தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வளர்ச்சிக்கு உதவுவாரா

ஆளும் திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகள்மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காணப்படும் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டுப் பல நிகழ்ச்சிகளை முகாம்களாக நடத்திய போதும் பொதுமக்களின் பிரச்சனை தீர்ந்தபாட என்றால் தீராத பிரச்சினையாக இருந்து வருகின்றது பிரச்சனைகள் எப்படி தீரும்?

பிரச்சனைகளை உருவாக் கியவர்களே அதிகாரிகள் தானே? எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு சொத்து பிரச்சனைகளில் போலி சான்றிதழ், அதாவது அனுபவ சான்று, தடையில்லா சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள்மூலம் போலி கிரையங்கள், முறைகேடு ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் சொத்துப் பிரச்சனைகள் தீர்க்க முடியாத அளவிற்கு தலை விரித்து ஆடி வருகிறது
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மூலம் பொது மக்களின் பிரச்சனைகளை உடனடி தீர்வாகவும் | அல்லது 45 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகவும் கூறி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக அனைத்து துறை நிர்வாகமும் உழைப்பு காட்டி செயல்பட்டு வருகின்றனர்

அலுவலகத்தில் செயல்படாத அளவிற்கு முகாம் நடத்துகின்றோம் என்ற பெயரில் முடக்கத்தை ஏற்படுத்தி அரசு நிர்வாகம் முழுவதும் குறை தீர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்.

குறிப்பாகச் சொத்துப் பிரச்சனை. இலவசவீட்டு மனை பட்டா கேட்டு மனுக்கள், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்து மனுக்களாக வழங்கி வருகின்றனர்

அதில் குறிப்பாக இலவச வீட்டுமனை பட்டா பிரச்சனைகள் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் மனுக்களாகக் குவிந்து நிர்வாகம் ஸ்தம்பித்துப் போகும் அளவிற்கு புகார்கள் குவிகின்றது.

தர்மபுரி மாவட்டம் 1965 ஆம் ஆண்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு சுமார் 4497.77 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ளது இதில் இரண்டு நகராட்சிகள், 9 பேரூராட்சி வருவாய் கோட்டம் 2, வட்டம் 7, ஊராட்சி ஒன்றியம் 10, ஊராட்சிகள் 251 வருவாய் கிராமங்கள் 470 எனநிர்வாக ரீதியாகவும்

மக்கள் பிரதிநிதிகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 5, மக்களவைத் தொகுதி ஒன்று என இருந்தும் சுமார் 18 லட்சம் மக்கள் தீர்ந்தபாடா என்றால் தீராத அரசு அதிகாரிகளின் விளையாட்டுப் பிள்ளையாக மக்கள் இருந்து வருகின்றனர்
மாவட்டத்தில் அரசின் 15துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் எனப் பல்வேறு அதிகாரிகள் இருந்தும் மக்கள் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லாமல் தலை விரித்து ஆடி வருகிறது

தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர், பட்டியல் சமூக மக்களும், கொங்கு கவுண்டர் இனமக்கள் பெருமளவு வாழ்ந்து வருகின்றனர்
மாவட்டத்தில் 37 சதவீதம் வனப்பகுதியில் உள்ளதால் விவசாயம் என்பது குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது, இதனால் வன்னியர், பட்டியல் பழங்குடியினர் சமூகம், போயர், சமூகமக்கள் கூலி வேலைக்கு அண்டை மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்லும் நிலை நீடித்து வருகிறது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால் கூலி வேலைக்கு அண்டை மாநிலங்களுக்கு மக்கள் படையெடுக்கும் சூழலில் கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது

பொருளாதார ரீதியாக மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாக உருவாகும் சூழ்நிலை அறவே இல்லாமல் ஒரு தொழிற்சாலையோ? விவசாய வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கும் திட்டங்கள் இல்லாததால் மாவட்டம் முழுவதும் வறுமையின் பிடியில் வாழக்கூடிய மக்கள் அதிக அளவில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்

ஒரு பக்கம் கந்துவட்டி தொழில் தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை ஆசியுடன் ஆட்டிப்படைத்து வருகிறது, இவர்களுக்குக் காவல்துறை ஆசிர்வாதம் உள்ளதால் நடவடிக்கை எதுவும் இல்லாததால் பெருமளவு மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் மாவட்ட முழுவதும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது

