கலப்பு திருமணம் செய்யும் பெண்களை உஷார்…

மயிலாடுதுறையின் காதல், கொலை எச்சரிக்கை மணி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சமீபத்திய காதல் கொலை வழக்கு, கலப்பு திருமணத்தின் சிக்கல்களையும் சட்ட முரண்பாடுகளையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மாலினி, பத்தாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த ஜோடி. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைத்திருந்த இவர்கள், சமூகக் கோட்டுகளை கடந்து நேசித்ததற்காக மரண வாசலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மாலினியின் தாய் விஜயா, கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர். ஆனால், தனது மகளின் காதலை ஏற்க மறுத்தார். இதனால் ஏற்பட்ட குடும்ப மோதலின் உச்சக்கட்டமாக, மாலினியின் சகோதரர்கள் வைரமுத்துவை செப்டம்பர் 15 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. கொலைக்காகச் சகோதரர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கே ஒரு கேள்வி எழுகிறது ஒரே கருப்பையில் பிறந்த பிள்ளைகள் ஒரே சமூகத்தில் பங்குபெறாமல், சட்டத்தின் பார்வையில் இரு சாதிகளாகப் பிரிக் கப்படுவது நியாயமா? கடந்த காலத்தில் கலப்பு திருமணம் செய்து புரட்சி செய்த பெண், இன்னும் “மாற்றுச் சாதி” என்று அடையாளப்படுத்தப்படுவது சாதி ஒழியாததற்கான சாட்சியா?

இந்த வழக்கின் பின்னணி, கலப்பு திருமணத்தை “சாதி ஒழிப்பின் தீர்வு” எனப் பிரசாரம் செய்த கருத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. சட்டம் ஆசீர்வாதமா? ஆயுதமா? வன்கொடுமை தடுப்பு சட்டம் (SC/ST ACT) சமூக பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்டாலும், சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன.இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளிப்பவர்களுக்கு அரசு ரூ.1.50 லட்சம் நிதி வழங்குகிறது. சிலர் இதை ‘வியாபாரமாக’ பயன்படுத்துவதாகவும், கட்டப்பஞ்சாயத்து வழியாகப் பணம் பறிக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

பெண்கள் சிக்கிக்கொள்ளும் வலையம்

கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண்களுக்குப் பல பிரச்சனைகள் காத்திருக்கின்றன என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புகுந்த வீட்டின் அழுத்தம் மாமனார், மாமியார், மாமியார் குடும்ப உறவுகள் ஆகியோருடன் ஒத்துழைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி வருகிறது பிரிவினை ஏற்பட்டால், அதே சட்டம் திரும்பப் பெண்ணையே தாக்கும் அபாயம். அதாவது வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரிக்கை படுகிறது. கலப்பு திருமணம் செய்யும் பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் திருமணம் செய்யும்போது சாதி குழப்பம் காரணமாகப் புதிய சிக்கல்கள். உருவாகி விஜயா போல் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர் மயிலாடுதுறையில் நடந்த இந்தச் சம்பவம், பெண்களுக்கு “கலப்பு திருமணம்= சுதந்திரம்” என்ற எண்ணம் நிஜ வாழ்வில் எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவூட்டுகிறது.

முடிவுரை “சாதி ஒழியும்” என்ற கனவுடன் நடந்த கலப்பு திருமணங்களே, இன்னும் சாதி சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருப்பது பரிதாபம். ஒரு பெரியார் இல்லாமல், ஒரு லட்சம் பெரியார் வந்தாலும் சாதியை அழிக்க முடியாது என்பதற்கு மயிலாடுதுறை சம்பவமே உயிர்ப்பிரதியாகியுள்ளது. கலப்பு திருமணம் செய்யும் பெண்கள் கட்டாயம் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக் கப்படுகிறது.

மயிலாடுதுறையிலிருந்து
நமது சிறப்புச் செய்தியாளர்