தேனி அருகே பல கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை செல்வி கைதாவாரா?

தேனி சின்னமனூர் அருகே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். சக ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் தற்போது சுமார் 2 கோடி அளவில் கடன் பெற்று நிதி மோசடி! கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்ற ஆணவத்தில் வலம் வரும் அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி. செல்விக்கு ஒத்து ஊதும் பள்ளிக்கல்வித்துறை…

தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரிகவுண்டன்பட்டி அருகே உள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சின்ராம்பட்டியை சேர்ந்த திருமதி. செல்வி.
இந்த ஆசிரியை நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் சொந்த வீடு கார் வைத்துள்ளேன் எனும் அதிகார ஆணவத்தோடு வலம் வந்து தனது நெருக்கமான நட்பு வட்டாரத்திலும், ஆசிரியர் வட்டாரங்களிலும், ஓய்வு பெற்ற ஆசிரியர் வட்டாரங்களிலும் குறைந்த வட்டி தருவதாகவும், கைமாற்று கொடுப்பதாகவும் கூறி கடந்த 05 வருடங்களுக்கு முன்பே சுமார் 1.50 கோடி தற்போதைய மதிப்பு சுமார் 2 கோடி அளவில் பல பேரிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்யும் படலத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி செல்வி அவர்களிடம் பணத்தை கொடுத்தவர்கள் என்று கூறினால் அது ஏற்புடையது அல்ல… பணத்தை இழந்த ஏமாந்தவர்கள் என்பதே சரியான பொருள்.

இந்த அரசுப் பள்ளி ஆசிரியை இடம், பணத்தை கொடுத்து இழந்து ஏமாந்தவர்கள் வட்டார மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை தரப்பிடம் பல நூறு மனுக்கள் கொடுத்தும் மனுக்களை எல்லாம் ஆசிரியர் சின்ராம் பட்டியைச் சேர்ந்த திருமதி செல்வி அவர்களைச் சமாதானம் செய்து இன்றளவும் பள்ளிக்கல்வித்துறையில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராகக் கோலோச்சி வருகிறார் என்பது இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேலும், இந்த அரசுப் பள்ளி ஆசிரியை அவர்களிடம் பணத்தை பறிகொடுத்த நபர்கள் தாங்கள் கொடுத்து, இழந்த பணத்தை திருப்பிக் கேட்கும்போது திருப்பிக் கொடுக்க மறுத்து வருகிறார்.

சரி பணத்தை கொடுக்க மறுத்து வருகிறாரெனப் பள்ளிக்கல்வித்துறையிடம் மனு அளித்தாலாவது தீர்வு கிடைக்கும் எனக் கொடுக்கும் அந்த மனுக்களும் தீபாவளி சமயம் அடை மழை பொழிந்தது போலப் புஸ்வானமாகி படுத்து உறங்குகிறது.
சரி இதே நிலை நீடித்தால் என்ன செய்வது எனப் பணத்தை இழந்தவர்கள் வழக்காடு மன்றத்தை நாடும்போது இதைச் சரியாகக் கணித்து எதிர்பார்த்த இந்த ஆசிரியை வழக்கு வழக்காடு மன்றம் வாய்தா எனப் பல வருடங்கள் இழுத்தடித்து தான் எண்ணியதை நினைத்தது நடந்தது எனப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சாதித்தும் வருகிறார்.
இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவரின் பட்டியல் 30-ஐ தாண்டுமாம். இவருக்குக் கடன் கொடுத்துப் பல பேரிடம் கடனாகச் சுமார் 25 இலட்சம் வரை வாங்கி கொடுத்த அப்பகுதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட இந்த விடயத்தில் இந்த ஆசிரியரின் பண பலம் உதவியுடன் சின்னமனூர் காவல் துறை தயவுடன் தற்கொலையே நடக்கவில்லையென வழக்குப் பதிவை இழுத்து மூடிவிட்டார்கள். காவல்நிலையத்தை போலப் பள்ளிக் கல்வித்துறையிலும் இவர் பணத்தால் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார் அதற்குப் பள்ளிக் கல்வித் துறையும் உடந்தை.

இது ஒருபுறம் இருக்க இவர் கடந்து வந்த வழக்கு விவரத்தைச் சக பத்திரிக்கையாளர் ஒருவர் இவரது போட்டோவை வைத்து வெளியிட்டு இருக்கிறார் அவரை மிரட்டும் விதமாக இந்த ஆசிரியரின் வழக்கறிஞர் மூலமாக வழக்கு நிலவையில் இருக்கும்போது பத்திரிக்கையில் செய்தி எப்படி வெளியிடலாம் உங்கள்மீது அவதூறு வழக்கு தொடக்கப் போகிறோம் என மிரட்டல் விடுத்தார்.

இந்த உருட்டுகளுக்கெல்லாம் அடிபணியாத நேர்மைக்கு சொந்தக்காரரான அந்தப் பத்திரிகையாளர் ஐயா, சாமி நீங்கள் என்ன வழக்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளுங்கள் நான் வழக்காடு மன்றத்தில் சந்தித்துக் கொள்கிறேன் என உறுதியுடன் தெரிவித்தார். இந்த ஆசிரியர் திருமதி.செல்வி மீது தேனி மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்ந்த மாவட்ட பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்குமா? மாறாக, வேடிக்கை மட்டுமே பார்க்குமா? (இந்தப் பதிவை இனியும் தொடரும்) என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!