“உங்களுடன் ஸ்டாலின்” ஏமாற்று வேலை

உங்களோடு ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது இது இதுகுறித்து விரிவான ஒரு அலசலைப் பார்ப்போம்: திமுக அரசை நாம் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறோம் இதில் குறையைச் சுட்டிக் காட்டி வருகிறோம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம்.

ஆனால் மோசமான மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் இதுதான் எங்கள் நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் நடத்தப்பட்ட முகாமில் ஒரு முதியவர் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அவரைக் காவல்துறை எஸ்ஐ ஒருவர் அடித்து வெளியில் துரத்துகிறார் இதுகுறித்து அந்தப் மாவட்ட காவல்துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளனர் இந்தப் பெரியவர் முகாமிற்கு சென்று அங்குள்ள கிராம நிர்வாக அலுவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகச் சொல்கிறார்கள்.

இது என்ன பொய் பித்தலாட்டம் அந்த முதியவருக்கு என்ன வயதாகிறது அவரால் எப்படி கிராம நிர்வாக அலுவலர் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்த முடியும் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் ஏன் முகாமிற்கு வருகிறார் மனு அளிப்பவர்களின் மனுக்களை விசாரிப்பதும் இல்லை அம்மானு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை முகாமிற்கு வந்தால் அடித்துத் துரத்துவது வருவாய்த்துறை அதிகாரிகளின் முழு நேர வேலை ஆகும் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு இடமாகப் பணி செய்வதில்லை முழுவதுமாக முகாம் கூட்டங்களிலேயே தங்கி விடுகிறார்கள் உயர் அதிகாரிகள் மீட்டிங் என்று ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்கள் பாவம் அப்பாவி மக்கள் நம் மனம் பூர்த்தி செய்யப்படவில்லையே என்று மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது இப்படியே மக்களை அலைய விடுகிறார்கள் இதற்கு எந்தத் தீர்வும் இல்லை முகாம் என்பதே பெரிய ஏமாற்று வேலை தான் அதாவது ஊராட்சிகளிலும் பணம் இருக்கிறது அது அனைத்தும் மக்களின் வரிப்பணமாகும் இந்தப் பணத்தை எப்படி காலி செய்வது இதிலிருந்து அதிகாரிகள் எப்படி சம்பாதிப்பது என்பதற்காகவே இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றன அதாவது முகாம் நடத்தும் இவர்கள் தாலுகா அலுவலகம் உள்ளது சமுதாயக்கூடம் உள்ளது விஏஓ அலுவலகம் உள்ளது உள்ளாட்சி அலுவலகம் உள்ளது இங்கெல்லாம் ஏன் இவர்கள் முகாம் நடத்தவில்லை.

வெளியில் சென்று மண்டபங்களை வாடகைக்கு எடுக்கின்றன இதற்கான வாடகை தொகை மட்டும் ஒரு லட்சம் ஆகிறது எதற்கு இந்தத் தண்ட செலவு இது மட்டுமில்லாமல் வருகிறவர்களுக்கு சாப்பாட்டு செலவு தண்ணீர் செலவு அது மட்டுமின்றி கட்டவுட்டுகள் பந்தல்கள் என மிகவும் ஆடம்பரமாக நடக்கிறது இந்த முகாம் இதற்குத் தனியாக ஒரு லட்சம் செலவாகும் மொத்தமாக 2 லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் தண்ணீராய் செலவழிக்கிறது. இதில் எவ்வளவு ஊழல் பணம் இருக்கும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இது போன்ற முகாம்கள் நடைபெறுகிறது இதில் மக்களின் வரிப்பணம் நாசமாய் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே இந்தப் பணம் இருந்தால் ஒரு ஊழியருக்குச் சம்பளம் கொடுக்கலாம் சாலைகள் அமைக்கலாம் குடிநீர் தொட்டிகள் அமைக்கலாம் மக்களுக்குச் சேவை செய்யலாம் அதை விட்டுவிட்டு இப்படி மக்கள் பணத்தை தண்டமாகச் செலவழித்து வருகிறார்கள் இவர்களிடம் தனித்தனியே அலுவலகங்கள் இருக்கும்போது எதற்காக இந்த ஆடம்பர முகாம் இதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்.

தேர்தல் வருவதற்கு முன் எந்த ஊராட்சிகளிலும் பணம் இருக்கக் கூடாது முழுவதும் திமுகவினர் வீட்டிற்கு சென்று விட வேண்டும் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார் மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

இது அனைத்தும் உங்கள் பணம் தேர்தல் முடிந்த பின்னர் புதிதாக ஒரு ஆட்சி அமைந்தால் புதிதாக ஆட்சிக்கு வருமா அரசு செலவுக்குப் பணம் இல்லாமல் வரிகளை ஏற்றி விடும். சென்ற நான்கு வருடத்திற்கு முன்னர் எவ்வளவு வீட்டு வரி கட்டினீர்கள் இந்த வருடம் எவ்வளோ வரி கட்டுகிறீர்கள், மின் கட்டணம் நாலு வருடத் திற்கு முன் எவ்வளவு கட்டி னீர்கள் இப்போது எவ்வளவு கட்டுகிறீர்கள் இவை அனைத் தையும் புதிதாக வரும் அரசு வரி உயர்வு செய்துவிடும் அதை அவர்கள் செய்து தான் ஆக வேண்டும் அப்போது தான் அவர்கள் ஆட்சி நடத்த முடியும் இதற்கு மக்கள் சரியான முடிவுரை எழுத வேண்டும்.