PART-3 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை வில்வாய்ஸ் இதழின் எழுச்சி: மக்கள் பாராட்டு

தேனி மாவட்டம் கடந்த நான்கரை ஆண்டு களாகக் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை மற்றும் முறையற்ற குவாரி செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள், இயற்கை நல ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரபல நாளிதழ்களான தினமலர், தினத்தந்தி ஆகியவை நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் மௌனமாய் இருந்தது அனைவரும் கவனித்த உண்மை. ஆனால், வில்வாய்ஸ் மாத இதழ் குழுமம் தன்னுடைய தாராளமான மக்கள் நலப் பத்திரிகை பணியால், கனிமவள கொள்ளைகுறித்த கடுமையான தகவல்களை வெளிச்சம் போட்டு, மக்களிடையே விழிப்புணர்வை தூண்டியது. இதனால் பல துறைகள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் பணி சீர்திருத்தம் செய்யும் நிலையில் தள்ளப்பட்டுள்ளன.
10 குவாரிகளுக்கு ரூ. 19.56 கோடி அபராதம்  இன்னும் பல கேள்விகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் சப் கலெக்டராகப் பொறுப்பேற்ற திரு. ரஜத் பீடன் அவர்கள் சுமார் 10 மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்.
முதல் நான்கு மாதங்கள் ஆய்வில்லா நிலையில் அமைதியாக இருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு, மாவட்டத்தில் செயல்பட்ட 10 குவாரிகளில் கனிமவள சுரங்க விதிமுறைகள் மீறல் நடந்தது என்பதைக் கண்டறிந் துள்ளார்.
அதன்படி:
ஆண்டிபட்டி தாலுகா வில் 6 குவாரிகள் பெரிய குளம் தாலுகாவில் 3 குவாரிகள் தேனி தாலுகாவில்  1 குவாரி மொத்தம் 10 குவாரிகளுக்கு 19 கோடியே 56 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைத் தினமலர் மற்றும் தினத்தந்தி தங்களின் பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டுள்ளன. ஆனால், கேள்விகள் இன்னும் பதில் இல்லாமல் உள்ளன: எந்தெந்த குவாரிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது?
அபராத தொகைகள் முழுமையாக வசூலிக்கப்பட்டதா?
வசூலிக்கப்பட்ட தொகை அரசின் கணக்கில் வரவு சேர்க்கப்பட்டதா?
இந்த முக்கியமான விவரங்களைத் தினமலர் மற்றும் தினத்தந்தி தெளிவாக வெளியிடாமல் இருப்பது, வாசகர்களிடையே பெரும் சந்தேகத்தையும் “வெளியிட முடியாதா? வெளியிட விரும்பவில்லையா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 138 கோடி ரூபாய் அபராதம் தொடர்பான நிலைமையும் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்தத் தொகை எங்குச் செல்கிறது? எவ்வளவு வசூலிக்கப்பட்டது? யார் பொறுப்பு? – இவை அனைத்தும் பொதுமக்கள் பதில் கேட்கும் கேள்விகளாக மாறியுள்ளன.
பத்திரிகைகளின் பங்கு  கேள்விக்குறி
மாவட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள், தினமலர் மற்றும் தினத்தந்தி தங்களது பொதுநலப் பத்திரிகை கடமை புறக்கணித்து, குடும்ப உறவுகள் அல்லது அரசியல் நெருக்கம் போன்ற காரணங்களால் சில செய்திகளைத் தணித்துக் காட்டுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
காவல்துறையின் பங்கு, அதிகாரிகளின் அலட்சியம், கனிமவள துறையின் சீர்கேடு போன்ற பல விஷயங்கள் மறைக்கப்பட்ட விதம் மக்கள் மத்தியில் அதிருப்தி கிளப்பியுள்ளது. “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் கண்ட யானைக்கு ஐந்து கால்” என்று செய்திகளைத் தனக்கேற்ற மாதிரி திரித்துக் காட்டுவது பத்திரிகை உலகின் அடிப்படை நெறிக்கு விரோதமானது எனும் கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது.
வில்வாய்ஸ் இதழின் துணிச்சல்
இந்த நிலைமையில் வில்வாய்ஸ் மாத இதழ் தான் முதலில் கனிமவள கொள்ளையின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி, உண்மையை வெளிப்படையாகக் கூறி, தினமலர் மற்றும் தினத்தந்தி போன்ற பிரபல ஊடகங்களையும் தட்டி எழுப்பியது வில்வாய்ஸின் பெரும் சாதனையாகும்.
மக்கள் நலனுக்காகப் பத்திரிகை வலிமையை ஆயுதமாக்கிய வில்வாய்ஸ் குழுமத்தின் பணியை இயற்கை நல ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், விழிப்புணர்வு செயற்பாட்டாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் நலனுக்கான உறுதி
வில்வாய்ஸ் குழுமம் வெளியிட்ட அறிக்கையில்,
“தேனி மாவட்டத்தில் தலைவிரிகோலமாய் நடை பெறும் கனிமவள கொள்ளை மற்றும் மணல் கொள்ளையை வேரோடு அழிக்கும்வரை எமது மக்கள் நல பணி நிற்காது. எமது பேனாவே எங்கள் ஆயுதம். திருடர்களைத் தடுக்கும் வரை, எவரையும் அஞ்சாமல் கேள்வி கேட்போம்”
என்று உறுதியளித்துள்ளது.
முடிவுரை
தேனி மாவட்ட மக்கள் இன்று கனிமவள கொள்ளை விவகாரம்குறித்து உண்மையை அறிய ஆவலுடன் உள்ளனர். அபராதத் தொகைகளின் நிலை, அதிகாரிகளின் பொறுப்புணர்வு, ஊடகங்களின் வெளிப்படைத்தன்மை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்குமா என்பது காலத்தினை சார்ந்தது. ஆனால், ஒரு விஷயம் தெளிவு வில்வாய்ஸ் இதழ் தொடங்கிய இந்த மக்கள் பணி, மாவட்ட நிர்வாகத்தையும், பிரபல ஊடகங்களையும் செயல்படத் தள்ளும் முக்கிய சக்தியாக மாறியுள்ளது.