தேனி மாவட்டத்தில் அரங்கேறும் தொடர் கனி மவள கொள்ளையால் சொர்க்கபூமி என்று சொல்லப்படும் தேனி பாலைவனமாகும் தூரம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்வது எப்போது…?
பெரியகுளம் கோட்ட பகுதியில் ஆய்வு செய்து அபராதம் விதித்த 136 கோடி ரூபாய் எங்கே போனது யார் வீட்டில் மொய் எழுதினார்கள்?
50 கிலோ வெடிமருந்து, ஜெலட்டின் குச்சி அதன் குற்றவாளிகளின் எங்கே என்ன ஆனார்கள்? தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வள திருட்டானது சீனப்பெருஞ் சுவரைப் போலத் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா?
தேனி மாவட்டத்தில் அவ்வப்போது நடக்கும் திங்கள் மக்கள் குறை தீர் முகாம் விவசாயிகள் முகாம் உள்ளிட்ட முகாம்களுக்குத் தேனியில் பஞ்சமில்லை… ஆனால், கனிமவள கொள்ளைக்கு எல்லையே இல்லை… முகாம்மூலம் மக்கள் வரிப்பணத்தை நாசமாக்கி விட்டார்கள் அதிகாரிகள் இதற்குத் தீர்வே கிடையாதா?
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏ.வாடிப்பட்டியில் வத்தலகுண்டை சேர்ந்த பெரும்புள்ளிகள் உதவியுடன் இரண்டு அப்பாவி பெண்களின் வயலில் நிலத்தைச் சீர்படுத்துகிறோம் என்று கடந்த ஓராண்டாக மாவட்ட நிர்வாகத்தின் தலையில் மண்ணை வாரி இரைத்து, சுரங்கம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறைக்கு தெரிந்தும் தெரியாமலும் அங்கே குவிந்து கிடக்கும் கனிம வளத்தை டன் கணக்கினில் அள்ளிக் கோடிக்கணக்கான தொகைகளைச் சுருட்டி லீகலாக இல்லை. இல்லீகலாகச் சம்பாதித் தனர் என்றால் ஏற்பு டையது அல்ல கொள் ளையடித்தனர். இதற்குத் தீர்வு கிடையாதா…?
இந்த விடயம் (ம) சமூக விரோத செயல் கனிம வளம், புவியியல் சுரங்கம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாதா?
அப்பாவி பெண்கள் இருவர் தான் குற்றவாளிகளா? இது குள்ளநரித்தனம், கையாலாகாத செயல் இதையே இந்த அரசும் அதிகாரிகளும் மூடி மறைத்து வருகிறார்கள் இதுகுறித்து நீதிமன்றத்திற்கு தெரியாதா…?
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் டிஎஸ்பி நல்லு தலைமையில் தாசில்தார் மருது முன்னிலையில் ஏ.வாடிப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் குவாரி செயல்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து செயல்பட்டு வந்த குவாரிக்கு வெடிமருந்து சப்ளை செய்த அந்த முக்கிய புள்ளியை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை. இதுகுறித்து எந்த அதிகாரியும் வாய் திறக்க முடியாதா…?
சம்பந்தப்பட்ட இடத்தைப் புவியியல், சுரங்க துறை கனிம வள அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்யவில்லை அடிக்கடி ஆய்வுக்குச் சென்று வந்தால் இது மாதிரியான திருட்டு குவாரிகள் செயல்படுவதை தடுத்து நிறுத்தலாம். இவர்கள் கையூட்டு பெற்றது எவ்வளவு ரூபாய் என்று உளவுத்துறை அதிகாரிக்குத் தெரியாதா…?
மேலும், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குறிப்பாக அடக்கம்பட்டி மற்றும் ஆற்று ஓரத்தில் செயல்பட்டு வரும் திரி பேதி பில்டர்ஸ் எனக் கேரளா கருப்பு பண மாஃபியாக்களான கேரளாவை சேர்ந்த நபர்கள் தேனி மாவட்ட நிர்வாகத்தில் சிவப்பு கம்பள விரிப்பான் ஆசியோடு கனிம வளத் துறை அதிகாரி செயல்படுகிறார்கள் இது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குத் தெரியாதா…?
வீசித் தாலாட்டுப்பாட அனுமதி இல்லாமல் குவாரி நடத்தி நமது வளம் மிகு தேனியில் குவிந்து கிடக்கும் கனிம வளத்தை இலாவகமாக வெட்டிக் கேரளாவிற்கு கொண்டு சென்று கனிம வளத்தைப் பதுக்கும் சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வரும் படலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது பெரும் வேதனைக்குரியது. ஒருவேளை தேனியில் பணி புரியும் அதிகாரிகள் மலையாளிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாதா இல்லை பசுமை தீர்ப்பாயத்திற்கு தெரியாதா.?
இந்தப் பகுதியில் மேலும் இரண்டு கல் குவாரிகள் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் விவசாயம் அழிவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். விவசாயம் அழிந்தால் வெறும் பேப்பரை இவர்கள் உண்ணுவார்களா…?
மேலும் இதே அனுமதியில்லாத பாணியில் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையப்பட்டி கிராம பொதுமக்கள் தொடர்ந்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும் தேனி மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்ந்த கனிம வளம் மற்றும் சுரங்கத்துறையினர் ஆய்வு செய்யாததன் ரகசியம் என்ன இவர்களால் இப்பகுதியில் விவசாயிகள் அழிந்து வருகிறது விவசாய நிலங்களைப் பாழ் படுத்துகிறார்கள் எனப் பலமுறை புகார் தெரிவித்தும் புவியியல் சுரங்கத் துறை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாதது மர்மம் தான் என்ன.? இதேப் பாணியில் காமயகவுண்டன்பட்டி பகுதியில் அமைந்துள்ள கல் குவாரியில் பல கட்ட போராட்டங்கள் கொலைபழியான சம்பவங்கள் மற்றும் பல்வேறு மக்கள் கெடுதல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டும் மேற்கண்ட துறைகளைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாதது போல் கடந்து செல்கிறது…
இது ஒரு புறம் இருந்தாலும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சப் கலெக்டர் ரஜன் பீடன் அவர்கள் தன்னை ஒரு தேசிங்கு ராஜாவாக நினைத்து அதே பாவனையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் மேற்கண்ட குற்றச்சாட்டு வைத்த ஒரு குவாரிகளில் கூட ஆய்வு செய்ததே இல்லை. இவர் வடநாட்டுக்காரர் என்பதால் சூடான சுவையான ஸ்வீட் வகைகளைக் கொடுத்துச் சாந்தப்படுத்தி வருவதாக அதிகார வட்டத்தில் பரவலாய் பேசி வருகின்றனர்.இவரிடம் கொடுக்கப்படும் பொதுமக்கள் புகார் மனு நன்றாக ஸ்வீட் சாப்பிடுவார் போலத் தெரிகிறது புகார் மனுக்களும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் இவரது நடவடிக்கைகள் என்பது டயர் வண்டி, டிராக்டர் வண்டிகளிடம் மட்டுமே இவரது வீரத்தை காட்டும் இவர் கேரள கனிம வள கடத்தல் மாஃபியாக்கள் விடயத்தில் சாப்டான ஸ்வீட் சாப்பிடுவதைப் போல மௌனம் சாதித்து வருகிறார். யாரை அடித்தால் அவர்கள் திருப்பி அடிக்கமாட்டார்களோ உதாரணத்திற்கு ஐயர் பள்ளி ஆசிரியர்கள் வயதானவர்கள் என்று கூறுவார்கள் அதுபோல இவரது நடவடிக்கைகளும் அப்பாவிகளிடத்தில் மட்டும் வீரத்தை காட்டுவார்.
கனிமவள கொள் ளைக்கு துணை போகும் கனிம வள அதிகாரியும் துறை சார் அதிகாரிகளும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியரும் நியாயமாகச் செயல்பட்டால் அப்பாவி பொதுமக்கள் நடுத்தர தொழில் செய்பவர்கள் மற்றும் அரசுக்கு முறையான வரி செலுத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தொழில் செய்யலாம் என்பதற்கு இதுவே சான்றாகும். தேனி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் எத்தனை குவாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன எனத் தேனி மாவட்ட கனிம வளதுறை அதிகாரி கிருஷ்ணமோகன் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இவரோ பணம் சம்பாதிக்கும் ஒற்றை நோக்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ஒருவேளை இவரே மறைமுக ஏஜென்ட் ஆககூட இருக்கலாம் போலத் தெரிகிறது. இந்த ஆட்சியில் ஆற்று மணலும் களவாடப்படுகிறது. கனிம வளமும் சுரண்டப்படுகிறது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!
