சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கித் தூய்மை பணியாளர் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் இதற்கு மாநகராட்சி 10 லட்சம் மற்றும் குப்பை ஒப்பந்தக்காரர்கள் 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் இறந்த பெண்மணி மாநகராட்சி பணியாளர் கிடை யாது ஒப்பந்தக்காரர் மூலம் பணியாற்றி வந்தார்.
மாநகராட்சி குப்பைகள் அள்ளும் பணியைத் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் மூலம் தாரைப் பார்த்து உள்ளது இந்த வேலைக்கு ஆண்கள் பல பெண்கள் என்று பணியாற்றி வருகிறார்கள் பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா வெறும் ரூபாய் 13500 மட்டுமே இதை வைத்து ஒரு குடும்பம் சென்னையில் வாழ்க்கை நடத்த முடியுமா இதுகுறித்து திராவிட மாடல் அரசாங்கம் சிந்தித்ததா?
இதற்கான திட்டத்தைத் தயார் செய்ததா இப்படி மக்களை ஏமாற்றி வருகிறது இந்தத் திராவிட மாடல். அரசும் அதன் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் மக்கள்தான் இதுக்கு பொறுப்பேற்க வேண்டும்
அடுத்ததாக இந்தக் கண்ணகி நகரில் 15,000 வீடுகள் உள்ளது அனைத்து வீடுகளும் குடிசை மாற்று வாரியம் இலவசமாகக் கொடுத்தது ஆனால் தற்போது மாத வாடகை வாங்குகிறார்கள்
இலவசமாகக் கொடுத்த வீட்டிற்கு எதற்கு வாடகை அது எதற்காக வாங்குகிறார்கள் என்பதும் தெரிய வில்லை.
இந்த 15,000 குடும்பமும் எங்கு இருந்தது என்றால் சென்னை ராஜா அண்ணா மலைபுரம் மயிலாப்பூர் அயனாவரம் போன்ற பல இடங்களில் வசித்து வந்த அப்பாவி மக்களை ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இந்த அப்பாவி மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அகதிகள்போலத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கி வைத்துள்ளனர்
இப்படி அடைத்து வைத்து இருந்தால் அவர்கள் வேலை வாய்ப்பிற்கு எங்கே செல்வார்கள் சென்னையில் அங்கங்கு பரவலாக இருந்த இவர்களை இப்படி ஒரே இடத்தில் அடைத்து வைப்பது சரியா? இதை இந்த அப்பாவி மக்கள் உணர வேண்டும்
இந்தப் பகுதியில் இந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது தூய்மையான குடிநீர் கிடையாது சுகாதாரம் சீர்கெட்டு நாறுகிறது சீரான மின்சாரம் கிடையாது அகதிகள் கூடத் தமிழ்நாட்டிற்கு வந்தால் நல்லா தான் இருப்பார்கள் ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை 15,000 குடும்பமும் தத்தளிக்கிறது அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிதான் தற்போது மரணம் அடைந்துள்ளார் ஒரு அறை மட்டுமே உள்ள இந்த வீட்டிற்கு 300 ரூபாய் வாடகை மாதா மாதம் வசூல் செய்கிறார்கள்
இத்தூய்மை பணியாளர் பெண் இறந்ததற்கு முழுக்க முழுக்க காரணம் மின்சார வாரியம் தான் மின்வாரிய அதிகாரிகள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் மின்சார வாரியம் தானே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் சம்பந்தமே இல்லாத மாநகராட்சி எதற்காக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் இந்த நிலை மாற வேண்டும்.
இது போன்று மக்களின் வாழ்வாதாரம் என்னதான் ஆகும் இவர்களெல்லாம் படித்த பட்டதாரிகள் கிடையாது படிக்காத அப்பாவி மக்கள் அன்றாடம் காட்சிகள் வீட்டு வேலைக்குச் செல்வது, பூக்கட்டி விற்பது பெயிண்ட் அடிப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்து இவர்கள் வாழ்க்கையை கழித்து வருகிறார்கள்
இவர்கள் அனைவரையும் இங்கு அகதிகள்போல் அடைத்து வைத்துவிட்டு தூய்மை பணியாளர் பணிக்கு ஆந்திராவிலிருந்து ஆட்களை அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
அப்படி என்றால் இங்குள்ள மக்கள் ஏமாளிகளா அவர்கள் தலையில் ஏன் இப்படி மிளகாய் அரைக்கிறீர்கள் இவர்களுக்கு யார் வேலை கொடுப்பது.
என் மக்கள்மீதும் தவறு உள்ளது அதை நான் ஒத்துக் கொள்கிறேன் ஏனென்றால் எலக்சன் வந்து விட்டாலே பிரியாணிக்கும், மது பாட்டில்களுக்கும் ஆசைப்பட்டு தங்களது ஓட்டை விற்று விடுகிறார்கள்
ஏனென்றால் அவர்களுக்கு இங்கு நடக்கும் சூழ்ச்சி அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது இந்நிலை மாற வேண்டும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்
நமது பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் ஐயா எஸ் பன்னீர்செல்வம் அவர்கள் மரணம் அடைந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரது கணவரையும் மகளையும் சந்தித்து ஆறுதல் கூறினார்
அவரது மகளிடம் நன்றாகப் படிக்க வேண்டும் மற்றும் உன் படிப்பிற்கு எந்த உதவி வேண்டுமானாலும் எங்களிடம் கேட்கலாம் நாங்கள் நிச்சயமாக அதைச் செய்து தருவோம் என்று கூறியுள்ளார்
அமைச்சர்கள் அவரது கணவரைச் சந்தித்து அவருக்கு உடனடியாகப் பணி வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் அதில் ஏதேனும் தாமதம் நேர்ந்தால் எங்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் நாங்கள் அதற்கும் உதவி செய்கிறோம்! என்றும் கூறினார்.
பெண்மணியின் கணவர் பெயிண்டராகப் பணி புரிந்தாராம் ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது பணி ஏதுமின்றி இருப் பதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
சோழிங்கநல்லூரிலிருந்து
நமது நிருபர் முரளிதரன்