சொந்த வீடு இல்லாத மக்களின் எண்ணிக்கை பெருமளவு ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது அரசு தரப்பில் வீட்டு மனை பட்டா விண்ணப்பங்களைப் பொதுமக்கள் வழங்கினாலும் ஆதிக்க சாதியினர் அழுத்தும் காரணமாகவும், அவர்களுக்குத் துணை போகும் அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாகவும், புதிதாக அரசு புறம்போக்கு நிலங்களைக் கூட எடுத்துப் பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை தர்மபுரி மாவட்டத்தின் நிலைத்து வருகிறது
குறிப்பாகப் பட்டியல் சமூக மக்கள் ஏற்கனவே காலனி பகுதிகளில் இருப்பதையே விரும்பாத ஆதிக்க சாதியினர், அரசின் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா நிலங்களைப் புறம்போக்கு நிலங்களில் வழங்கினால் அருகில் உள்ள தங்களின் நிலப்பகுதியில் மதிப்பு குறையும் என்பதால் உயர் சாதியினரின் ஆதிக்கம் காரணமாக மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் வருவாய் துறையினர் செயல்படாமல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வரும் மக்களின் மனுக்களைக் கிடப்பில் போட்டு நடவடிக்கை எடுக்காமல் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகக் காலம் தள்ளி வரும் நிலை நீடித்து வருகிறது மாவட்டத்தில் புதிதாகப் பட்டியலின மக்கள் குடியேற்றத்தைத் தடுப்பதில் அரசு துறையும் ஆதிக்க சாதியினரும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலமாக மாவட்ட முழுவதும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த முகாம்கள் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை தர்மபுரி மாவட்டத்தில் 176 முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவு விட்டுள்ளார்.

அதன்படி நகர் புறங்களில் அரசுத் துறை சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதியில் 15அரசுத்துறை சார்ந்த 46 சேவைகளும் நடத்தப்படுகிறது
இந்தமுகாம்களில் வரும் மனுக்கள்மீது சட்டத்திற்கு உட்பட்டு உடனடி தீர்வும் அல்லது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பலமுறை அறிக்கை வாயிலாக வெளியீட்டும் வருகின்றார்

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்

மனுக்கள் ஒரு முறை அல்ல இதுவரை பல முறை அல்லது பத்துக்கு மேற்பட்ட முறைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாலும் தீர்வு காணாத வகையில் அதிகாரிகளின் அலட்சியமாக உள்ளனர் அதிகாரிகளிடமிருந்து பதில் மட்டும் 45 நாட்களுக்குள் கிடைத்து விடுகிறது அதில் உங்கள் மனுக்கள்மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதில் மட்டுமே பொதுமக்களுக்கு வந்து சேர்கிறது எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வு காணும் நோக்கத்தோடு அரசு அதிகாரிகள் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டைப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகத் தெரிவித்து வருகின்றனர்

எனவே மாவட்ட ஆட்சியர் சதீஷ் முறையான விசாரணை மேற்கொண்டு தவறு செய்யும் அதிகாரிகள்மீதும் முறைகேடாக லஞ்சம் பெற்றுக் கொண்டு தடையில்லா சான்றிதழ், அனுபவ சான்று, பட்டா மாறுதல், பட்டா திருத்தம் போன்ற பிரச்சினைகளில் தவறு செய்த லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது

மேலும் பொதுமக்கள் தெரிவிக்கையில்

வருவாய் துறையினர் முழுக்க முழுக்க லஞ்சம் பெறும் நோக்கத்தோடு நிலப்பிரச்சினைகளில் தலையிட்டு அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்யாமல் களப்பணியாற்றுகிறோம் என்ற காரணத்தைக் காட்டி நில அளவீடு செய்தல் போன்ற பணிகளுக்குச் சென்று லஞ்சத்தில் திளைத்து வருவதால் பிரச்சனை தீர்க்க முடியாமல் உள்ளது எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்

தர்மபுரி மாவட்டத்தில் பட்டியல் சமூக மக்கள்பழங்குடியின மக்கள் பெருமளவு சிறிய 100 அடி 200 அடி சதுர அளவு கொண்ட வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர், குறிப்பாகக் கணவன் மனைவி வயது வந்த பிள்ளைகள் என அனைவரும் ஒரே அறையில் இடப்பற்றாக்குறை காரணமாகத் தூங்குவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள இரவு நேர நெருக்கம் காரணமாக பிள்ளைகள் கவனத்திற்கு செல்வதால் பெரும்பாலான சிறு பிள்ளைகள் சிறுவர் சிறுமியாக இருக்கும் போதே திருமணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் சிறுவர் சிறுமியர் காதல் வயப்படுவது, பாலியல் துன்புறுத்தலுக்கு உல்லாவதற்கு இந்த போதிய வீடு வசதி இல்லாதது முக்கிய காரணமாக இருந்து வருகிறது
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டத்தில் உள்ள வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டாவை வழங்குவதோடு இலவச வீடும் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் துடிப்பு மிக்கவராகவும், களப்பணிக்கு நேரடியாக செல்லக்கூடியவராகவும் இருப்பதால் மாவட்டத்தில் உள்ள இந்த பட்டியல் பழங்குடியின மக்களின் வீட்டுமனை பட்டா நிலப் பிரச்சனையில், ஆதிக்க சாதியினரின் தலையீடுகளை புறம் தள்ளிவிட்டு

அரசு நிலங்களை வீடு அற்ற ஏழை எளிய மக்களுக்கும் வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு வீடும் கட்டும் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து ஆக்க பூர்வமாக மாவட்ட வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஏழைகளின் பிரச்சனைகளை தீர்ப்பாரா? சாதனைக் குறியவராக மாவட்ட ஆட்சியர் சதீஷ் இருப்பாரா?
அல்லது வந்து போன மாவட்ட ஆட்சியர் என்ற பட்டியலில் மட்டும் இடம் பிடிப்பாரா?
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….