களைப் புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாகச் சிறு நீரகத்தை தானம் பெற்றனர். இதற்காகப் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. தொழிலாளர்களை, 5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு சிறு நீரகங்களை விற்க வற்புறுத்தி உள்ளனர்.
திருச்சி, சித்தார் மருத்துவமனை பெரம்பலுரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவமனை என்பதால் (திமுக சட்டமன்ற உறுப்பினர் மணச்சநல்லூர் கதிரவன்), தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கைச் சி.பி.ஐ., க்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு தனது மனைவி குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘சட்ட விரோதமாகச் சிறுநீரகங்கள் அகற்றியதை உறுதி செய்யப்பட்டது. இதற்காகப் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதும் தெரிந்தது.இரு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டன’ என, தெரிவித்தது.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘முறைகேடுகள் நடந்தது அறிக்கைமூலம் உறுதி செய்யப்பட்டும், ஏன் இன்னும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குத் தமிழக அரசு வழக்கறிஞர் பதில் சொல்ல முடியாமல் விழி மூடி முழுங்கி நின்றார் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோத கிட்னி மோசடி.சிறுநீரக விற்பனை நடந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டது.
சிறுநீரகத்தைத் தானமாக வழங்க ஒருவருக்கு புரோக்கர் மூலம் பணம் கொடுத்தது தெரியவந்தது. ஸ்கேன் பரிசோதனையில் சிறுநீரகம் அகற்றப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பான ஆவணங்களைச் சரி பார்க்கத் திருச்சி, சித்தார் பெரம்பலுரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன்  இரு மருத்துவமனைகளுக்குக் குழு சென்றது. முதற்கட்ட விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் இரு மருத்துவமனைகளுக்கும் சஸ்பெண்ட் செய்யப் பட்டன.
போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதும், புரோக் கர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மனித உறுப்புகளின் வர்த்தகம் பெரிய அளவில், சட்டவிரோதமாக நடக்கிறது என்ற அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கவலை அளிக்கின்றன. அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழுவால் கண்டறியப்பட்ட இம்முறைகேடுகள், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1994 சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, பாரதிய நியாய சன்ஹிதா எனப்படும் பி.என்.எஸ்., கீழும் குற்றமாகும்.
அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உரிமங் கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். சம்பந்தப்பட்ட அதிகார சபை விசாரணை மேற்கொண்டு வருவதா கவும் தெரிவித்தார்.
எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படாததை இந்நீதிமன்றம் கண்டிக்கிறது. இவ்வழக்கில் முதன்மை மருத்துவ அதிகாரி, முறைகேடு தொடர்பாகப் பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. புகாரின் தன்மை காரணமாகவும், முறைகேடுகளைக் களையவும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, இந்நீதிமன்றம் கருதுகிறது.
ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில் உறுப்பு மாற்று சிகிச்சையில் அனுபவம் மிக்க இரு டாக்டர்கள் அடங்கிய எஸ்.ஐ.டி., குழு அமைக்க வேண்டும். அது சம்பந்தமாகத் தமிழக டி.ஜி.பி., மதியம், 3:00 மணிக்குக் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்பதால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது.  மாநில அரசின் இத்தகைய நிலைப்பாடு ஆச்சரியமளிப்பது மட்டுமல்லாமல், பெரிய அளவி லான மனித உறுப்பு கடத்தல் பிரச்சனையை விசாரிக்கும் பொறு ப்பை தட்டிக்கழிக்க அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது. இது ஏமாற்றம் அளிக்கிறது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை யின் கூடுதல் தலைமை பதிவா ளரின் முயற்சியால் நீதிமன்றமே விசாரணை குழுவை அமைக் கிறது. தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலை மையில், நீலகிரி எஸ்.பி., நிஷா, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன், கோவை எஸ்.பி., கார்த்திகேயன், மதுரை எஸ்.பி., அரவிந்த் நியமிக்கப்படுகின்றனர்.
தமிழக டி.ஜி.பி., அனைத்து உதவிகளையும் இக்குழுவிற்கு வழங்க வேண்டும். மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர், மருத்துவ தொழில்நுட்ப உள்ளீடுகளை இக்குழுவிற்கு வழங்க வேண்டும்.
எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு தமிழகம் முழுதும் உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகள்குறித்து இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேரடியாகக் கண்காணிக்கும். முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் செப்., 24க்குள் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவல் துறைகளை அதிகாரிகள் மட்டும் என்ன சிபிஐ அதிகாரிகளா இவர்கள் திமுகவின் அதிகாரிகள் தான் அதனால் இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி மருத்துவமனை திமுகவினர் நடத்தும் மருத்துவமனையாகத் திமுக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்த மருத்துவ திருட்டு குறித்து ஒன்றுமே செய்ய முடியாது இதற்கு ஒரே வழி சிபிஐ மட்டும் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும். மேலும் இந்த இரண்டு மருத்துவமனையும் உடனடியாகச் சீல் வைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் சாட்சியை இவர்கள் கலைத்து விடுவார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்….