முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்த தியாகி கருணாநிதி
திருவள்ளூர் மாவட்டம் கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் நமது காவலர்கள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு யார் இந்தத் துணிச்சலை கொடுத்தது என்ன நடந்தது என்பதனை விரிவாகப் பார்ப்போம்:
ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் வட மாநில இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்து விடுகிறான் இதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மற்றும் இந்த மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் இந்த வட மாநில தொழிலாளர்கள்
இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறி காவல்துறையினர் மறியல் செய்யும் வட மாநில தொழிலாளர்களைக் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர் ஆனால் வடமாநில தொழிலாளர்கள் நீங்கள் யார் எங்களை மறியல் செய்யக் கூடாது என்று சொல்லி விரட்டி அடிப்பதற்கு என்று கற்களைக் கொண்டு போலீசாரை தாக்கினர்
இந்த வட மாநில தொழிலாளர்கள் செய்தது நியாயமா, தர்மமா என்று பார்த்தால் இந்த நியாயத்தையும் தர்மத்தையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான், எங்கே என்றால் 2006 புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டபோது வடமாநிலத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தினார் முதல் முதலாகத் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களால் கட்டப்பட்ட கட்டிடம் தலைமைச் செயலகமே.
இதற்குப் பிறகுதான் வடநாட்டிலிருந்து தொழிலாளர்கள் தமிழகத்திற்குள் நுழைவது அதிகரித்துள்ளது இதற்கெல்லாம் முன்னால் முதல்வர் கருணாநிதியே காரணம் தற்போதைய தமிழ்நாட்டின் நிலை என்னவென்றால் வடமாநில தொழிலாளர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு அணுவும் அசையாது எந்த வேலையும் நடக்காது இதற்குப் பின் யாரால் என்ன செய்ய முடியும் இப்போது கற்களைக் கொண்டு தாக்கும் அவர்கள் நாளைத் துப்பாக்கியால் சுடவும் செய்வார்கள் இல்லையென்றால் நாங்கள் மொத்தமாக ஊரை விட்டுச் செல்கிறோம் என்பார்கள் அப்படி அவர்கள் செல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டின் பல வேலைகளில் ஈடுபடுத்த வேலையாட்களின்றி தமிழகம் தத்தளிக்கும் நிலை ஏற்படும்.
இதற்கெல்லாம் என்ன தீர்வு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் மக்களே நன்றாகக் கேளுங்கள் சமீபத்தில் கூட வடமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை நடத்தி என்ன செய்யப் போகிறார்கள் இந்தத் திராவிட ஆட்சியாளர்கள் அவர்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை கொடுத்து இவர்களது கட்சிக்கு ஓட்டு போட வைக்கப் போகிறார்கள் இது ஒரு புறம் இருக்க நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் எங்குச் சென்றுவிட்டார்கள் எங்குப் பணிபுரிகிறார்கள் எங்கிருக்கிறார்கள் இது சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு ஏதேனும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளதா.
தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கிறார்கள் இதுபற்றி யாருக்கேனும் தெரியுமா இல்லை அதைப் பற்றித் திராவிட கட்சிகள் ஏதாவது வாய் திறந்து உள்ளதா.
வடமாநில தொழிலாளர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது யார்?
வடமாநில தொழிலாளர்கள் நேரடியாகத் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை மேன்பவர் ஏஜென்சிகள் மூலம் Agreement போடப்பட்டு ஏஜென் ட்களின் மூலமாகவே தமிழ்நாட்டில் வருகிறார்கள் இங்குள்ள தொழிற்சாலைகள் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துகிறார்கள் அங்குப் பணிபுரியும் அவர்களுக்குத் தனியார் நிறுவனம் நேரடியாக ஊதியம் செல்வதில்லை இந்த ஏஜென்ட்களுக்களின் நிறுவனங்களுக்கு இவர்களது ஊதியத்தை செலுத் துகிறார்கள் அவர்கள் அதிலிருந்து அவர்களுக்கான கமிஷங்களை எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் பணத்தையே வடமாநில தொழிலாளர்களுக்கு ஊதி யம் வழங்குகிறார்கள்.
சரி இந்த மேன் பவர் ஏஜென்சிகளை நடத்துபவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் அனைவருமே கழகக் குஞ்சுகள் தான்! இதிலிருந்து என்ன தெரிகிறது தொழிலாளர்களை அழைத்து வரும் இவர்கள் அவர்களது அக்ரீமெண்ட் முடிந்த பிறகு அத்தொழிலாளர்களைக் கொண்டு அவரவர் மாநிலங்களில் கொண்டு சேர்ப்பதில்லை தமிழ்நாட்டிலேயே விட்டுவிடுகிறார்கள் அவர்களும் இங்கேயே தங்கி கொண்டு வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு என அனைத்தையும் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாகவே மாறி விடுகிறான்.
இதையெல்லாம் தமிழக அரசு எப்போது திருத்தப் போகிறது கடைசியாக வந்த செய்தி காவல்துறையினர் மீது கல்லெறிந்த வழக்கில் 78 வட மாநில தொழிலாளர்கள்மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
