சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புதுப்பேட்டை அஞ்சல் அருள்மிகு அரசமரத்து பிள்ளையார் கோவில் நிருவாகிகள் சார்பாகவும் ஆயிரம் வைசியர் நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு.மதிவதனன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் வருவாய் துறை மற்றும் நகராட்சி ஆணையர்க்கு எதிராகத் தாக்கல் செய்த ரிட் மனு:
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், புதுப்பேட்டையில் சர்வே எண்.541/59 இல் அமைந்துள்ள ஸ்ரீ அரச மரத்து பிள்ளையார் கோவிலில் 0.35 சென்ட் நிலத்தை அபகரிக நினைத்து “நந்தவன” புறம்போக்கு பிள்ளையார் கோவில் என்று வருவாய் துறை பதிவில் இருந்ததை அரசு புறம்போக்கு என ஆத்தூர் தாசில்தார் மற்றும் ஆத்தூர் நகராட்சி ஆணையர் மாற்றி அந்த இடத்தை விடியல் “கன்ஸ்ட்ரக்சன்’க்கு வாரச் சந்தை கட்டுவதற்கு (ஒப்பந்தம்)ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி செய்து வந்தனர் அதனை எதிர்த்து மனுதாரர் சார்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. நி.குமரேசன்.M.L., PhD., வழக்கு தாக்கல் செய்தார் W.P.NO.36227/2025, WMP.NO. 40493. மனு 24.09.2025 தேதி வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது மேற்படி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரம் வைசியர் சமூகத்திற்கு சொந்தமான கோவில் இடத்தில் கட்டுமானப் பணிகளைத் செய்து வந்த “விடியல்” கண்ஸ்ட்ரக்சன் அவர்களின் கட்டுமான பணி தொடருவதற்கு தடை விதித்து தடை உத்தரவு பிறப்பித்தபின்னர் மான்புமிகு நீதிமன்றம் எதிர் தரப்பினருக்கு 17.10.2025 தேதி கவுண்டர் அறிக்கை (Counter Statement/Affidavit) தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆயிரம் வைசியா சங்கத்தினரும் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது
